- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர சனி மஹா பிரதோஷத்தன்று செய்ய வேண்டிய வழிபாடு

கடன் தீர சனி மஹா பிரதோஷத்தன்று செய்ய வேண்டிய வழிபாடு

- Advertisement -

இன்று மனிதர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளில் மிகப்பெரிய பிரச்சனை இந்த கடன் பிரச்சனை. அதுவும் நோய்நொடி பிரச்சனைக்காகத்தான் இன்றைய தினம் அதிகமாக பணம் செலவாகிறது. சிறுக சிறுக பணத்தை சேமித்து வைத்திருக்கும் நடுத்தர வருடத்தினர், அந்த பணத்தை மொத்தமாக கொண்டு போய் மருத்துவமனையில் கொட்ட வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.

ஆரோக்கியமாக வாழ வேண்டும், கடன் சுமையிலிருந்து வெளிவர வேண்டும், என்றால் இன்றைய தினம் சிவபெருமானை பின் சொல்லக்கூடிய முறைப்படி பிரார்த்திப்போம். நிச்சயம் உங்கள் கடன் சுமையும் குறையும். ஆரோக்கியமும் பெருகும். முதலில் ஆரோக்கிய பிரச்சனைக்கு தீர்வை காண்போம். சிவபெருமானுக்கு உரியது வில்வ இலை. விஷத்தையும் முறிக்கக் கூடிய தன்மை கொண்டது மிளகு.

- Advertisement -

சிவபெருமான் ஆலயத்தில் பிரதோஷ நேரத்தில் உள்ளங் கைகளில் ஒரு வில்வ இலை, அதன் உள்ளே 3 முழு மிளகு வைத்து மடித்து, வைத்துக் கொள்ளவும். இதை உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டே சிவபெருமானிடம் ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டும் என்று கேட்டால், உங்களுடைய நோய்நொடி பிரச்சனை நீங்கும். ஆரோக்கியம் பெருகும் என்பது நம்பிக்கை.

நாளை சனி பிரதோஷ நேரத்தில் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கும். அப்பொழுது பழமையான சிவன் கோவிலில் அமர்ந்து இந்த வேண்டுதலை வைக்க வேண்டும். கூட்ட நெரிசலில் சிவபெருமானின் முன்பு அமர்ந்து தான் இதை சொல்ல வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது. சிவன் சன்னிதானத்திற்குள், அதாவது சிவன் கோவிலுக்குள் எந்த இடம் கூட்ட நெரிசல் இல்லாமல் இருக்கிறதோ, அந்த இடத்தில் அமர்ந்தும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

கையில் வில்வ இலை, மிளகு வைத்துக்கொண்டு வேண்டுதலை முடித்துவிட்டு முடிந்தால் கையில் இருக்கும் பொருட்களை வாயில் போட்டு மென்று விழுங்கலாம். முடியாதவர்கள் இதை தண்ணீரில் போட்டு வைத்து அந்த தண்ணீரில் வில்வமும் மிளகும் நன்றாக ஊறிய பிறகு அந்த தண்ணீரை பருகுவது ரொம்ப ரொம்ப நல்லது. இது முதல் பரிகாரம். இரண்டாவது பரிமாறமாக இன்றைய தினம் சனி பிரதோஷத்தில் கடன் பிரச்சனை தீர என்ன செய்யலாம் என்பதையும் பார்த்து விடுவோம்.

கடன் தீர சனி பிரதோஷ வழிபாடு

நாளை உங்களால் முடிந்த அபிஷேக பொருளை சிவபெருமானுக்கு வாங்கிக் கொடுத்துவிட்டு சிவபெருமானிடம் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள். இன்று மாலை 4:00 மணியிலிருந்து 5:30 மணிக்குள், உங்கள் கடன் தொகையிலிருந்து ஒரு சிறு தொகையை திருப்பி அடைத்தால் உங்கள் கடன் பிரச்சனை அடுத்து ஒரு சில நாட்களிலேயே அடையும்.

இதையும் படிக்கலாமே: தெய்வ நடமாட்டத்தை உணர்த்தும் அறிகுறிகள்

கடன் அடைவதோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்து உங்கள் வாழ்க்கையில் செல்வ செழிப்பில் பல நல்ல மாற்றங்கள் வரும். நீங்கள் வேண்டும் என்றால் அந்த சிவபெருமானின் ஆலயத்திலேயே அமர்ந்து சிவ சிவ என்று சொல்லிவிட்டு உங்கள் கைபேசியில் இருந்து பணத்தை கடன் கார்களுக்கு அப்படியே ஜிபே செய்துதான் பாருங்களேன். வாங்கிய பணத்தை எல்லாம் திருப்பிக் கொடுக்க முடியாமல் எவ்வளவு கஷ்டப்படுறீங்க. அந்த கஷ்டம் எல்லாம் எண்ணி 15 நாட்களில் தீரும். நம்பிக்கை உள்ளவர்கள் இதை முயற்சி செய்து பலனடையலாம்.

சற்று முன்