வாழ்க்கையில் கடன் தொல்லை நீங்கி, செல்வ செழிப்புடன் சகல ஐஸ்வரத்தையும் பெற இவரை இந்த முறையில் வழிபாடு செய்தாலே போதும். எதுவும் இல்லை என்று சொல்லாத பெரு வாழ்வு வாழ வழிபாடு

sivan vinayagar
- Advertisement -

நம் வாழ்க்கையின் லட்சியமே பணம் சம்பாதிப்பது என்று பல பேரும் நினைத்து அதை நோக்கியே ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். அப்படி சேர்க்கும் பணம் நம்மிடம் நிலைத்து இருக்கவும், கடன் பிரச்சினைகள் இருப்பின் அந்த பிரச்சனைகளில் இருந்து விலகவும், ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் எளிமையான வழிபாட்டு முறையை தான் பார்க்கப் போகிறோம்.

crystal-lingam3

செல்வத்திற்கு அதிபதியாக கருதப்படுபவர் குபேரர். குபேரர் ஒரு தீவிரமான சிவ பக்தர். சிவனை வணங்கி செல்வங்கள் அனைத்தையும் பெற்றார். மேலும் மகாலட்சுமி தாயாருக்கு ஐஸ்வர்ய லட்சுமி என்ற ஸ்தானத்தை வழங்கியவரும் சிவபெருமானே. அவ்வளவு சிறப்பு மிகுந்த சிவபெருமானை நாம் ஐஸ்வர்யேஸ்வரர் என்று அழைக்கிறோம்.

- Advertisement -

இந்த ஐஸ்வர்யேஸ்வரரை நாம் முறையாக வழிபடுவதன் மூலம் நமக்கும் அவர் செல்வங்களையும், ஐஸ்வர்யத்தையும் வாரி வழங்குவார் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இப்பொழுது அவரை முறையாக எவ்வாறு வழிபட வேண்டும் என்று பார்ப்போம்.

silver bowl sandal wood

ஐஸ்வர்யேஸ்வரர் வழிபாட்டு முறை:
இந்த வழிபாட்டை நாம் அமாவாசை, பௌர்ணமி, தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி போன்ற நாட்களில் தான் ஆரம்பிக்க வேண்டும். இத்துடன் இந்த வழிபாட்டை நாம் மேற்கொள்ளும் பொழுது அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த வழிபாட்டிற்கு நமக்கு ஐஸ்வர்யேஸ்வரரின் புகைப்படம் தேவை. மேலும் குபேரரின் புகைப்படமும் வேண்டும். குபேரரை வைத்து வழிபடும் பொழுது கண்டிப்பான முறையில் ஒரு சிறிய சிவலிங்கமாவது இருக்க வேண்டும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை ஆரம்பிக்கும் நாள் அன்று வீட்டை சுத்தம் செய்து, நாமும் சுத்தமாக இருந்து பிரம்ம முகூர்த்த வேளையில் ஐஸ்வர்யேஸ்வரர், குபேரர் புகைப்படங்களையும் சிவலிங்கத்தையும் பூஜை அறையில் வைக்க வேண்டும். முழு முதல் கடவுளான விநாயகர் நினைத்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும். அடுத்ததாக நம்முடைய குலதெய்வத்தையும் நாம் மனதார நினைக்க வேண்டும். முடிந்தால் குலதெய்வ கோவிலில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து வந்து சுவாமிக்கு முன்பாக வைக்கலாம்.

Vilvam

சுத்தமான சந்தன மரக்கட்டையை கடைகளில் இருந்து வாங்கி வந்து, அந்த சந்தனத்தை இழைத்துக் கொள்ள வேண்டும். சிறிது சந்தனத்தை எடுத்து நம் கைகளில் நன்றாக தடவிக் கொள்ள வேண்டும். பிறகு நம்முடைய மோதிர விரலால் சந்தனத்தை எடுத்து ஐஸ்வரியேஸ்வரரின் புகைப்படத்தில் அவருடைய பாதத்தில் வைக்க வேண்டும். அதற்கு குங்குமத்தையும் வைக்க வேண்டும். பிறகு மல்லிகை பூ அல்லது வில்வ இலை (இவை இரண்டும் கிடைத்தால் மிகவும் சிறப்பு) இவற்றை வைத்து அவருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது “ஓம் ஐஸ்வர்யேஸ்வராய நமஹ” என்று கூற வேண்டும்.

undiyal

இதே போல் நாம் தினமும் சந்தனத்தை இழைத்து சுவாமியின் புகைப்படத்தில் கீழிருந்து மேலாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொட்டு என்ற வீதம் வைத்து வழிபட வேண்டும். இந்த வழிபாடு முழுமையாக நிறைவடைவதற்குள் நம்முடைய பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். அதே போல் சுவாமியின் புகைப்படத்திற்கு முன்பு ஒரு மஞ்சள் நிற உண்டியலை வைக்க வேண்டும். பூஜை ஆரம்பித்த நாளில் இருந்து தினமும் அதில் நம்மால் இயன்ற அளவு குருதட்சணையாக சிறிய தொகையை போட வேண்டும்.

இந்த வழிபாடு முடிந்த பிறகு உண்டியலில் இருக்கும் காணிக்கைகளை ஏதாவது ஒரு சிவன் கோவில் உண்டியலில் சேர்த்து விட வேண்டும். மேலும் ஐஸ்வர்யேஸ்வரரின் மேல் வைத்திருந்த சந்தனம் அனைத்தையும் எடுத்து ஒரு வெள்ளி கிண்ணத்தில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். அந்த சந்தனத்தை நாம் தினமும் நெற்றியில் வைத்து வர நம்முடைய தடைகளும், தடங்கல்களும், துரதஷ்டங்களும் நீங்கி சகல சம்பத்துகளும் பெறுவோம். ஐஸ்வர்யத்தை வழங்க கூடிய ஐஸ்வரேஸ்வரரை நாம் தினமும் வழிபட்டு நம் வாழ்வில் நல்ல பல பொருளாதார மாற்றங்களை கண்டு மகிழ்ச்சி அடைவோம்.

- Advertisement -