கடன் தீர அமாவாசை செய்ய வேண்டிய பரிகாரம்

amavasai
- Advertisement -

வாழ்க்கையில் வரக்கூடிய எந்த கஷ்டமாக இருந்தாலும் அதற்கு முதல் காரணம் நாம் செய்த கர்ம வினைகள் தான். அந்த கர்ம வினை யிலிருந்து விடுபட வேண்டும் என்றால் இந்த அமாவாசை நாளை நாம் தவறவிடவே கூடாது. அமாவாசை திதியில் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி தர்ப்பண வழிபாடுகளை முறையாக செய்து முடித்து விடுங்கள். காகத்திற்கு சாதம் வைத்துவிட்டு வீட்டில் இருப்பவர்கள் அதன் பிறகு தான் சாப்பிட வேண்டும்.

அமாவாசை அன்று முன்னோர்கள் வழிபாடு செய்வது நம்முடைய கர்ம வினைகளை குறைக்கும் என்று முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. நாளைய தினம் 10-03-2024 மாசி மாதம் அமாவாசை திதியில் முன்னோர்கள் வழிபாட்டை எல்லாம் மறக்காம செஞ்சிருங்க. கடன் பிரச்சினை விலக ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த பரிகாரத்தை செய்யவும். நாளை மாலை 6:00 மணிக்கு வழக்கம் போல பூஜையறையில் விளக்கு ஏற்றி வழிபாடை மேற்கொள்ளவும்.

- Advertisement -

மாலை நேரத்தில் அமாவாசை தினத்தில் பூஜையறையில் விளக்கு ஏற்றி குலதெய்வத்தை மனதார நினைத்து பிரார்த்தனை செய்வது ரொம்பவும் நல்லது. இந்த நேரத்தில் உங்களுடைய வலது கை உள்ளங்கைகளில் வெல்லம் எடுத்துக் கொள்ள வேண்டும். நாட்டு சர்க்கரை, வெல்லம் எந்த இனிப்பு பொருட்களாக இருந்தாலும் சரிதான். வெள்ளை சர்க்கரையாக இருந்தாலும் சரிதான்.

ஒன்னும் பிரச்சனை கிடையாது. இந்த இனிப்பு பொருளை உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு மனம் உருகி உங்களுடைய கடன் பிரச்சனை தீர வேண்டும். வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். 6:00 மணிக்கு இந்த பிரார்த்தனையை வைத்து கையில் இருக்கும் அந்த வெல்லத்தை ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு பூஜை அறையில் குலதெய்வப்படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள்.

- Advertisement -

இரவு தூங்க செல்வதற்கு முன்பு உங்க வீட்டு வாசல் கதவை அடைப்பீர்கள் அல்லவா. அந்த சமயத்தில் இந்த வெல்லத்தை கொண்டு போய் உங்கள் நிலை வாசலுக்கு இரு பக்கமும் போட்டுவிட்டு வரவேண்டும். இப்படி வெல்லத்தை நிலை வாசல் படி வெளிப்பக்கத்தில் போட்ட பிறகு நீங்க வீட்டில் இருந்து வெளியே போகாதீங்க. கதவை அடைச்சிட்டு வீட்டுக்குள் வந்து வழக்கம் போல தூங்க செல்லலாம். பரிகாரம் முடிந்தது அவ்வளவுதான்.

மறுநாள் காலை வாசல் தெளித்து கோலம் போட போகும்போது அந்த இனிப்பு பொருளை எறும்புகள் வந்து சாப்பிட்டு இருக்கும். எறும்புகள் அந்த வெல்லத்தை சாப்பிடும்போதே உங்களுடைய கர்ம வினைகள் குறையும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. ஒருவேளை எறும்புகள் சாப்பிடவில்லை என்றாலும் கவலை படாதீங்க. அதையெல்லாம் வாரி வீட்டுக்கு வெளி பக்கத்தில் மண் பாங்கான இடத்தில் கொட்டி விடுங்கள்.

- Advertisement -

உங்களால் முடிந்தால் நாளை வீட்டு பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு செல்லுங்கள். அந்த கோவிலில் அரச மரத்தடியிலோ அல்லது வேப்பமரத்தடியிலோ, அந்த கோவிலில் எந்த மரம் இருக்குதோ அந்த மரத்துக்கு அடியில் இருக்கும் எறும்புகளுக்கு கொஞ்சம் உணவை நீங்கள் போட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: சமயபுரம் மாரியம்மன் மகத்துவம்

கொஞ்சமாக பச்சரிசியில் வெல்லம் கலந்து அந்த மாவை மரத்தை சுற்றி தூவி விட்டு, வந்து விடுங்கள். அமாவாசை அன்று எறும்புகளுக்கு சாப்பாடு போடுவதும் ஒரு அன்னதானம் தான். இதோடு சேர்த்து நாளைய தினம் உங்களால் முடிந்த இரண்டு பேருக்கு வயிறார சாப்பாடு வாங்கி அன்னதானம் செய்வது சிறப்பான பலனை தரும் என்ற இந்த தகவலோடு ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -