- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் பிரச்சனையை தீர்க்கும் தேய்பிறை பஞ்சமி பரிகாரம்

கடன் பிரச்சனையை தீர்க்கும் தேய்பிறை பஞ்சமி பரிகாரம்

- Advertisement -

ஒவ்வொரு திதிக்கும் வளர்பிறை தேய்பிறை என்று இரண்டு இருக்கின்றன. வளர்பிறையில் நாம் அந்த திதிக்குரிய வழிபாட்டை செய்யும் பொழுது நமக்கு தேவையான அனைத்து விஷயங்களும் வளர்ந்து கொண்டே வரும் என்றும் தேய்பிறையில் அந்த திதிக்குரிய வழிபாட்டை செய்யும் பொழுது நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தேய்ந்து போகும் என்றும் நம் அனைவருக்குமே தெரியும். அந்த வகையில் தேய்பிறை பஞ்சமியான இன்று அதுவும் குபேரருக்குரிய, குரு பகவானுக்குரிய வியாழக்கிழமையோடு சேர்ந்து வந்திருப்பதால் கடனை தீர்ப்பதற்குரிய பரிகாரத்தை பஞ்சமி நாயகியான வாராகி அம்மனை நினைத்து செய்யும் பொழுது குபேரரின் அருளையும் வாராகியின் அருளையும் பரிபூரணமாக பெற்று பண வரவை அதிகரிப்பதோடு கடன் பிரச்சினையும் தீர்க்க முடியும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தேய்பிறை பஞ்சமி பரிகாரம்

வராகி அம்மனை யார் ஒருவர் வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அதுவும் தேய்பிறை பஞ்சமி வழிபாடு செய்யும்பொழுது எது நமக்கு பிரச்சினையாக இருக்கிறதோ அது நம்மை விட்டு செல்லும் என்றே கூறலாம். அப்படிப்பட்ட அனைவரின் வாழ்க்கையில் இருந்தும் விலகக்கூடிய ஒன்றாக இருப்பது தான் கடன் பிரச்சனை. இந்த கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு வழிபாடுகளை செய்வதைப் போலவே பரிகாரங்களையும் நாம் செய்வோம். அந்த வகையில் தேய்பிறைப் பஞ்சமியில் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை இன்று இரவு 7 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு நமக்கு ஒரே ஒரு ஐந்து ரூபாய் நாணயம் இருந்தால் போதும். இந்த பரிகாரத்தை சுத்தமாக இருப்பவர்கள் தான் செய்ய வேண்டும் என்று இல்லை. யார் வேண்டுமானாலும் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம், வேலை செய்யும் இடத்திலும் செய்யலாம், ஆலயத்திலும் செய்யலாம், எந்த திசையை பார்த்து வேண்டுமானாலும் அமர்ந்து கொள்ளலாம். இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரே ஒரு ஐந்து ரூபாய் இருந்தால் போதும். இந்த ஐந்து ரூபாயை சாதாரண தண்ணீரில் சுத்தம் செய்து பிறகு பன்னீரில் சுத்தம் செய்து கொள்ளுங்கள். ஏதாவது ஒரு அமைதியான இடத்தில் தரையில் அமருபவர்களாக இருக்கும் பட்சத்தில் ஒரு விரிப்பை விரித்து அதற்கு மேல் அமர்ந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது வாராஹி அம்மனை முழுமனதோடு நினைத்து உள்ளங்கையில் ஐந்து ரூபாயை வைத்துக்கொண்டு பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். பிறகு பின்வரும் இந்த வாராகி அம்மனின் மந்திரத்தை குறைந்தபட்சம் 15 நிமிடம் கூற வேண்டும். 15 நிமிடம் கூறி முடித்த பிறகு திரும்பவும் வாராகி அம்மனிடம் பண வரவு அதிகரிக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து விட்டு கையில் இருக்கக்கூடிய இந்த ஐந்து ரூபாய் நாணயத்தை ஒரு பேப்பரிலோ அல்லது கவரிலோ போட்டு பணம் வைக்கக்கூடிய பிரதான இடத்தில் வைத்து விட வேண்டும். இப்படி நாம் செய்வதன் மூலம் வராகி அம்மனின் மந்திரப் பேராற்றல் அந்த ஐந்து ரூபாய் நாணயத்தில் சென்றடைந்து அது இருக்கக்கூடிய இடத்தில் பண வரவை அதிகரிக்கும்.

- Advertisement -

மந்திரம்

” ஓம் ஐம் க்ளௌம் ஸ்ரீம் அபராஜித ஸ்வர்ண வாராஹ்யை நமஹ “

இதையும் படிக்கலாமே: 11-09-2025 ஆவணி மாத தேய்பிறை பஞ்சமி வழிபாடு

தேய்பிறை பஞ்சமி நாளில் பரிகாரத்துடன் சேர்ந்த இந்த வழிபாட்டை முழுமனதோடு வராகி அம்மனை நினைத்து செய்பவர்களுக்கு வாராகி அம்மனின் அருளோடு குபேரரின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும். பண வரவு அதிகரித்து கடன் பிரச்சினை தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்