காரியத்தடை நீங்க தீபம்.

vinayagar deepam
- Advertisement -

மனிதனாகப் பிறந்த அனைவருக்குமே ஆசை என்பது இருக்கத்தான் செய்யும். அந்த ஆசைகளை நிறைவேற்றுவதற்காக முயற்சிகளை மேற்கொள்வோம். நமக்கு நடக்க வேண்டிய நியாயமான விஷயங்களாக இருக்கும் பட்சத்தில் அவை நிறைவேறுவதற்காக பல முயற்சிகளை செய்யும்பொழுது முடியும் தருவாயில் ஏதேனும் தடங்கல்கள் வந்தால் அதைவிட வருத்தப்படக்கூடிய ஒன்றாக வேறு எதுவும் இருக்காது. அப்படி முடியும் தருவாயில் ஏற்படக்கூடிய தடங்கல்களை நீக்குவதற்கும் காரியத்தை வெற்றியடைய செய்வதற்கும் செய்யக்கூடிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

காரிய வெற்றி என்பது ஒரு காரியத்தை நாம் செய்ய வேண்டும் என்று நினைத்ததில் இருந்து செய்து முடித்து அதனால் பலன் பெறுவது வரை தொடரும். பலருக்கு ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்று நினைக்கும் போதே தடங்கல்கள் ஏற்படும். சிலருக்கு தொடங்கும் போது தடங்கல்கள் ஏற்படும். இன்னும் சிலருக்கோ பாதி நடந்த பிறகு தடங்கல்கள் ஏற்படும். இன்னும் சிலருக்கோ முடியும் தருவாயில் ஏதாவது ஒரு தடங்கல் ஏற்பட்டு அந்த காரியம் நின்றுவிடும். இப்படி பல விதங்களில் காரியத்தடைகள் ஏற்படுகின்றன.

- Advertisement -

எந்த காரியமாக இருந்தாலும் அது நியாயமான காரியமாக இருக்கும் பட்சத்தில் நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தருவாயில் தடங்கல்கள் ஏற்படும் பொழுது இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அப்படிப்பட்ட காரியம் தொடங்குவதற்கு முன்பே இந்த பரிகாரத்தை செய்தால் கண்டிப்பான முறையில் எந்தவித தடங்களும் இல்லாமல் காரிய வெற்றி ஏற்படும். சரி இந்த காரிய வெற்றிக்கு நமக்கு உதவக்கூடிய தெய்வம் என்று பார்த்தால் வேறு யாரும் அல்ல நம்முடைய முழுமுதற் கடவுளான விநாயகர் பெருமான் தான் திகழ்கிறார்.

எந்த ஒரு காரியத்தை நாம் செய்வதாக இருந்தாலும் செய்வதற்கு முன்பாக விநாயகப் பெருமானை வழிபட்டு விட்டு செய்தால் அந்த காரியம் வெற்றி அடையும் என்பது நம் அனைவருக்குமே தெரியும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது கண்டிப்பான முறையில் நம்முடைய நியாயமான காரியம் எந்தவித தடங்களும் இன்றி நல்ல விதமாக நிறைவடையும் என்றே கூறப்படுகிறது.

- Advertisement -

எந்த காரியத்தை செய்ய ஆரம்பிக்கிறோமோ அதாவது எடுத்துக்காட்டாக ஒரு திருமண பேச்சு நடைபெறுகிறது. நல்ல வரன் இருக்கிறது. பேச்சுவார்த்தை நடக்க ஆரம்பிக்கும் பொழுது சம்பந்தப்பட்டவர்கள் விநாயக பெருமானின் கோவிலுக்கு செல்ல வேண்டும். அங்கு ஒரு தேங்காயை வாங்கி இரண்டாக உடைத்து உள்ளிருக்கும் தண்ணீரை ஊற்றிவிட்டு சுத்தமான பசு நெய் ஊற்றி மஞ்சள் நிற திரியை போட்டு தீபம் ஏற்றி திருமணப் பேச்சுவார்த்தை தொடங்க போகிறோம் நல்லபடியாக இதே வரன் நிறைவடைந்து திருமணம் முடிய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு வரவேண்டும்.

பிறகு அனுதினமும் வீட்டில் பூஜை செய்யும் பொழுது விநாயகரை வழிபட்டால் போதும். வேறு எதுவும் செய்ய வேண்டியது இல்லை. எந்தவித குறையும் இல்லாமல் எந்தவித தடைகளும் இல்லாமல் நல்லபடியாக திருமணம் நடைபெறும். திருமணத்தை ஒரு உதாரணமாக தான் கூறுகிறோம். இதே போல் நமக்கு எந்த காரியம் நடைபெற வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த காரியத்தை செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பாகவே விநாயகப் பெருமானிடம் இந்த முறையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கண்டிப்பான முறையில் அந்த காரியம் வெற்றி அடையும்.

இதையும் படிக்கலாமே: மனபாரம் நீங்க பரிகாரம்

இந்த முறையில் தீபமேற்றி வழிபடும் பொழுது நம்முடைய நியாயமான நமக்கு நடக்க வேண்டிய காரியத்தை வெற்றிகரமாக நடைபெறுவதற்கு விநாயகப் பெருமான் அருள் புரிவார்.

- Advertisement -