- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகோடி கடனும் காணாமல் போக சாம்பிராணி தூபத்தில் இதை சேர்த்தால் போதும். இதுவரை தீர்க்க முடியாமல்...

கோடி கடனும் காணாமல் போக சாம்பிராணி தூபத்தில் இதை சேர்த்தால் போதும். இதுவரை தீர்க்க முடியாமல் திணறிய கடனையும் விரைவில் அடைக்க கூடிய சக்தி வாய்ந்த தாந்த்ரீக பரிகாரம்.

- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் திரும்பும் திசை எல்லாம் ஒலிக்கும் இரண்டு வார்த்தைகள் பணம் கடன் இவைகள் தான். எல்லோரும் ஓடி ஓடி உழைப்பது என்னவோ பணம் சம்பாதிக்க தான். ஆனால் சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதி கடனை அடைக்கவே போய் விடுகிறது. கடன் என்றால் ஒருவரிடம் பணமாக வாங்கிய கடன் மட்டும் கிடையாது. பொருளாக வாங்கிய கடன், வீட்டுக் கடன், வாகனங்கள் வாங்கிய கடன், இவையெல்லாம் கூட கடன் தான். இப்படி எந்த வகையான கடன்களை அடைக்க நீங்கள் முயற்சி எடுத்தாலும் அது தோல்வியில் முடிகிறது என்றால், இந்த ஒரு சின்ன தாந்த்ரீக பரிகாரம் செய்யலாம் என்று ஆன்மீகம் சொல்கிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கடன் அடைய வேண்டுமென்றால் அதற்கு முதலில் பணவரவு அதிகரிக்க வேண்டும். பண வரவு அதிகரித்தால் கடன் அடைந்து விடுமா என்றால் அதுவும் முடியாது. அது எப்படி என்று கேட்கிறீர்களா? சில பேரிடம் வாங்கிய கடனை உங்களிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் அதை திருப்பிக் கொடுப்பதற்கான நேரம் காலம் அமையாது. இந்த பரிகாரத்தை செய்யும் போது உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். அப்படி வரும் பணம் உங்கள் கடனை அடைக்க பயன்படும். இது தான் இந்த பரிகாரத்திலேயே முக்கியமானது.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்ய நாள் கிழமை என்று எதையும் பார்க்க வேண்டியதில்லை. நீங்கள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்று எப்போது நினைக்கிறீர்களோ அன்றே உங்கள் கடனை தீர வழி பிறந்து விட்டது என்று அர்த்தம். இந்த பரிகாரத்திற்கு ஒரு அல்லிப்பூ அடுத்து கரும்பு சாறு வேண்டும். இந்த கரும்பு சாறில் இஞ்சி, எலுமிச்சை, எதுவும் கலக்காமல் வெறும் கரும்பு சாறு மட்டும் கடையில் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். இப்போது இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

முதலில் சாம்பிராணி தூபம் போடும் தூபக்காலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேங்காய் சிரட்டையை பற்ற வைத்து நெருப்பு கங்குகளை தயார் செய்து கொள்ளுங்கள். அதில் நீங்கள் வாங்கிய வைத்திருக்கும் சுத்தமான கரும்பு சாரை ஊற்ற வேண்டும். (கரும்பு சாறு கிடைக்காத பட்சத்தில் சுத்தமான தேனையும் இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்). கரும்பு சாறு ஊற்றும் போது அதிலிருந்து வரும் புகையில் இந்த அல்லி பூவை காட்ட வேண்டும்.

- Advertisement -

இப்படி செய்யும் போது அல்லி பூ வாடி விடும். அடுத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் வாடிய அல்லி பூவை போட்டு மூடாமல், உங்கள் பூஜை அறையில் அல்லது பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். பாட்டிலில் இருக்கும் இந்த பூவுக்கு தினமும் தீபாராதனை காட்ட வேண்டும். இதை தொடர்ந்து 48 நாட்கள் செய்ய வேண்டும். பெண்கள் மாதவிலக்கான நாட்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அந்த ஐந்து நாட்களை தவிர்த்து விட்டு மறுபடியும் தொடர்ந்து செய்யலாம். 48 நாட்கள் இந்த மலரை வைத்து பூஜை செய்த பிறகு 48வது நாள் இந்த அல்லி மலரை ஓடும் நீரில் விட்டு விடுங்கள்.

இந்த பரிகாரம் மிகவும் எளிமையான பரிகாரம் தான். ஆனால் 48 நாட்கள் கொஞ்சம் சிரத்தையாக செய்ய வேண்டும். இதை காலையில் எழுந்தவுடன் செய்து விட வேண்டும். இந்த பூவை வீட்டின் பூஜையறையில் வைத்தாலும் சரி, பணம் வைக்கும் இடத்தில் வைத்தாலும் சரி. இந்த மலரை வைத்து பூஜை செய்யும் போது பணவரவு ஆனது அதிகரிக்கும். பண வரவு இருந்தால் தானே நம்மால் கடனை அடைக்க முடியும்.

- Advertisement -

அது மட்டுமின்றி இந்த பரிகாரத்தின் மூலம் உங்களுக்கு பண வரவிற்கான யோகமும் கிடைக்கும். பணம் மேலும் மேலும் பெருகுவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இதுவரை நீங்கள் அடைக்க முடியாமல் திணறிய கடனை கூட அடைக்கும் வழியை தேடித் தர கூடிய அற்புதமான சக்தி வாய்ந்த பரிகாரம் தான் இந்த அல்லிப்பூ பரிகாரம்.

இதையும் படிக்கலாமே: தெரியாமல் கூட இந்த தெய்வங்களுக்கு இந்த பூவை சாற்றி வழிபடாதீர்கள் பலன் இருக்காது தெரிந்து கொள்ளுங்கள்!

கடனை அடைக்க எத்தனையோ பாடுபட்டு முடியாதவர்கள் இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்தால் கடன் அடைவதற்கான வழி நிச்சயம் பிறக்கும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து கடன் பணம் மேலும் பெருக நீங்கள் என்ன செய்ய வேண்டும்.

சற்று முன்