- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் சுமை தீர மாரியம்மன் வழிபாடு

கடன் சுமை தீர மாரியம்மன் வழிபாடு

- Advertisement -

இன்றைய காலத்தில் நோயின் தாக்கம் எந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறதோ அதேபோல் கடனின் தாக்கமும் அதிகமாக இருக்கிறது. ஒரு குடும்பத்தில் யாராவது ஒருவருக்காவது நோய் இருக்கும். அதே போல் தான் ஒவ்வொரு குடும்பத்திலும் யாராவது ஒருவருக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் கடன் என்ற நோயும் இருக்கத்தான் செய்கிறது. இந்த கடனை திருப்பிக் கொடுத்து நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று பலரும் முயற்சி செய்தாலும் ஒரு சிலரால் மட்டுமே அதை செய்ய முடிகிறது. அப்படி செய்ய முடியாமல் கஷ்டப்படுபவர்கள் மாரியம்மனை எந்த முறையில் வழிபட்டால் அவர்களின் கடன் சுமை தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக ஒருவர் கடனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்றார் அவருடைய ஜாதகத்தில் சனி மற்றும் கேதுவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். அதேபோல் ஒருவருக்கு கடன் சுமை குறைய வேண்டும் என்றால் செவ்வாயுடன் குரு சேர்ந்து இருந்து நன்மையை தந்தால் மட்டும் தான் அவரால் கடன் சுமையை அடைக்க முடியும். ஆக மொத்தம் ஒருவருக்கு அவருடைய வாழ்க்கையில் கடன் என்ற பிரச்சனை ஏற்பட்டு விட்டால் அவருடைய ஜாதகத்தில் செவ்வாய், சனி மற்றும் கேதுவின் தாக்கத்தை நாம் கவனிக்க வேண்டும். இப்படி இந்த மூன்று கிரகங்களின் தாக்கத்தை குறைத்து கடன் சுமையை தீர்ப்பதற்கு செய்யக்கூடிய ஒரு வழிபாட்டை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை புற்றுவுடன் இருக்கக்கூடிய மாரியம்மன் ஆலயத்தில் தான் மேற்கொள்ள வேண்டும். அதாவது சென்னையில் இருக்கக்கூடிய திருவேற்காடு மாரியம்மன் கோவிலில் புற்றுக்கோவிலும் இருக்கும் மாரியம்மனும் இருப்பார்கள். அந்த மாதிரி கோவிலாக பார்த்து தேர்வு செய்து செவ்வாய்க்கிழமை அன்று வழிபாடு மேற்கொள்ள வேண்டும். இந்த வழிபாட்டை மேற்கொள்வதற்கு முதல் நாளே 100 கிராம் குங்குமமும், 100 கிராம் மஞ்சளும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

செவ்வாய்க்கிழமை அன்று காலையில் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய புற்றின் மீது இந்த மஞ்சளையும் குங்குமத்தையும் தூவி விட வேண்டும். பிறகு அந்த கோவிலில் இருக்கும் விநாயகருக்கு அருகம்புல்லை வாங்கி கொடுத்து மனதார வழிபாடு செய்து கொள்ள வேண்டும். அடுத்ததாக மாரியம்மனுக்கு மஞ்சள் நிற பூக்களை வாங்கி கொடுத்து வழிபாடு செய்துவிட்டு அந்த கோவிலில் இருக்கும் துர்க்கை அம்மனுக்கு செவ்வரளி பூக்களை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக அந்த துர்க்கை அம்மனுக்கு முன்பாக 18 அகல்விளக்கில் நெய் தீபம் ஏற்ற வேண்டும். நெய் தீபம் ஏற்ற இயலாதவர்கள் விளக்கெண்ணையில் தீபம் ஏற்றலாம். இப்படி தீபம் ஏற்றி வழிபாடு செய்த பிறகு கோவிலுக்கு வெளியே வந்து ஊனமுற்றவர்கள் யாராவது ஒருவருக்கு தங்கள் கைகளால் தங்களால் இயன்ற ஏதாவது அன்னதானம் செய்ய வேண்டும்.

இப்படி தொடர்ந்து எட்டு செவ்வாய்க்கிழமைகள் இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் தங்களுடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய செவ்வாய், கேது மற்றும் சனியின் தாக்கம் குறைந்து கடன் பிரச்சனையில் இருந்து படிப்படியாக வெளியே வருவதற்குரிய வாய்ப்புகளை அந்த அம்மன் வாரி வழங்குவார்.

இதையும் படிக்கலாமே: மனக்குறை நீங்க வாராகி வழிபாடு

மிகவும் சக்தி வாய்ந்த இந்த மாரியம்மன் வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்து நம்முடைய வாழ்வில் இருக்கக்கூடிய கடன் என்னும் கொடிய நோயிலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கையை வாழ்வோம்.

சற்று முன்