எப்பேர்ப்பட்ட கடனும் சீக்கிரம் தீர இந்த மந்திரத்தை 9 முறை உச்சரித்து 1 ரூபாய் நாணயத்தை இப்படி செய்தால் போதும்!

sevvai-cash

கடன் தொல்லை என்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான். ஏழையாக இருந்தாலும், பணக்காரனாக இருந்தாலும் எல்லோருக்கும் நிச்சயமாக அவரவர் தகுதிக்கு ஏற்ப கடன்களும் இருக்கும். இது அவரவர்களுடைய சுய ஜாதகத்தின் அடிப்படையில் வாங்கி வந்த வரமாக கருதப்படுகிறது. கடன் இல்லாத மனிதர் என்று ஒருவர் இருந்தால் அவர் உண்மையிலேயே புண்ணியம் செய்தவர் ஆகவே பார்க்கப்படுகிறார். கடன் தீர ஒரு ரூபாய் நாணயம் வைத்து எப்படி பரிகாரம் செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

kadan

ஜாதக ரீதியாக ஒரு மனிதனுடைய கிரக நிலைகள் சரியாக அமையாமல் செல்லும் பொழுது அவன் கடங்காரன் ஆகிறான். மீண்டும் நன்மை தரக்கூடிய தசை நடக்கும் பொழுது கடன் நிவர்த்தி ஆகிறது. அதுவரை அவன் படாதபாடு பட வேண்டியது இருக்கும். சாதாரணமாக வாங்க ஆரம்பிக்கும் சிறிய தொகையானது, மீண்டும் மீண்டும் கடன் வாங்கத் தூண்டுவதாக மாறிவிடுகிறது. கூடுமானவரை கடன் வாங்குவதை தவிர்ப்பது உத்தமம்.

வாங்கிய கடனுக்கு வட்டியே கட்டிய காலம் கழிந்தவர்கள் எவ்வளவோ பேர் இருக்கத் தான் செய்கிறார்கள். கடன் வாங்குவது மட்டுமல்ல, கொடுத்த கடன் திரும்ப வராமல் இருப்பதும் பிரச்சனையாக தான் உள்ளது. இந்த பிரச்சினைகளில் இருந்து நம்மை விடுவிக்கக் கூடியவர் செவ்வாய் பகவானாவார். அவருடைய துதியை துதிப்பதன் மூலம் வெகு விரைவாக வாங்கிய கடன்களை வட்டியோடு அடைத்து விட முடியும். அதே போல் கொடுத்த கடன்களும் வசூலாகவும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

sevvai

செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் பகவானை நினைந்து ஒரு ரூபாய் நாணயத்தை சிகப்பு துணியில் முடிந்து வைக்க வேண்டும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து கீழ்வரும் இந்த மந்திரத்தை 9 முறை உச்சரிக்க வேண்டும். பின்னர் இந்த முடிப்பை கையில் வைத்துக் கொண்டு உங்களுடைய கடன் விரைவாக தீர்ந்து விட வேண்டுமென்று வேண்டிக் கொள்ள வேண்டும். இதனை அப்படியே எடுத்துக் கொண்டு போய் நவகிரக சந்நிதிகள் இருக்கும் கோவிலில் அல்லது செவ்வாய் பகவான் வீற்றிருக்கும் புண்ணிய ஸ்தலத்தில் உள்ள உண்டியலில் சேர்த்து விட வேண்டும்.

- Advertisement -

செவ்வாய் பகவான் ஸ்துதி:
ஓம் அவந்தி தேசாதிபனே போற்றி!
ஓம் பாரத்வாஜ வம்சவா போற்றி!
ஓம் முருகனின் உருவே போற்றி!
ஓம் மேஷ ராசிப் பிரியனே போற்றி!
ஓம் விருச்சிகத்தில் இருப்பாய் போற்றி!

sevvai

ஓம் தென் முகத்தவனே போற்றி!
ஓம் தேவியின் பிரியனே போற்றி!
ஓம் பூமியின் புதல்வனே போற்றி!
ஓம் சகோதர காரகனே போற்றி!
ஓம் குஜனே போற்றி!

sevvai

ஓம் ரணகாரனே போற்றி!
ஓம் ருணரோக நிவாரணனே போற்றி!
ஓம் கடன் தீர்ப்பாய் போற்றி!
ஓம் மகீ சுதனே போற்றி!
ஓம் நவநாயக உருவே போற்றி!

money

இந்த பரிகாரத்தை செய்து முடித்த பின் குளிகை நேரத்தில் கடனில் ஒரு பகுதியை கடன் கொடுத்தவரிடம் கொண்டு போய் கொடுக்கும் பொழுது அந்த கடன் விரைவாக அடையும் என்பதும் ஐதீகம் உள்ளது. இந்த பரிகாரத்தை செய்து விட்டு குளிகை நேரத்தில் ஒரு சிறு தொகையை கடன் கொடுத்தவரிடம் கொண்டு போய் நீங்களே கொடுத்து விடுங்கள். நிச்சயமாக எந்த விதமான கடனும் விரைவாக தீர்ந்துவிடும்.

இதையும் படிக்கலாமே
குலதெய்வம் நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு வீடுதேடி வந்து உங்களையும், உங்கள் வீட்டையும் பாதுகாக்கும். இதற்கு ஒரே 1 எலுமிச்சை பழம் போதும்.

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.