இந்த 2 பொருட்களை வீணாக்குபவர்களுக்கு கடன் நிச்சயம் வாட்டி வதைக்கும்! கடன் தீர பச்சரிசியை இப்படி செய்யுங்கள்!

cash-rice

வாழ்க்கையில் கடன் என்பது எல்லோருக்குமே இருக்கும் ஒரு விஷயம் தான் என்றாலும், ஒரு சிலருக்கு கடன் பிரச்சனை கழுத்தை நெறிக்கும் அளவிற்கு அதிகமாக இருக்கும். இப்படி அதிகமான, தாங்க முடியாத அளவிற்கு கடன் பிரச்சினை இருப்பவர்கள் இந்த இரண்டு தவறுகளை வாழ்வில் செய்து கொண்டு இருப்பார்கள். வீட்டில் இருக்கும் இந்த இரண்டு பொருட்களை வீணாக்கினால் கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு கடவுள் செய்து விடுவாராம். அப்படி என்ன இரண்டு தவறுகள்? கடன் தொல்லை தீர்வதற்கு பச்சரிசியை வைத்து எளிதாக செய்யக் கூடிய பரிகாரம் என்ன? இந்த இரண்டு விஷயங்களையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

kadan

கடன் என்பது எல்லோருக்குமே இருக்கும். அதனால் கடனை பற்றிய கவலை கொள்ள தேவையில்லை. ஆனால் கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு இருக்கும் பொழுது நிச்சயமாக கவலை கொள்ளாமல் இருக்க முடியாது. ஒருவடைய ஜாதகத்தில் லக்ன ரீதியான பிரச்சனைகள் இருக்கும் பொழுது கடன் தொல்லைகள் ஏற்படுகிறது. இதனால் லக்னத்திற்கு உரிய அதிபதிகளை வணங்கும் பொழுது கடன் தொல்லைகள் நீங்கப் பெறுகின்றன.

ஒருவருடைய வீட்டில் மிகவும் முக்கியமானது தண்ணீர் மற்றும் தானியங்கள் ஆகும். இந்த இரண்டு பொருட்களை எவர் ஒருவர் அதிகமாக வீணாக்குகிறார்களோ! அவர்களுடைய வாழ்க்கையில் கடன் தொல்லை கோரத்தாண்டவம் ஆடும் என்று சாஸ்திரங்கள் எடுத்துரைக்கிறது. அன்னபூரணி தேவிக்கு தானியங்களும், தண்ணீரும் விசேஷமானது. தண்ணீரும், தானியங்களும் கடவுளுக்கு சமமானதாகும். இதனை வீணாக்குபவர்கள் உடைய வாழ்க்கையில் கடன் பிரச்சனைகள் ஏற்படுவது உண்டு.

rice

தானியங்களால் செய்யப்பட்ட உணவுகள், சாதம் போன்றவையும் குறிப்பிட்ட அளவிற்கு சமைக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு சிலர் முழு வயிறு நிரம்பினால் போதும்! யாருக்கும் சாப்பாடு பத்தாமல் போய் விடக்கூடாது என்று நினைப்பது உண்டு. ஆனால் இது முற்றிலும் தவறானதாகும். அரை வயிற்றோடு படுத்தாலும், அரைக்கரண்டி சாப்பாடு கூட மீந்து போகக்கூடாது. அப்படி சமைப்பது தான் கடன் தொல்லையிலிருந்து நீங்க வழியாகும்.

தண்ணீர் தாராளமாக வருகிறது என்பதற்காக தண்ணீரை திறந்து வைத்துக் கொண்டு எவ்வளவோ பேர் அஜாக்கிரதையாக, அலட்சியமாக வீணாக்கி கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய வாழ்க்கையில் நிச்சயம் கடன் பிரச்சினை தாண்டவமாடும். இதில் இருந்து விமோசனம் பெறுவதற்கு குலதெய்வ வழிபாடு அவசியமாகும். குலதெய்வத்திற்கு செய்யப்படும் இந்த பரிகாரம் முழுமையாக கடன் பிரச்சனையிலிருந்து உங்களை வெளிக் கொண்டு வரும்.

pacharisi

குலதெய்வம் தெரிந்தவர்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று, அங்கு யாருக்கு கடன் இருக்கிறதோ அவர்களுடைய எடைக்கு எடை நிகராக பச்சரிசியை தானம் செய்ய வேண்டும். அரிசி தானம் செய்யும் பொழுது தோஷத்தால் ஏற்படும் கடன் தொல்லைகள் நீங்கும். அன்ன தோஷம், பித்ரு சாபம், குலதெய்வ குற்றம், ஜாதக ரீதியான தோஷங்கள், நவகிரக தோஷங்கள் போன்றவை நீங்கும். எல்லா தோஷங்களும் நீங்கி, கடன் பிரச்சனைகள் தீர்ந்து, மீண்டும் வாழ்க்கையில் முன்னேற இந்த எளிய பரிகாரத்தைச் செய்வது உத்தமம்.