இந்த 3 விளக்குகள் ஏற்றினால் தீராத கடனும் நொடியில் தீரும்! விளக்கு ஏற்றும் எண்ணெயை இப்படி மட்டும் பயன்படுத்தி விடாதீர்கள்!

cash-agal-vilakku

எப்பேர்பட்ட பணக்காரனாக இருந்தாலும் அவர்களுக்கும் கடன் இருக்கும். கடன் என்பது பொதுவான பிரச்சினையாகும். கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சினை இருக்கும் பொழுது கடைசியாக நாம் நாடுவது இறைவனை தான். வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியே நொந்து போனவர்கள் எவ்வளவோ பேரை நாம் பார்த்திருப்போம். கடன் தீர இப்படி விளக்கேற்றி பாருங்கள்! கைமேல் பலன் தரக்கூடிய இந்த பரிகாரம் எப்படி செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இப்பதிவை படியுங்கள்.

kamatchi-vilakku

விளக்கு ஏற்ற உகந்த திசை ‘கிழக்கு’ திசையாகும். எனினும் வடக்கு பார்த்து, மேற்கு பார்த்தும் கூட விளக்கு ஏற்றலாம். விளக்கு ஏற்றக் கூடாத திசை ‘தெற்கு’ ஆகும். தெற்கு திசையை நோக்கி விளக்கு ஏற்றினால் வீட்டில் தரித்திரம் உண்டாகும். கடன் தீர மற்ற மூன்று திசைகளில் விளக்குகளை வைத்து ஏற்றும் போது கடன் தரக்கூடிய தோஷங்கள் விலகும்.

பொதுவாக கிழக்கு பார்த்து காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றும் பொழுது அதில் நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய் இவற்றை தவிர வேறு எந்தவொரு எண்ணெயையும் பயன்படுத்த தேவையில்லை. மேற்கு நோக்கி ஏற்றும் பொழுது இலுப்பை எண்ணெய் பயன்படுத்தலாம். மேற்கில் வருண பகவான், சனீஸ்வர பகவான், மகாலட்சுமி தேவி ஆகியோர் சஞ்சாரம் செய்வதால் அவர்களை நோக்கி ஏற்றப்படும் தீபத்திற்கு பலன் அதிகம். கெடு பலன்கள் குறையவும், கடன் தீர வேண்டியும் மேற்கு நோக்கி விளக்கு ஏற்றுவது முறையாகும்.

neideepam

வடக்கில் குபேரன் வாசம் செய்வதால் வடக்கு நோக்கி ஏற்றப்படும் விளக்கில் நெய் தவிர வேறு எதுவும் ஊற்றக் கூடாது. நெய் விளக்கு ஏற்ற முடியாதவர்கள் நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றலாம் தவறில்லை. மற்றபடி வடக்கில் வேறு எந்த எண்ணெய்களையும் உபயோகிப்பது முறை அல்ல. குபேரனுக்குரிய வடக்கு திசையில் நெய் விளக்கு ஏற்றுவது வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்க செய்யும்.

- Advertisement -

வெள்ளிக்கிழமையில் இந்த பரிகாரத்தை செய்ய தொடங்குங்கள். கிழக்கு நோக்கி காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றிக் கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி ஏற்றுங்கள். இன்னொருபுறம் வடக்கு நோக்கிய திசையில் குபேர விளக்கு, குத்து விளக்கு, அகல் விளக்கு என்று உங்களுக்கு இஷ்டமான விளக்குகளில் ஏதேனும் ஒன்றில் நெய்யூற்றி தீபம் ஏற்றுங்கள். மேற்கு நோக்கி ஏற்றும் தீபம் மண் அகல் விளக்காக மட்டுமே இருக்க வேண்டும். எப்போதும் விளக்கு ஏற்றும் எண்ணெயில் கலப்படம் கூடாது. எல்லா எண்ணெய்களும் கலந்து தீபம் ஏற்றினால் வீட்டில் எதிர்மறை சக்திகள் குடி கொள்ளும்.

agal vilakku

புதிய மண் அகல் விளக்கு ஒன்றில் இலுப்பை எண்ணெய் ஊற்றி அதில் நூல் திரி இட வேண்டும். கடன் தீர பிரார்த்தனை செய்யும் பொழுது நூல் திரி, எருக்கண் திரி, வாழை தண்டு திரி ஆகியவற்றை பயன்படுத்தலாம். வாழைத்தண்டு திரி கொண்டு தீபம் ஏற்றும் பொழுது மகாலட்சுமியின் அருளைப் பெறலாம். இப்படி மூன்று புறமும் 3 விளக்குகளை நூல் திரி கொண்டு தீபம் ஏற்றி மகாலட்சுமி மந்திரங்களை உச்சரித்து வர வேண்டும்.

gajalakshmi

இப்படி செய்யும் பொழுது மேற்கு புறம் ஏரியும் ஜோதியில் சனி பகவானுடைய தோஷங்கள் நீங்கும், மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். வடக்கு நோக்கி எரியும் தீபம் குபேரனுடைய அருளை கிடைக்க செய்யும். கிழக்கு நோக்கிய தீபத்திலிருந்து அனைத்து தேவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெறும். இந்நிலையில் நாம் வேண்டும் வேண்டுதல்கள் யாவும் பலிதமாகும் என்பது சாஸ்திர நம்பிக்கை. 100% கைமேல் பலன் அளிக்கக்கூடிய இந்த பரிகாரத்தை நாமும் செய்து பார்த்து பயனடையலாம்.