தீர்க்கவே முடியாது என்று திணறிய கடனைக் கூட சுலபமாக தீர்க்க, இந்த மார்கழி அமாவாசையில், இந்த நேரத்தை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தவற விட்டால் கடன் தீர இது போன்ற நாள் கிடைக்காது.

- Advertisement -

இந்த வருடத்தில் வந்திருக்கும் இந்த அமாவாசை வெள்ளிக்கிழமையில் வந்திருப்பது மிக மிக விசேஷமான ஒன்று. வீட்டில் இருக்கும் சகல பிரச்சனைகளையும் தீர்க்க ஏதேனும் ஒன்று செய்ய வேண்டும் என்றால் அதற்கு அமாவாசை நாளை தான் தேர்ந்தெடுப்போம். அந்த நாளில் மகாலட்சுமி தாயாருக்கு உகந்த நாளான இந்த வெள்ளிக்கிழமையும் சேர்ந்து வந்திருப்பது பிரச்சனைகள் நீங்கி செல்வ வளத்தை நமக்கு தரக் கூடிய நல்ல நாள். இந்த நாளில் மேலும் ஒரு விசேஷம் மூல நட்சத்திரமும் சேர்த்து இருப்பதால், இந்த நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தியாக வணங்கக் கூடிய நாள். இப்படி அனைத்து விசேஷங்களும் ஒன்றாக வந்திருக்கும் இந்த நாளில் நாம் கடன் நீங்கி செல்வ வளத்துடன் வாழ இந்த பரிகாரத்தை செய்து விடுவது மிகவும் உத்தமம். அதை எப்படி செய்வது எந்த நேரத்தில் செய்வது என்பதை எல்லாம் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

இந்த வெள்ளிக்கிழமை அமாவாசையுடன் சேர்ந்து வந்திருக்கும் நாளில் காலையில் இருந்து மதியம் வரை நம் வீட்டு இறந்த முன்னோர்களுக்கான வழிபாட்டை முடித்துக் கொள்ளுங்கள். அந்த வழிப்பாடும் மிகவும் முக்கியம் அவர்களின் அருளும் ஆசையும் இல்லாமலும் நமக்கு எந்த பிரச்சனைகளும் தீர்ந்து விடாது எனவே இந்த கடமையை நீங்கள் தவறாது செய்து முடித்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு வெள்ளிக்கிழமை மாலையில் எப்போதும் போல் வீட்டில் மகாலட்சுமி தாயாருக்கு தீபம் ஏற்றி வெள்ளிக்கிழமை பூஜையை செய்து கொள்ளுங்கள். இந்த பூஜையோடு சேர்த்து கடன் சுமை தீருவதற்கான பரிகாரத்தையும் நாம் செய்து விடலாம். இந்த பரிகாரத்தை அன்று இரவு 8 லிருந்து 9 சுக்கிர ஓரையில் தான் செய்ய வேண்டும்.

கடன் தீர மார்கழி அமாவாசை பரிகாரம்
இந்த பரிகாரத்தை செய்ய மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி உப்பு, மஞ்சள், குங்குமம், எலுமிச்சை பழம்,1 ரூபாய் நாணயம்,துளசி கொஞ்சம் பச்சை கற்பூரம், மிளகு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து முடிச்சாக கட்டி வீட்டில் பூஜை அறையில் வைத்து வணங்கிய பிறகு இரவு 8 லிருந்து 9 மணிக்குள்ளாக இந்த முடிச்சை உங்கள் விட்டு நிலை வாசலில் கட்டி விடுங்கள்.

- Advertisement -

இந்த முடிச்சில் வைக்கப்படும் மிளகை உங்கள் வீட்டில் எத்தனை நபர் இருக்கிறார்களோ அத்தனை மிளகு மட்டும் தான் வைக்க வேண்டும். அந்த மிளகையும் கடையில் புதியதாக வாங்கி வந்த மிளகாக தான் இருக்க வேண்டும். வீட்டில் சமையல்களுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கும் பழைய மிளகை பயன்படுத்தக் கூடாது . இதில் சேர்த்து இருக்கும் மற்ற பொருட்களை எல்லாம் கடன் அடைக்கவும், செல்வம் பெருகவும் பயன்பட்டாலும், இந்த மிளகானது வீட்டில் திருஷ்டி, வீட்டில் யாருக்கேனும் தோஷம் வேறு ஏதேனும் கோளாறு இருந்தால் அதுவும் நம் குடும்பத்திற்கு கஷ்டத்தை ஏற்படுத்தும். அதை சரி செய்வதற்காகத் தான் இந்த மிளகை வைக்கிறோம். எனவே மிளகை மட்டும் ஆட்களின் எண்ணிக்கைக்கு தகுந்த படி வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த முடிச்சை அடுத்த அமாவாசை வரை அப்படியே விட்டு விடுங்கள். அடுத்த அமாவாசை அன்று அதில் இருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் எடுத்து மஞ்சள் தண்ணீரில் அலசி மறுபடியும் இதே போல் முடிச்சை தயார் செய்து நிலை வாசலில் கட்டி விடுங்கள். இதில் இருக்கும் பொருள்களை ஓடும் நீரில் போட்டு விடுங்கள். இல்லாத பட்சத்தில் கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: வரவிருக்கும் சனிப்பெயர்ச்சி உங்கள் வாழ்வில் ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகளில் இருந்து தப்புவது எப்படி? சனி பார்வை யார் மீதெல்லாம் கண்டிப்பாக விழும் தெரியுமா?

அடுத்த மாதம் இந்த முடிச்சை மாற்றிக் கட்டும் முன்பே உங்களுக்கு உரிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழி கட்டாயமாக பிறந்து விடும். நம்பிக்கையோடு மகாலட்சுமி தாயார் மனதார வேண்டிக் கொண்டு இந்த முடிச்சை கட்டி கடன் இல்லாத வாழ்வை வாழுங்கள்.

- Advertisement -