இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு வீட்டிலும் சுபகாரிய தடையால் வீட்டில் இருக்கும் பெற்றவர்களுக்கு மன உளைச்சல் இருக்கிறது. தன்னுடைய பிள்ளைக்கு திருமணம் நடக்கவில்லை, பெண் குழந்தைகளாக இருந்தாலும் சரி, ஆண் குழந்தைகளாக இருந்தாலும் சரி திருமண தடை இருக்கும்போது பெற்றவர்களுடைய மனசு கஷ்டப்படும். திருமணம் ஆகி நீண்ட நாட்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை என்றாலும் நிச்சயம் மன வருத்தம் இருக்கும்.
சில வீட்டில் திருமணம் நடந்தது குழந்தையும் பிறந்து, குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் இருக்கும். கணவன் மனைவிக்குள் சதாகாலமும் சண்டை. வீட்டில் ஒரு சந்தோஷம் துளி கூட இல்லாத சூழ்நிலை நிலவினால் என்ன செய்வது. இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் உங்கள் குடும்பத்தில் இருந்தால் ஆடிச் செவ்வாய் கிழமை இந்த பரிகாரத்தை நீங்கள் கட்டாயம் செய்யணும்.
துர்க்கை அம்மன் உங்களுக்கு நிச்சயம் நல்லதொரு வழியை காட்டிக் கொடுப்பார். வீட்டில் இருக்கும் சுபகாரிய தலையை விலக்கிவிடுவாள். அது என்ன பரிகாரம் ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
ஆடிச் செவ்வாய் துர்கை வழிபாடு
முதல் பரிகாரம் செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கு போடணும். செவ்வாய்க்கிழமை மாலை 3:00 மணியிலிருந்து 4:30 மணி வரை ராகு கால நேரம். அதிலும் ஆடி மாதம் வந்திருக்கக்கூடிய செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று சாதாரணமாக ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி அம்பாளை மனம் உருகி பிரார்த்தனை செய்தாலே திருமணத்தில் இருக்கும் தடைகள் விலகும் என்பது நம்பிக்கை.
ஒரு மஞ்சள் கொம்பை எடுத்து அதில் மஞ்சள் கயிறை கட்டி மாங்கல்யமாக தயார் செய்து கொள்ளுங்கள். இந்த மாங்கல்யத்தை துர்க்கை அம்பாளுக்கு சாத்தினால் திருமண தடை விலகும் என்பதும் நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. விரளி மஞ்சள் என்றால் துர்க்கை அம்பாளுக்கு ரொம்பவும் பிடிக்கும்.
இது தவிர உங்களுடைய வீட்டிலேயே ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனை நினைத்து விளக்கு ஏற்றலாம் தவறு கிடையாது. அந்த விளக்குக்கு முன்பாகவோ அல்லது உங்களுடைய வீட்டில் துர்க்கை அம்மனின் படம் இருக்கிறது என்றால் அந்த துர்க்கை அம்மன் படத்துக்கு முன்பாகவோ ஒரே ஒரு விரலில் மஞ்சள் கயிறால் முடிந்து வைத்து, மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். திருமண தடை விலக வேண்டும் என்ற பிரார்த்தனையை வைத்து பின் சொல்ல கூடிய இந்த மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள்.
கௌரி மந்திரம்
சர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே !
சரண்யே திரியம்பிகே கௌரி நாராயணீ நமோஸ்துதே !!
ஆடிச் செவ்வாய் கிழமை ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனை நினைத்து விளக்கு ஏற்றி இந்த மந்திரத்தை 27 முறை சொல்பவர்களுக்கு நிச்சயம் திருமண தடை விலகும். திருமணம் ஆகி இல்லற வாழ்க்கை சரியில்லாமல் இருந்தால் உங்களுடைய இல்லற வாழ்க்கை நிச்சயம் இனிக்கும். கணவன் மனைவிக்குள் ஒரு அன்னியூன் ஏற்படும்.
கணவனும் விளக்கு போட்டு இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். மனைவியும் விளக்கு போட்டு இந்த மந்திரத்தை சொல்லி வழிபாடு மேற்கொள்ளலாம். முழுக்க முழுக்க உங்கள் குடும்பம் சந்தோஷமாக இருப்பதற்கு உண்டான வழிபாட்டு முறைகள் தான் இவை.
பிரிந்திருக்கும் கணவன் மனைவி தனித்தனியாக துர்க்கை அம்பாளை வேண்டி இந்த பாடலை படித்தாலும், பிரிந்தவர்கள் இருவரும் ஒன்று சேருவீர்கள். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த மந்திரம் இது. குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றாலும் துர்கை அம்மனிடம் ராகு கால நேரத்தில் விளக்கு போட்டு பிரார்த்தனை வையுங்கள். நிச்சயமாக அந்த அம்பாள் உங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றி வைப்பாள்.
துர்கை அம்மனை வழிபாடு செய்வதற்கு இன்னொரு சூட்சம முறையும் இருக்கிறது. துர்கை அம்மனுக்கு நேர் எதிராக முட்டிப்போட்டு முந்தானையை ஏந்தி வரம் கேட்டால் நீங்கள் கேட்ட வரம் உடனே கிடைக்கும். குறிப்பாக இந்த வழிபாடு பெண்களுக்காக மட்டும். இறைவனிடம் மண்டியிட்டு கேட்பது என்று சொல்லுவார்கள் அல்லவா.
இதையும் படிக்கலாமே: சொந்த வீடு அமைய தீப வழிபாடு
அதுபோல துர்கை அம்பாளிடம் பெண்கள் வேண்டுதல் வைத்தால் அம்பாளும் ஒரு பெண் தானே, உங்களுடைய வேண்டுதலுக்கு இணங்கி செவி சாய்த்து கேட்ட வரங்களை உடனே கொடுத்து விடுவாள். மடி ஏந்தி பிச்சை கேட்கக்கூடிய வழிபாடு பெண்களுக்காக மட்டும் சொல்லப்பட்டுள்ளது. மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை வரும் ஆடி செவ்வாய் கிழமைகளில் செய்து பலன் பெறவும்.