கற்பூரத்தை எரித்தால் சாம்பல் கூட மிச்சம் இருக்காது. கற்பூரம் எரிந்து காற்றோடு காற்றாக எப்படி கரைந்து போகின்றதோ, அதேபோலத்தான் உங்களுடைய வாழ்க்கையில் ஒரு ரூபாய் கூட கடன் மிச்சம் இருக்காது. உங்கள் கடன் எல்லாம் சீக்கிரமாக காற்றோடு காற்றாக கலந்து காணாமலேயே போய்விடும்.
பைரவரை நினைத்து இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை இரவு உங்களுடைய வீட்டில் செய்தால். அப்படி என்ன அற்புதம் வாய்ந்த பரிகாரம். நிறைய செலவு செய்ய வேண்டுமா, ஏதேனும் பெரிய வேலை இருக்குமா, எதுவுமே கிடையாது.
கடன் தீர்க்கும் பைரவர் பரிகாரம்
இந்த பரிகாரத்திற்கு இரண்டே பொருள்தான் தேவை. கற்பூரமும், கிராம்பும். சில பேர் இதை லவங்கம் என்றும் சொல்லுவார்கள். பிரியாணிக்கு பயன்படுத்தக் கூடிய பொருள் தான். இது எல்லோர் வீட்டிலும் இருக்கும். இன்று இரவே பைரவரை நினைத்து இந்த வழிபாட்டை வீட்டில் செய்யுங்கள். உங்கள் கடன் சுமையெல்லாம் காணாமலேயே போய்விடும்.
இன்று இரவு வீட்டில் எல்லாம் தூங்க சென்ற பிறகு குடும்ப தலைவனோ குடும்பத்தலைவியோ இந்த பரிகாரத்தை செய்யலாம். வரவேற்பறையில் ஒரு மண் அகல் விளக்கை வைத்து விடுங்கள். அதில் ஒரு துண்டு கற்பூரத்தை ஏற்றிவிட்டு, 3 கிராம்பு எடுத்து அந்த கற்பூரத்தில் போட்டு எரிக்க வேண்டும். கிராம்பை நெருப்பில் போடும் போது பட் பட் என வெடிக்கும்.
ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். ‘இந்த உலகத்தையே காக்கும் பைரவரே, எங்களுடைய வீட்டையும் காத்தருள வேண்டும். வீட்டில் இருக்கும் கஷ்டங்களை எல்லாம், கடன் சுமையை எல்லாம் விரட்டி அடிக்க நீ தான் வழி காட்ட வேண்டும் உன்னை மொத்தமாக சரண் அடைந்து விட்டேன்’ என்று எறியக்கூடிய கற்பூரத்தின் முன்பு அமர்ந்து நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். அவ்வளவு தான் பரிகாரம். இந்த கற்பூரம் எரிந்து முடிய ஒரு 5 நிமிடம் எடுக்கும்.
பெரிய கற்பூரமாக வைத்தால் இரண்டு நிமிடம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக எடுக்கும். அவ்வளவுதான், இந்த ஏழு நிமிடமும் கற்பூரத்தின் முன்பு அமைந்து அமர்ந்து மனசை ஒருநிலைப்படுத்தி பைரவரை நீங்கள் வேண்டினால் உங்கள் கஷ்டங்களை எல்லாம் தீர்த்து வைப்பார் பைரவர். தூங்குவதற்கு முன்பு இந்த பரிகாரத்தை செய்கிறீர்கள். வேண்டுதலை முடித்துவிட்டு நீங்க தூங்க செல்லலாம் அவ்வளவுதான்.
எத்தனை வெள்ளிக்கிழமை இதுபோல செய்ய வேண்டும். உங்கள் கடன் சுமை எவ்வளவு பெரியதோ அத்தனை வெள்ளிக்கிழமை செய்ய வேண்டும். சில பேருக்கு மூன்று வெள்ளிக்கிழமைகள் செய்யும் போதே வாங்கிய கடனை திருப்பி அடைக்க நேரம் காலம் வந்துவிடும். சில பேர் வாங்கி வைத்திருக்கும் கடன், 11 வெள்ளிக்கிழமை செய்தாலும் அடைக்க முடியாத அளவுக்கு இருக்கும். பரிகாரத்தை செய்ய தொடங்கிய உடனேயே கடன் வாங்குவதை குறைத்துக் கொள்ளுங்கள்.
செலவை குறைத்துக் கொள்ளுங்கள். கடனை திருப்பி அடைக்க உங்களுக்கு என்னென்ன வழி எல்லாம் இருக்கிறதோ, அதை எல்லாம் தேடி செல்லுங்கள். உங்களோடு துணையாக நின்று அந்த பைரவர் உங்கள் கஷ்டங்களை போக்கி வீட்டில் செல்வ செழிப்பையும் கொண்டு வருவதற்கான அமைப்பை தருவார் என்பதில் ஒருதுளி அளவும் சந்தேகம் கிடையாது.
உங்களுடைய வீட்டின் அருகில் பைரவர் சன்னிதானம் இருக்கிறது என்றால் வெள்ளிக்கிழமை மாலை அந்த கோவிலுக்கு போங்க. அந்த பைரவர் சன்னிதானத்திற்கு முன்பு ஒரே ஒரு மண் அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணை ஊற்றி 2 கிராம்பு போட்டு பஞ்சு திரி போட்டு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு பைரவா எனக்கு செல்வ செழிப்பில் உயர்ந்த நிலையை கொடு பைரவா என்று கேட்டாலும் உங்களுக்கு இருக்கும் பணக்கஷ்டம் எல்லாம் தீரும்.
இதையும் படிக்கலாமே: ஐப்பசி மாதம் ரங்கநாதன் வழிபாடு
நிறைய பணம் வரத் தொடங்கிவிடும். பிறகு கடனையெல்லாம் அடைத்து விட்டு நிம்மதியாக வாழ தொடங்கி விடுவீர்கள். எளிமையான இந்த பரிகாரம் அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.