வீட்டில் 1 பவுர்ணமி இதை செய்தால் தீராத கடனும் நொடியில் தீரும்! குப்பையில் இருப்பவர்களும் கோபுரத்தில் ஏறலாம்.

lakshmi-vetrilai-deepam

சாதரணமாக பிரச்சனைகள் என்றால் அது ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனையாக தான் இருக்கும். எல்லோருக்கும் ஒரே பிரச்சனை இருப்பது இல்லை. ஆனால் கடன் பிரச்சினை என்பது அனைவருக்கும் இருக்கும் சாதாரணமான பொதுப் பிரச்சினையாக உள்ளது. எந்த பிரச்சனையையும் சமாளித்து விட முடிந்த நம்மால், என்ன செய்தாலும் இந்த கடன் பிரச்சினையை மட்டும் சமாளிக்க முடிவதில்லை. ஒரு முறை கடன் வாங்கி விட்டால் அவ்வளவுதான்! மீண்டும் மீண்டும் கடனை இந்த பிரபஞ்சம் நம்மை வாங்க வைக்கும். வாங்கிய கடனை எப்படியாவது அடைத்துவிட்டு, இனி கடனே வாங்கக் கூடாது என்று இருக்கும் உங்களுக்கு இந்த பரிஹாரம் சிறந்ததாக இருக்கும். அதை எப்படி செய்ய வேண்டும்? என்பதை இனி பார்ப்போம்.

pournami

பொதுவாக பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் இந்த பிரபஞ்சம் முழுவதும் அதிகமான தெய்வீக சக்தி இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. அமாவாசையை விட பவுர்ணமி தினங்களில் பரிகாரங்கள் செய்ய ஏதுவான நாட்களாக அமையும். எனவே பௌர்ணமி தினத்தில் இந்த பரிகாரத்தை செய்வது சிறந்த பலன்களை கொடுக்கும். அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமை வரும் பௌர்ணமி அன்று இந்த பரிகாரத்தை மேற்கொள்வது நல்லது.

ஏதாவது ஒரு பௌர்ணமி வெள்ளிக்கிழமை அன்று வீடு முழுவதும் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையும் சுத்தம் செய்து விட்டு எல்லா சுவாமி படங்களுக்கும், சந்தன குங்கும திலகமிட்டு கொள்ளுங்கள். வாசனை மிகுந்த மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். இந்த பரிகாரத்திற்கு நைவேத்தியம் வைப்பதற்கு சர்க்கரைப் பொங்கல் தயார் செய்து கொள்ளுங்கள்.

agal-vetrilai

மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய வெற்றிலை, மாதுளை, நெல்லிக்கனி, கற்கண்டு, பச்சை கற்பூரம், ஏலக்காய், துளசி இலைகள் இந்த பரிகாரத்திற்கு தேவைப்படும் பொருட்கள் ஆகும். இதனை முன்னரே தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பூஜையறையில் மகாலட்சுமியின் படத்தை வைத்து சிறப்பான அலங்காரம் செய்து கொள்ளுங்கள். பின்னர் மஞ்சள் கொண்டு பிள்ளையார் பிடித்து முதன்மையாக முன்னிறுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு சிறிய தீர்த்த கிண்ணத்தில் சுத்தமான தண்ணீரை நிரப்பி, அதில் 2 ஏலக்காய்கள், சிறிதளவு பச்சை கற்பூரம் சேர்த்து துளசி இலைகளை போட்டு வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய தாம்பூலத் தட்டில் வெற்றிலை வைத்து அதன் மேல் ஒரு சிறிய அகல் விளக்கு ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அகல் விளக்கில் நெய் ஊற்றி பஞ்சு திரி இட்டு கொள்ளுங்கள். அதில் வெற்றிலையின் காம்புகளை கிள்ளி போட்டுக் கொள்ளுங்கள். அந்த தாம்பூல தட்டில் நெல்லிக்கனி, கற்கண்டு மற்றும் மாதுளையும் வைத்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் உங்களிடம் இருக்கும் ஒரு தொகையை வையுங்கள். இவையெல்லாமே மகாலக்ஷ்மிக்கு உரிய பொருளாகும்.

dhanalakshmi

பின்னர் அந்த விளக்கை ஏற்றி வைத்து உதிரிப்பூக்கள் பயன்படுத்தி முதலில் பிள்ளையாருக்கு ‘ஓம் கம் கணபதியே நம’ என்கிற மந்திரத்தை உச்சரித்து அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். அதன் பின்னர் மகாலட்சுமி படத்திற்கு ‘ஓம் மகாலட்சுமியை நமஹ’ என்கிற மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்யுங்கள்.

money

பின் தூப, தீப, ஆரத்தி காண்பித்து உங்களுடைய கடன் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு பூஜையை நிறைவு செய்ததும், வீட்டில் இருக்கும் அனைவருக்கும் அந்த பூஜை தீர்த்தத்தையும், நைவேத்தியப் பிரசாதத்தையும் பகிர்ந்து கொடுங்கள். தாம்பூலத் தட்டில் வைத்துள்ள தொகையை கடன் வாங்கியவர்களிடம் கடன் தொகையை கொடுக்கும் பொழுது சேர்த்து கொடுத்து விடுங்கள். இப்படி செய்தால் போதும் உங்களுடைய கடன்கள் அனைத்தும் தீர்ந்து பொருளாதார ரீதியாக நல்ல ஒரு முன்னேற்றத்தை காணலாம். நம்பிக்கையுடன் செய்து நீங்களும் பயனடையுங்கள்.

இதையும் படிக்கலாமே
இந்த வேர் உங்களிடம் இருந்தால் பணத்திற்கு பஞ்சமே வராது! கையில் தாராளமாக பணம் புழங்கும் ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.