நாளை தேய்பிறை பஞ்சமி. வாராகி தாயை நினைத்து ஒரு கைப்பிடி கல் உப்பை தண்ணீரில் இப்படி கரைத்தால், கடன் சுமை எல்லாம் கரைந்து போகும்.

varahi-cash
- Advertisement -

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான வாராஹி தாய்க்கு உகந்த பஞ்சமி திதி நாளை வரவிருக்கின்றது. அதிலும் தேய்பிறையில் வரவிருக்கும் இந்த பஞ்சமி திதி புதன்கிழமையோடு சேர்ந்து வந்திருப்பதால், மிகவும் சிறப்பு. பண கஷ்டம் தீர, கடன் சுமையில் அவதிப்படுபவர்களுக்கு கஷ்டங்கள் கரைந்து போக, இந்த நாளில் வாராகி வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த பஞ்சமி திதியில் வாராகி வழிபாட்டை முறையாக வீட்டில் எப்படி மேற்கொள்வது, கடன் கரைய நாம் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன என்பதை பற்றிய சுவாரஸ்யமான சில ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

நாளை, மதியத்திற்கு மேல் தான் பஞ்சமி திதி பிறக்கப் போகின்றது. அதாவது 11-01-2023 ம் தேதி மதியம் 2:30 மணிக்கு மேல் பஞ்சமி திதி தொடங்கவிருக்கின்றது. நாளைய தினம் புதன்கிழமை மாலை 6:00 மணிக்கு முன்பாக சுத்தபத்தமாக குளித்துவிட்டு, பூஜையறையை அலங்காரம் செய்து கொள்ளுங்கள். பஞ்சமி திதி, வாராகி பூஜை செய்வதாக இருந்தால், இருட்டிய பிறகு தான் செய்ய வேண்டும். அதாவது இரவு 7 மணிக்கு மேல் இரவு 10 மணிக்குள் இந்த பூஜையை செய்வது சிறப்பு.

- Advertisement -

வழக்கம்போல பூஜை அறையை சுத்தம் செய்து சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு, விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்திற்கு வாராகித் தாயின் திருவுருவப்படம் கட்டாயம் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. வாராஹிதாயின் திரு உருவப்படம் இருந்தால் அந்த படத்திற்கு சிவப்பு அரளிப்பூ அல்லது செம்பருத்தி பூ வைத்து விட்டு விலக்கு ஏற்றி வைத்துவிட்டு, இந்த பரிகாரத்தை செய்ய தொடங்குங்கள். (வாராகி தேவி  திருவுருவப் படம் இருந்தால் நாளை நிவேதனமாக ஏதாவது ஒரு பழம் அல்லது கிழங்கு வகைகளை பிரசாதமாக வைக்க வேண்டும். எதுவுமே முடியாதவர்கள் ஒரு டம்ளர் பானகமாவது வையுங்கள்.)

கடன் தீர பஞ்சமி திதி வாராஹி வழிபாடு:
இந்த பரிகாரத்திற்கு சுத்தமான கிழியாத வெற்றிலை 1,  கல் உப்பு 1 ஸ்பூன், 1 டம்ளர் நிறைய சுத்தமான தண்ணீர் நமக்குத் தேவை. அவ்வளவு தான். எடுத்து வைத்திருக்கும் வெற்றிலையில் கல் உப்பை வைத்து சுருட்டி ஒரு நூல் போட்டு கட்டிக் கொள்ளுங்கள். கல் உப்பு கீழே கொட்டக்கூடாது. இந்த வெற்றிலை கல்லுப்பு சேர்ந்த முடிச்சை வலது உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு, சுவாமியை பார்த்தவாறு அமர்ந்து, வாராகித் தாயை மனம் உருகி வேண்டி, கடன் கரைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

- Advertisement -

ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் மனதை ஒருநிலைப்படுத்தி வாராகி தாயிடம் உங்கள் கடன் கரைய வேண்டுதலை வையுங்கள். அதன் பின்பு வாராகி தாயின் மந்திரங்கள் ஏதாவது தெரிந்தால் சொல்லலாம். வாராகிதாயின் மூலமந்திரம், வாராகித் தாயின் காயத்ரி மந்திரம் என்று உங்களுக்கு தெரிந்ததை உச்சரிக்கலாம். எண்ணிக்கை என்பது உங்களுடைய விருப்பம். மந்திரம் எதுவும் தெரியாது என்பவர்கள் ‘ஓம் வாராஹி தாயே போற்றி’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து விட வேண்டும்.

வெற்றிலை என்பது எந்த விஷயத்திலும் வெற்றியை கொடுக்கக் கூடியது. கல்லுப்பு என்பது மகாலட்சுமியின் அம்சத்தை கொடுக்கக் கூடியது. கல்லுப்பை வைத்து நாம் என்ன வேண்டினாலும் அது உடனே நடக்கும் என்பது நம்மில் நிறைய பேருக்கு தெரியும். ஆகவே இந்த இரண்டு சக்தி வாய்ந்த பொருட்களை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு நீங்கள் என்ன வேண்டிக் கொண்டாலும் அது நேர்மறையாக நடக்கும். அதிலும் பஞ்சமி திதி அன்று வாராஹித் தாயை நினைத்து இந்த பரிகாரத்தை செய்யும் போது பலன் பல மடங்காகும். இறுதியாக கற்பூர ஆரத்தி காண்பித்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு டம்ளர் நிறைய சுத்தமான தண்ணீரை எடுத்துக்கோங்க. வெற்றிலையில் இருக்கும் நூல் அவிழ்த்து உள்ளே இருக்கும் கல் உப்பை உங்களுடைய உள்ளங்கைகளில் கொட்டி அப்படியே அந்த தண்ணீரில் கரையுங்கள். இந்த கல்லுப்பு கரைவது போல உங்களுடைய கடன் சுமையெல்லாம் கரைந்து போக வேண்டும் என்று வாராகி தாயை நினைத்துக் கொண்டே கையில் இருக்கும் உப்பை தண்ணீரில் கரைத்து விடுங்கள். அவ்வளவு தான். தண்ணீரை கொண்டு போய் கால் படாத இடத்தில் ஊற்றி விடலாம்.

இதையும் படிக்கலாமே: இன்று சங்கடஹர சதுர்த்தி! இந்த 1 வார்த்தையை சொல்லி பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் உடைத்தால், வேண்டுதல் உடனே பலிக்கும். சங்கடங்கள் எல்லாம் சுக்கு நூறாக உடைந்து சிதறும்.

வெற்றிலையை பசு மாட்டிற்கு கொடுத்து விடலாம். பரிகாரம் முடிந்தது. இந்த பஞ்சமி திதிக்கு இந்த வழிபாட்டை மேற்கொண்டவர்களுக்கு, நிச்சயமாக அடுத்த பஞ்சமி திதிக்குள் வாழ்க்கையில் நம்ப முடியாத நல்ல மாற்றங்கள் நிகழும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -