இந்தக் கிழமையில் தொடர்ந்து பெருமாள் வழிபாடு செய்தால், கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனையும் காணாமல் போகும்.

perumal

இந்த உலகத்தில் கடன் இல்லாமல் ஒரு மனிதனால் வாழவே முடியாது என்ற சூழ்நிலை வந்துவிட்டது. அத்தியாவசியமாகத் தேவைப்படும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம், இந்த பட்டியலில் கடனும் சேர்ந்துவிட்டது. இந்த கடன் பிரச்சனையிலிருந்து எப்படித்தான் வடுபடுவது என்ற வழி தெரியாமல், கடன் தொல்லையில் சிக்கித் தவித்து வருபவர்களுக்காக ஆன்மீக ரீதியான ஒரு வழிபாட்டைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நாம் கேட்ட வரங்களை, நாம் கேட்ட செல்வங்களை அள்ளி கொடுப்பவர் பெருமாள். ஆடம்பர பிரியர் பெருமாள். மகாலட்சுமியை தன்னுடைய நெஞ்சில் சுமந்து கொண்டிருப்பவர் பெருமாள். இத்தனை பெருமைகள் கொண்ட எம்பெருமானை எந்த கிழமையில் வழிபட்டால் நம்முடைய பணப்பிரச்சனை தீரும். இப்போதே தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

kadan

வாரம்தோறும் வரும் செவ்வாய்க்கிழமை அன்று உங்களுடைய வீட்டிலும் நீங்கள் பெருமாள் வழிபாட்டை செய்யலாம். கோவிலுக்கு சென்றும் பெருமாளையும் தாயாரையும் வழிபாடு செய்யலாம். பெருமாள் வழிபாடு செய்யும்போது துளசி மாலையோடு சென்று வழிபாடு செய்வது மேலும் சிறப்பைத்தரும். எவர் ஒருவர் விடாமல் செவ்வாய்க்கிழமைகளில் பெருமாள் வழிபாட்டை மனதார செய்து வருகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் பெரிய அளவில் வராது என்பது நம்பிக்கை. இந்த வழிபாட்டில் ஒரு சூட்சமம் மறைந்துள்ளதே! என்ன சூட்சமம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

முதலில் நீங்கள் எந்த தேதியில் பிறந்தீர்களோ அந்தத் தேதியில் கடன் வாங்கவும் கூடாது, அடுத்தவர்களுக்கு கடனை கொடுக்கவும் கூடாது. வருடத்தில் ஒரு நாள் தான் நீங்கள் பிறந்த நாள் வரும். ஆனால் மாதம்தோறும் அந்த தேதி வரும் அல்லவா? எடுத்துக்காட்டிற்கு நீங்கள் ஜனவரி 15ஆம் தேதி பிறந்தவர்களாக இருந்தால், பிப்ரவரி மாதத்தில் வரும் 15ஆம் தேதி அன்று கடன் வாங்கக்கூடாது. கடன் கொடுக்கக்கூடாது. இதேபோல்தான் மார்ச் மாதம், ஏப்ரல் மாதம் வரக்கூடிய நீங்கள் பிறந்த தேதி அன்று கடன் வாங்காமல் இருப்பதும், கடன் கொடுக்காமல் இருப்பது நன்மையைத் தரும்.

இதே போல் நீங்கள் பிறந்த நட்சத்திரம், நீங்கள் பிறந்த கிழமை இந்த தினங்களில் கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் பரிமாற்றம் செய்யாமல் இருப்பது உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்மையை கொடுக்கும். ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

செவ்வாய்க்கிழமை அன்று பெருமாள் கோவிலுக்கு சென்று உங்களுக்கு இருக்கக்கூடிய பணப் பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் சமயத்தில் முதலில் ‘உங்களிடம் கடன் பெற்றவர் அழிந்துபோக வேண்டும் என்ற எண்ணத்தோடு இறை வழிபாடு செய்தால், அதில் உங்களுக்கு பலனேதும் இருக்காது. உங்களிடம் கடன் பெற்றவருக்கும் எந்த ஒரு பாதிப்பும் வந்துவிடக்கூடாது. கடன் கொடுத்த உங்களுக்கும் எந்த நஷ்டமும் வந்துவிடக்கூடாது என்ற வேண்டுதலே சிறந்தது.’

perumal

இரண்டாவதாக, உங்களுக்கு யாருக்காவது அவசர தேவைக்கு கடனை கொடுத்திருப்பார்கள். அவர்கள், உங்களுக்கு கொடுத்த கடனை திருப்பி கேட்கும்போது, கடனை திருப்பிக் கேட்பவருடைய, சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, நீங்கள் தக்க சமயத்தில் கடனை திருப்பிக் கொடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நமக்கு உதவி செய்த, நமக்கு கடன் கொடுத்தவரை சாபம் விடக்கூடாது. நமக்கு கஷ்டம் வரும்போது நமக்கு உதவி செய்த மனிதர்களை எந்த சூழ்நிலையிலும் எக்காரணத்தைக் கொண்டும் நாம் சபிக்கவே கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ‘நீங்கள் கடன் கொடுக்க வேண்டிய கடனாளியாக இருந்தாலும் சரி, அல்லது கடனை வசூல் செய்யும் இடத்தில், நீங்கள் இருந்தாலும் சரி, மனிதர்களுடைய சூழ்நிலையை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.’

எப்போதுமே இறைவனிடம் வேண்டுதல் வைக்கும்போது அடுத்தவர்களை பழித்து அடுத்தவர்களை திட்டி, அதன் பின்பு உங்களுடைய பிரச்சனைகள் தீர வேண்டும் என்று வேண்டுதல் வைத்தால், அந்த வேண்டுதல் நிறைவேறுவதற்கு வாய்ப்பே கிடையாது. உங்களுக்கு கடன் வசூல் ஆக வேண்டும் என்றாலும், நீங்கள் யாருக்கேனும் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றாலும், நல்லதை மட்டுமே நினைத்து, நல்ல எண்ணத்தோடு வேண்டுதல் வைத்தால் மட்டுமே அது பலிக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
கிரக பீடைகள் நீங்கி தீர்க்காயுளுடன் ஆரோக்கியமாக வாழ, இந்த ஆஞ்சநேயரை மனதில் நினைத்து இந்த மந்திரம் உச்சரித்தால் போதும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.