சூரிய முக எந்திர சிறப்புகள்

surya face
- Advertisement -

கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த கண் திருஷ்டி விளக்குவதற்காக பல வகையான பரிகாரங்களை செய்வார்கள். அதோடு மட்டுமல்லாமல் கண் திருஷ்டி ஏற்படக்கூடாது என்பதற்காக வீட்டு வாசலில் பலவிதமான பொருட்களை வாங்கி மாற்றுவார்கள். அந்த வகையில் கண் திருஷ்டி விளக்கவும் அதே சமயம் பேரும் புகழும் அதிர்ஷ்டமும் கிடைக்கவும் எந்த பொருளை வீட்டு வரவேற்பு அறையில் மாற்ற வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கண் திருஷ்டி என்பது மிகவும் முக்கியமான ஒரு செயலாக கருதப்படுகிறது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். உயிருள்ள பொருட்களுக்கு மட்டுமல்லாமல் உயிரற்ற பொருட்களுக்கும் இந்த கண் திருஷ்டி என்பது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பலரும் அனுபவபூர்வமாக உணர்ந்திருப்பார்கள். அப்படிப்பட்ட கண் திருஷ்டியில் இருந்து விலகுவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான வழியை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த உலக இயங்குவதற்கு காரணமாக திகழக்கூடியவர் சூரிய பகவானே, அப்படிப்பட்ட சூரிய பகவானின் அருளால் நம்முடைய வீட்டில் எந்தவித கண் திருஷ்டியும் தீய சக்திகளும் அணுகாமல் இருப்பதற்கு நாம் சூரிய முக எந்திரத்தை வீட்டில் மாட்ட வேண்டும். இந்த எந்திரத்தை பெரும்பாலும் வட இந்தியர்களை உபயோகப்படுத்துவார்கள். மிகவும் அற்புதமான ஆற்றல் கொண்ட இந்த சூரிய முக எந்திரத்தை நாம் நம் வீட்டில் மாற்றுவதன் மூலம் வீட்டிற்குள் எந்தவித தீய சக்திகளும் அணுகாது.

வீட்டிற்கு வரும் நபர்களின் தீய பார்வைகளால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அதோடு மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும் நபர்களுக்கு பேரும் புகழும் ஏற்படும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உண்டாகும். இப்படி இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்த சூரிய முக எந்திரத்தை நாம் நம்முடைய வீட்டின் வரவேற்பு அறையில் தான் மாற்ற வேண்டும். அதுவும் கிழக்குப் பக்கம் இருக்கக்கூடிய சுவற்றில் ஆணி அடித்து மாட்ட வேண்டும். அப்படி மாட்டும் பொழுது இந்த சூரிய முகமானது மேற்கு திசை பார்த்தவாறு இருக்க வேண்டும்.

- Advertisement -

இன்னும் சிலர் இந்த சூரிய முக எந்திரத்தை வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜை செய்யும் வழக்கமும் வைத்திருப்பார்கள். அப்படி பூஜை செய்வதன் மூலம் சூரிய பகவானின் அருளாசியை நம்மால் பெற முடியும். சிலர் இந்த எந்திரத்தை வீட்டு வாசலில் மாட்டுவார்கள். அதைவிட வீட்டு வரவேற்புரையில் மாற்றுவது தான் மிகவும் சிறப்புக்குரியதாக திகழும். இதை வீட்டில் மட்டுமல்லாமல் தொழில் செய்யும் ஸ்தாபனத்தில் மாட்டுவதன் மூலம் அவர்கள் தொழிலில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கி லாபம் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: கடன் அடைய ஒரு ரூபாய் பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த சூரிய முக எந்திரத்தை நாமும் நம் இல்லங்களிலும் அலுவலகத்திலும் நம்பிக்கையுடன் மாட்டி கண் திருஷ்டியில் இருந்து விலகுவதோடு மட்டுமல்லாமல் அதிர்ஷ்டத்தையும் பெறுவோம்.

- Advertisement -