நம்முடைய வாழ்க்கையில் நாம் பலதரப்பட்ட மனிதர்களை பார்த்திருப்போம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் ஏதாவது ஒரு ரூபத்தில் பண தேவைக்காக போராடிக் கொண்டு இருப்பார்கள். ஒரு சிலர் தங்களுடைய அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதற்கு கூட பணம் இல்லாமல் அந்த பணத்தேவையை அடைவதற்காக முயற்சி செய்வார்கள். இன்னும் சிலரோ தங்களுக்கு தேவையான நியாயமான பொருட்களை வாங்க வேண்டும், பெற வேண்டும் என்பதற்காக பணத்தை சம்பாதிப்பார்கள்.
இன்னும் சிலரோ ஆடம்பர வசதிக்காகவும் தேவையற்ற வீண் விரயங்களுக்காகவும் பணத்தை சம்பாதிப்பார்கள். இன்னும் சிலரோ தங்களுக்கு வரவேண்டிய பணம் வந்து சேர வேண்டும் என்பதற்காக உழைப்பார்கள். இப்படி எந்த தேவைக்காக நாம் உழைக்கிறோமோ அதற்கேற்ற நமக்கு பணவரவு என்பது ஏற்படும். நியாயமான அடிப்படையான தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் நமக்கு வரவேண்டிய பணம் வந்து சேரவும் செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.
வேண்டிய பணத்தை தரும் பரிகாரம்
பணத்தை ஈர்ப்பதற்கு நாம் மகாலட்சுமியை எந்த அளவிற்கு வழிபாடு செய்கிறோமோ அதே அளவிற்கு குபேர பகவானையும் நாம் வழிபாடு செய்ய வேண்டும். என்றைக்கெல்லாம் நம்முடைய பண தேவைகள் நிறைவேறாமல் செல்கிறதோ, அன்றைக்கு மட்டும் இவர்களை வணங்கினால் பத்தாது. அனுதினமும் இவர்களை நாம் தொடர்ச்சியாக வணங்கும் பொழுது தான் நம்முடைய தேவைகளை நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அப்படி அனுதினமும் நாம் எந்த முறையில் வழிபட்டால் நம்முடைய தேவைகள் பூர்த்தியடையும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.
இதற்காக நமக்கு ஒரு பீஜ மந்திரமும் அதே சமயம் ரகசியமான சூட்சுமமான எண்ணும் தேவைப்படுகிறது. முதலில் மந்திரத்தை தெரிந்து கொள்வோம். இந்த குபேர பீஜ மந்திரம் என்பது “தம்”. இதை நாம் அழுத்தத்துடன் கூற வேண்டும். எந்த அளவிற்கு அழுத்தத்துடன் வேகமாக கூறுகிறோமோ அந்த அளவிற்கு இந்த மந்திரம் நம் வசப்படும் என்று கூறப்படுகிறது.
அடுத்ததாக நாம் தெரிந்து கொள்ள போவது இந்த எண்ணை. நம்முடைய இடது கையில் குபேர மேடு இருக்கும் அல்லவா? அதாவது கட்டை விரலுக்கு கீழே இருக்கக்கூடிய அந்த மேட்டுப்பகுதியை தான் குபேர மேடு என்று கூறுவோம். அந்த குபேர மேட்டில் குபேர பகவானுக்குரிய நிறமான பச்சை நிறத்தினால் ஆன மையைப் பயன்படுத்தி இந்த எண்ணை தினமும் எழுத வேண்டும். காலையில் குளித்து முடித்ததும் பூஜை அறையில் விளக்கேற்றி சாமி கும்பிடுவோம் அல்லவா? அப்பொழுது இதற்காகவே தனியாக ஒரு பச்சை பேனாவை வைத்துக் கொள்ளுங்கள்.
அந்த பேனாவை எடுத்து உங்களுடைய இடது கையின் குபேர மேட்டில் எழுதி விட வேண்டும். அந்த எண் 5447959. இந்த எண்ணை எழுதி முடித்த பிறகு உங்களுடைய தேவைக்குரிய பணம் உங்களை வந்து சேர்ந்து விட்டதாகவும் அந்த பணம் உங்கள் கையில் இருப்பதாகவும் அந்த பணத்தால் உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து விட்டீர்கள் என்றும் நீங்கள் உங்கள் மனதார சந்தோஷத்துடன் நினைத்துக் கொள்ள வேண்டும். இப்படி தினமும் இந்த பீஜ மந்திரத்தையும் இந்த எண்ணையும் எழுதி தங்களுடைய தேவைக்குரிய பணம் கையில் வந்தது போல் நினைப்பவர்களுக்கு விரைவிலேயே அந்த பணம் வந்து சேரும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:கஷ்டங்களை தீர்க்கும் மிளகு பரிகாரம்
மிகவும் எளிமையான இந்த சூட்சுமமான பரிகாரத்தை முழு மனதுடன் செய்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய தேவைக்குரிய பணம் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.