ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கக் கூடிய பிரச்சனைகள் தீர வேண்டும் என்றால் அவர்கள் தேய்பிறையில் வரக்கூடிய சிறப்பு மிகுந்த நாட்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி ஒருவரை பாடாய்படுத்தக்கூடிய பிரச்சினைகளில் ஒன்றாக திகழ்வதுதான் கடன் பிரச்சனை. இந்த கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் தேய்பிறையில் வரக்கூடிய பஞ்சமி திதி அன்று வாராகி அம்மனை நினைத்து சில வழிபாடுகளையும் பரிகாரங்களையும் செய்தாலே போதும். அவர்களுடைய கடன் பிரச்சினை முற்றிலும் தீரும். அந்த வகையில் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் மார்கழி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை பஞ்சமி அன்று செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
நம்முடைய கஷ்டங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய தெய்வங்களாக திகழக்கூடியவர்கள் தான் உக்கிர தெய்வங்கள். இந்த உக்கிர தெய்வங்களின் வரிசையில் வாராகி அம்மனும் இடம்பெற்றிருக்கிறார் என்பது முற்றிலும் உண்மை. வாராகி அம்மனை முழுமனதோடு நினைத்து நம்முடைய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று வேண்டினால் கண்டிப்பான முறையில் அந்த கஷ்டங்கள் தீர்வதற்குரிய வழியை வாராகி அம்மன் காட்டுவாள் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் வாராகி அம்மனுக்கு சிறப்பு மிகுந்த திதியாக கருதக்கூடிய தேய்பிறை பஞ்சமியில் வாராகி அம்மனை நினைத்து செய்ய வேண்டிய பரிகாரத்தை இப்பொழுது பார்ப்போம்.
இந்த பரிகாரத்தை டிசம்பர் மாதம் 19ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் அல்லது இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் குரு ஹோரை வரும். இந்த நேரத்தில் செய்யலாம். இந்த நேரத்தில் செய்ய இயலாதவர்கள் மாலை 5 மணியிலிருந்து 8 மணிக்குள் குபேர நேரம் வரும். அந்த நேரத்திலும் செய்யலாம். இதற்கு நமக்கு ஐந்து ரூபாய் நாணயம் வேண்டும். அடுத்ததாக ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஜவ்வாது அல்லது பச்சை கற்பூரத்தை சிறிதளவு சேர்த்து பன்னீர் ஊற்றி குழைத்துக் கொள்ளுங்கள்.
இதை உங்களுடைய மோதிர விரலால் எடுத்து அந்த ஐந்து ரூபாய் நாணயத்தின் மீது வைக்க வேண்டும். பிறகு இதை உங்களுடைய கையில் வைத்துக்கொண்டு “வாராகி தேவி என் வளங்களை பெருக்க எனக்கு ஆற்றலை அளிக்கிறாள்” என்று ஐந்து நிமிடம் தொடர்ச்சியாக நிறுத்தி நிதானத்துடன் மனதில் வாராகி அம்மனை நினைத்துக் கொண்டு கூற வேண்டும். பிறகு உங்களுடைய வீட்டில் யாருக்கு அதிக அளவில் கடன் பிரச்சினை இருக்கிறதோ அவர்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை முற்றிலும் தீர வேண்டும் என்று வாராகி அம்மனிடம் வேண்டிக் கொள்ளுங்கள். ஒருவரை மட்டும் தான் நினைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்குப் பிறகு இந்த ஐந்து ரூபாய் நாணயத்தை ஒரு துணியில் அல்லது வெள்ளை நிற பேப்பரிலோ மடித்து நாம் சமைப்பதற்காக அரிசி கொட்டி வைத்திருக்கும் பாத்திரம் இருக்கும் அல்லவா? அதற்குள் வைத்து விட வேண்டும். ஐந்து நாட்கள் கழித்து அரிசி பாத்திரத்திற்குள் இருக்கக்கூடிய இந்த ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து நாம் சுப காரிய செலவிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பரிகாரத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம். எந்த சூழ்நிலையில் வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு எந்தவித தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே:மார்கழி மாத தேய்பிறை பஞ்சமி வழிபாடு
தேய்பிறை பஞ்சமியில் வாராகி அம்மனை நினைத்து ஐந்து ரூபாயை வைத்து செய்யக்கூடிய இந்த பரிகாரத்தை முழு மனதுடன் செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் கடன் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.