கடன் தொல்லை நீங்க 9 பௌர்ணமிகளில் குத்து விளக்கு பூஜை செய்வது எவ்வாறு தெரியுமா? தீராக் கடன் தீர்க்கும் சுலபமான பரிகாரம்!

cash-kuthu-vilakku-pournami
- Advertisement -

கடன் பிரச்சனைகள் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப திடீரென தலையில் வந்து அமர்ந்து கொள்ளும். ஒரு முறை கடன் பிரச்சனை தலையில் வந்து அமர்ந்து கொண்டால் அதை இறக்குவது என்பது முடியாத காரியம் ஆகிவிடும். கடன் வாங்காமலேயே ஒரு மனிதன் இருக்க முடியுமா? என்றாலும் முடிவதில்லை. இப்படி முடிவே இல்லாத கடன் பிரச்சனைகளுக்கு ரொம்பவே சுலபமான முறையில் முடிவு கட்டுவது எவ்வாறு? கடன் தீர குத்து விளக்கு பூஜை பவுர்ணமிகளில் எப்படி செய்வது? என்கிற வழிபாடு தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

கடன் தொல்லையை தீர்ப்பது எப்படி? பல்வேறு பரிகாரங்கள் கூறப்பட்டாலும், இந்த குத்து விளக்குக்கு பூஜை செய்யும் முறை என்பது ரொம்பவே பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. குத்து விளக்கில் மகாலட்சுமி அம்சம் இருப்பதாக ஐதீகம் உண்டு. எனவே மகா லட்சுமி தாயாருக்கு வழிபடும் ஒரு வழிபாடாகவே இந்த வழிபாடு கருதப்படுகிறது. இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்பவர்களுக்கு பணம் பல வழிகளிலும் பெருகக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

- Advertisement -

கடன் அடைக்க கூடிய வகையில் எப்படியாவது உங்களுக்கு வருமானம் பெருகும். கடன் அடைவதற்கு வழியே இல்லையா? என்று நினைக்கும் பொழுது ஏதாவது ஒரு அதிர்ஷ்டம் உங்களை வந்து சேரும். வருகின்ற வருமானம் எல்லாம் சாப்பிடுவதற்கே சரியாக போகும் நிலையில் கடனை எப்படி அடைப்பது? என்று யோசிப்பவர்களுக்கு சிறந்த பலன்களை கொடுக்கும் இந்த பரிகாரம் பவுர்ணமிகளில் செய்வது உசிதமானது.

முதல் பவுர்ணமியில் நீங்கள் இரண்டு நல்ல குத்து விளக்குகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதை பளிச்சென கழுவி சுத்தம் செய்து காய வைத்துக் கொள்ளுங்கள். குத்து விளக்கு ஐந்து முகம் கொண்டதாக இருக்க வேண்டும். பின்னர் முறையாக குத்து விளக்கிற்கு மஞ்சள் அல்லது சந்தனம் தடவி கொள்ளுங்கள். அதன் மீது அழகாக குங்குமம் வையுங்கள். இப்படியாக குத்து விளக்கை அலங்கரித்த பிறகு அதற்கு வாசனை மிகுந்த மலர் சூட வேண்டும்.

- Advertisement -

பூஜை அறையை சுத்தம் செய்து இந்த குத்து விளக்குகளை அங்கே வைத்து பதில் சுத்தமான நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டுக் கொள்ள வேண்டும். நெய் மற்றும் நல்லெண்ணெய் தவிர வேறு எந்த எண்ணெய்களையும் உபயோகப்படுத்தக் கூடாது. பின்னர் அதில் இரண்டு திரிகளை ஒன்றாக திரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் குலதெய்வத்திற்கு இஷ்டமான படையல்களை இப்போது படைக்க வேண்டும். அதற்கு ஒரு வாழை இலையை விரித்து அல்லது வெண்கலப் பாத்திரத்தில் கூட வைத்து படைக்கலாம். அவரவர் குல தெய்வத்திற்கு இஷ்டமான நைவேத்தியம் படைக்க வேண்டும். குலதெய்வம் தெரியாதவர்கள் மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமான சர்க்கரை பொங்கல் படைக்கலாம்.

பின்னர் எப்போதும் போல தூப, தீப, ஆரத்தி காண்பித்து மகாலட்சுமி மந்திரங்களை உச்சரித்து பின் எப்படியாவது கடன்கள் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தித்து கொள்ளுங்கள். உங்கள் பிரார்த்தனை முடிந்ததும், நீங்கள் நைவேத்தியத்தை குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும். பின்னர் அன்றைய நாளில் சந்திர தரிசனம் செய்து உங்களால் முடிந்த அளவிற்கு ஏழை-எளிய நபர்களுக்கு உணவு பொட்டலங்களை வாங்கி கொடுத்து அன்னதானம் செய்யுங்கள். இவ்வாறாக தொடர்ந்து ஒன்பது பவுர்ணமிகளில் செய்து வர தீராத எத்தகைய கடனும் நிச்சயம் முடிவுக்கு வரும்.

- Advertisement -