தங்கள் வருமானத்தில் குடும்பத்தை நடத்த வேண்டும். தங்களுக்கு தேவையான செலவுகளை மட்டும் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் தங்கள் வருமானத்தில் அந்த கடனை அடைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். மேலும் தங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள். அந்த முயற்சிகள் வெற்றி அடைவதற்கும் கடனை விரைவில் அடைப்பதற்கும் செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
பொதுவாக பணம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களுக்கும் நமக்கு உறுதுணையாக இருக்கக் கூடியவர் தான் மகாலட்சுமி தாயார். மகாலட்சுமி தாயார் ஒரு இல்லத்தில் வாசம் செய்யும் பொழுது அந்த இல்லத்தில் எந்தவித குறைகளும் இருக்காது. குறைகள் இல்லாத பட்சத்தில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படாது. கடனை அடைப்பதற்கு என்று பல பரிகாரங்கள் இருக்கின்றன. அதேபோல் மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கும் பல பரிகாரங்கள் இருக்கின்றன. இரண்டிற்கும் சேர்த்தார் போல் ஒரு பரிகாரத்தை இப்பொழுது பார்ப்போம்.
இந்த பரிகாரத்திற்கு மகாலட்சுமி தாயார் வாசம் செய்யும் இலையான வெற்றிலை வேண்டும். மேலும் மகாலட்சுமி தாயார் பிறந்த கடலில் இருந்து உற்பத்தியாகும் கல் உப்பு வேண்டும். அடுத்ததாக மஞ்சள் நிற துணி வேண்டும். இந்த பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம். குறிப்பாக கடனை அடைப்பதற்காக நாம் முயற்சி செய்யும் அன்றைய நாள் இதை ஆரம்பிக்க வேண்டும்.
காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு அருகில் இருக்கும் கடைக்கு சென்று இரண்டு வெற்றிலைகளையும் கொட்டைப்பாக்கையும் வாங்கி வர வேண்டும். வெற்றிலைகளை நன்றாக கழுவி துடைத்துவிட்டு அதில் சிறிது கல் உப்பை வைக்க வேண்டும். அதற்கு மேல் கொட்டைப்பாக்கை வைத்து உப்பு சிந்தாத அளவிற்கு நன்றாக மடித்துக் கொள்ள வேண்டும். மடித்த இந்த வெற்றிலையை மஞ்சள் நிற துணியில் வைத்து மூட்டையாக கட்டி மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்து விட வேண்டும்.
பிறகு மகாலட்சுமி தாயாருக்கு தீபம் ஏற்றி வைத்து மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த மூட்டை ஒருநாள் முழுவதும் மகாலட்சுமி தாயாரின் பாதத்திலேயே இருக்க வேண்டும். மறுநாள் காலையில் மறுபடியும் இதே போல் வெற்றிலை கொட்டைப்பாக்கு வாங்கி வந்த பிறகு ஏற்கனவே நாம் கட்டி வைத்திருக்கும் மூட்டையை பிரித்து அதில் இருக்கும் கல்லுப்பை ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை பிடித்து நம் கைகளாலேயே கரைத்து விட வேண்டும். வெற்றிலை மற்றும் பாக்கை அருகில் இருக்கும் பசுவிற்கு கொடுக்கலாம் அல்லது நாமே சாப்பிடுவதாக இருந்தாலும் சாப்பிடலாம்.
புதிதாக வாங்கி வந்த வெற்றிலை வைத்து அதற்கு மேல் கல் உப்பு கொட்டைப்பாக்கு வைத்து அதை மடித்து மூட்டையாக கட்டி மறுபடியும் மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்து விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். உப்பு கரைத்த தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: காரியத்தடை நீங்க தீபம்.
இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது மகாலட்சுமி தாயாரின் பரிபூரணமான அருள் கிடைத்து நாம் கடனை அடைப்பதற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைந்து விரைவிலேயே நாம் கடனை அடைத்து விடுவோம்