சமயபுரம் மாரியம்மன் மகத்துவம்

samaiyapuram amman
- Advertisement -

விரத வழிபாடு என்பது நம் வழிப்பாட்டு முறைகளிலே மிகவும் முக்கியமானதாக குறிப்பிடலாம். உண்ணா நோன்பு இருக்கும் காலத்தில் நம் இறைவழிபாட்டையும் இறை சிந்தனையும் மட்டுமே கருத்தில் கொண்டு இருப்போம். இதற்கு காரணம் பட்டினி விரதம் இருக்கும் போது நம்முடைய மனம் உடல் அனைத்தையும் நம் கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் வலிமை கிடைக்கும்.

இதன் காரணமாகவே நாம் உன்னால் நோன்பு விரதத்தை அனுஷ்டிக்கிறோம். ஆகையால் தான் நம் முன்னோர்கள் காலத்திலிருந்து இந்த விரத முறைகளை கடைப்பிடித்து வந்தார்கள். அறிவியலோடு சேர்த்து ஆன்மீகத்தையும் ஒரு சேர கடை பிடித்தார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

- Advertisement -

இந்த உண்ணா நோன்பு அவரவர் உடல்நிலை பொறுத்து மேற்கொள்வது சிறப்பு. இது மனிதர்களாகிய நாம் இருக்கும் உண்ணா நோன்பு. பக்தர்களுக்காக தெய்வம் உண்ணாவிரதம் இருந்ததை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படி ஒரு அற்புதமான தெய்வத்தை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது எல்லாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

வேண்டுதல் நிறைவேற சமயபுரம் மாரியம்மன் வழிபாடு

பக்தர்களுக்காக பட்டினி விரதம் இருக்கும் அன்னையானவர் சமயபுரம் மாரியம்மன். இந்த விரதமானது ஆண்டு தோறும் மாசி மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமை துவங்கி பங்குனி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28 நாட்கள் இந்த விரதத்தை அன்னை தொடர்கிறார்.

- Advertisement -

அந்த வகையில் இந்த வருடத்தின் அன்னையின் இந்த பச்சை பட்டினி விரதம் வரும் மார்ச் 10ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 7-ம் தேதி வரை 27 நாட்கள் வரை நீடிக்கும். அம்மன் விரதம் இருக்கும் இந்த 28 நாட்களும் நெய்வேத்தியங்கள் படைக்கப்படுவதில்லை. அதற்கு மாறாக நீர் மோர், கரும்பு சாறு, பானகம், இளநீர் போன்றவற்றை அன்னைக்கு நெய்வேத்தியமாக படைக்கிறார்கள்.

அதே போல் விரதம் இருக்கும் அன்னையை குளிர்விக்கும் வகையில் பக்தர்கள் விதவிதமான வண்ண மலர்களால் அன்னையை அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். இது பூச்சொரிதல் விழா என்ற பெயரில் நடக்கும். 28 வது நாள் கொடியேற்றத்துடன் தொடங்கி அதிலிருந்து பத்தாவது நாள் சித்திரை முதல் செவ்வாய்க்கிழமை திருத்தேர் விழா விமர்சையாக நடக்கும்.

- Advertisement -

உலக மக்களின் நன்மைக்காகவும் பக்தர்களுக்கு நோய் நொடி இல்லாத வாழ்க்கையை அருளவும் சகல சௌபாக்கியங்கள் கிடைக்கவும், அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருந்து இச்சா, கிரியா, ஞானா சக்திகளை பெற்று 27 நட்சத்திரங்களின் ஆதிக்கத்தையும் தன்னூல் அடக்கி மகா சக்தியாக காட்சி அழைக்கிறார்.

இந்த அன்னையை அமாவாசை பௌர்ணமி மற்றும் கிரகண காலங்களில் வழிபடுவது மிகவும் சிறப்பு. இந்த அன்னையை வழிபட்டால் ராகு கேது தோஷம் நீக்குவதுடன் 12 ராசிகளின் அதிபதியாக அன்னை திகில்வதால் அனைத்து கிரக தோஷங்களையும் மாரியம்மன் நீக்கி விடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: வேண்டுதல் நிறைவேற வழிபாடு

இந்த காலக்கட்டத்தில் அன்னையை வேண்டி நாமும் விரதம் இருந்து வழிபட்டு தரிசித்தால் நாம் நினைத்தவை யாவும் நிச்சயம் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது. இந்த சமயபுரம் மாரியம்மன் அற்புதங்களை உணர்ந்து நாமும் அன்னையை வழிபட்டு நம்முடைய வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறுவோம்.

- Advertisement -