நகை பணம் சொத்து சேர வாராகி வழிபாடு

varahi dheepam
- Advertisement -

சப்த கன்னிகளில் அதிசக்தி வாய்ந்த அன்னை ஆனவள் இந்த வாராகி. இந்த வாராகி அன்னை ஒரு காவல் தெய்வம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அத்தகைய அன்னையை நாம் மனதார வழிபட்டால் போதும். நம்மை எந்த துன்பமும் நெருங்காமல் காவல் காக்கும் அன்னையாக இருப்பாள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வாராகி அன்னையை அவருக்கு உகந்த நாளில் வழிபடுவது சிறந்தது.

வாராகி அன்னைக்கு உகந்த நாள் எனில் அது பஞ்சமி திதி தான். அதிலும் நாளைய தினம் செவ்வாய்க்கிழமையுடன் வந்திருக்கக்கூடிய இந்த தை மாத தேய்பிறை பஞ்சமி மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் வாராகி அன்னைக்கு நாம் ஏற்றப்படும் இந்த ஒரு தீபம் நம்முடைய குடும்பம் செல்வ செழிப்புடன் வாழ வழிவகுக்கும். அது என்ன தீபம் எப்படி ஏற்ற வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

கடன் தீர்ந்து செல்வம் பெருக

தேய்பிறை பஞ்சமி திதியானது நாளைய தினம் காலையில் தொடங்கி புதன்கிழமை காலை 9 மணி வரை உள்ளது. அதில் வாராகி அன்னை வழிபாட்டிற்கு மாலை நேரமே சிறந்தது. ஆகையால் நாளை மாலை 5.30 மணிக்கு மேல் 10 மணிக்குள்ளாக இந்த வழிபாடு செய்வது நல்லது. அப்படி செய்ய தவறியவர்கள் புதன்கிழமை காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த பூஜையை செய்து விடுங்கள்.

இந்த வழிபாட்டிற்கு வாராகி அன்னை படம் வைத்திருப்பவர்கள் படத்தை துடைத்து சந்தனம் குங்குமத்தால் பொட்டிட்டு அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அன்றைக்கு பிடித்த செம்பருத்தி மலர் அல்லது செவ்வரளி மலரை சூடி விடுங்கள். வாராகி அன்னை படம் இல்லாதவர்கள் விளக்கிற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி அந்த விளக்கிற்கு பூ வைத்து விடுங்கள் போதும்.

- Advertisement -

வாராகி அன்னைக்கு கிழங்கு வகைகள் மிகவும் பிடிக்கும். ஆகையால் ஏதேனும் ஒரு கிழங்கு வகையை நெய்வேத்தியமாக படைத்து விடுங்கள். அதற்கு மேலும் நெய்வேத்தியம் செய்வது உங்கள் விருப்பம் தான். இப்போது ஒரு பெரிய தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதை சுத்தம் செய்து தட்டி சுற்றிலும் மஞ்சள் குங்குமம் பொட்டிட்டு கொள்ளுங்கள்.

இந்த தட்டில் கொஞ்சமாக மஞ்சளை கொட்டி தட்டு முழுவதும் மஞ்சள் இருக்கும்படி பரப்பி விடுங்கள். அதன் மேல் ஐந்து மண் அகலை வைத்து விடுங்கள். இந்த அகல் விளக்கிற்கும், மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து பூக்களால் அலங்காரம் செய்து விடுங்கள். நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு ஐந்து தீபம் ஏற்றுங்கள். இந்த தீபங்கள் கிழக்கு முகமாக எரியட்டும், நீங்கள் வடக்கு திசை நோக்கி அமர்ந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த வேலையில் வீட்டில் சாம்பிராணி தூபம் போட்டு நல்ல நறுமணமானதாக மாற்றி விடுங்கள். அது தெய்வக் கடாட்சத்தையும் அன்னையின் அருளையும் பெற்று தரும். இப்போது நீங்கள் ஏற்றி வைத்த அகல்விளக்கு முன் அமர்ந்து வாராகி அன்னையின் மந்திரங்கள் தெரிந்தால் பாராயணம் செய்யுங்கள். இல்லை என்றால் ஓம் வாராகி அன்னையே போற்றி என்ற நாமத்தை சொல்லியவாறு பூக்களை விளக்கின் மீது அர்ச்சனை செய்வது போல தூவுங்கள்

வாராகி அன்னையின் இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி பூஜை செய்ய வேண்டும். அப்படி செய்யும் வேளையில் உங்களுடைய துன்பங்கள் கரைந்து போக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அதே போல் நல்ல செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றும் நினைத்து வேண்டுங்கள். இந்த முறையில் நீங்கள் வாராகி அன்னை நினைத்து வேண்டும் போது அந்த வேண்டுதலுக்கு நிச்சயம் அன்னை செவி சாய்பாள்.

இதையும் படிக்கலாமே: சூரிய முக எந்திர சிறப்புகள்

வாராகி அன்னையை மாதந்தோறும் வரும் பஞ்சமி திதிகளில் இதுபோல வழிபட்டு வந்தால் உங்களுடைய துன்பம் துயரம் கடன் தொல்லை பணத்தடை அனைத்தையும் நீக்கி குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் பெருகி நல்ல செல்வ செழிப்புடன் வாழ வைப்பார் நம்பிக்கையுடன் வழிபாடு செய்து வளமுடன் வாழுங்கள்.

- Advertisement -