கடனால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை இழந்து நிம்மதியற்ற சூழ்நிலையில் தவித்துக் கொண்டு இருப்பவர்கள் தங்களுடைய கடனை அடைப்பதற்காக பல முயற்சிகளை செய்வார்கள். அந்த முயற்சிகள் வெற்றி பெறவும், கடன் பிரச்சனை தீரவும் விநாயகப் பெருமானை எந்த முறையில் வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
அடிப்படை தேவைகளுக்காகவும் அவசர தேவைகளுக்காகவும் வாங்கக்கூடிய கடனை விரைவிலேயே அடைத்து விட வேண்டும். தேவையற்ற வீண் விரையங்களுக்கு ஆடம்பர செலவிற்கு கடன்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று கடன் வாங்காமல் இருப்பதற்காக பல வழிமுறைகளை கூறினாலும், அந்த வழிமுறைகளை பின்பற்ற முடியாத பட்சத்தில் தங்களுடைய இக்கட்டான சூழ்நிலையில் வாங்கக்கூடிய கடனை அடைப்பதற்கும், விநாயகரின் அருளை பெறுவதற்கும் செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாடு முறை.
இந்த வழிபாட்டை சனிக்கிழமை அன்று செய்வது மிகவும் சிறப்பு. இயலாதவர்கள் செவ்வாய்க்கிழமை அன்றும் செய்யலாம். அருகில் தோரண கணபதி ஆலயம் இருக்கும் பட்சத்தில் அந்த ஆலயத்திற்கு சென்று தோரண கணபதிக்கு இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அப்படி தோரண கணபதி இல்லாத பட்சத்தில் சாதாரண விநாயகர் ஆலயத்திற்கு சென்றாவது அன்றைய தினம் வழிபாடு செய்துவிட்டு வீட்டிற்கு வரவேண்டும்.
வீட்டில் இருக்கக்கூடிய விநாயகர் சிலை அல்லது படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். அவருக்கு அருகம்புல்லை சமர்ப்பித்து வாசனை மலர்களால் அவரை அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். இதற்கு அடுத்தார் போல் அவருக்கு நெய்வேத்தியமாக டைமண்ட் கற்கண்டு, உடையாத நல்ல ஏலக்காயாக பார்த்து இரண்டு ஏலக்காய் என்று வைக்க வேண்டும்.
பிறகு அவருக்கு முன்பாக ஒரு தாம்பாளத்தை வைத்து அந்த தாம்பாளத்தில் ஒரு சுத்தமான அகல் விளக்கை வைத்து அதில் நெய் ஊற்றி சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய இரண்டு திரிகளை ஒன்றாக இணைத்து தீபம் ஏற்ற வேண்டும். பிறகு அந்த தீபத்திற்கு முன்பாக அமர்ந்து ஒரு மந்திரத்தை கூற வேண்டும். இந்த மந்திரத்தை ஒரு முறை கூறினால் போதும்.
மந்திரம்
சக்தி மேகல வாசம்
சகல கல்யாண மூர்த்திம்
அங்குச பாச ஹஸ்தம்
கிரீட மகுட தாத்ரீம்
அஷ்ட லக்ஷ்மி சகிதம்
தோரண கோபுர நேத்ரம்
ருண மோசன கணேஷம்
நௌமி ஸதா ப்ரசன்னம்!
இந்த முறையில் தொடர்ந்து ஆறு வாரங்கள் விநாயகர் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்து விட்டு வீட்டிற்கு வந்து விநாயகருக்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்து மந்திரத்தை கூற வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கடன் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். கடனை அடைப்பதற்குரிய பணவரவு ஏற்படும். மேலும் கடனை அடைப்பதற்காக நாம் மேற்கொள்ளும் முயற்சிகளும் வெற்றி அடையும்.
இதையும் படிக்கலாமே: பணவரவில் இருக்கும் தடைகள் நீங்க பரிகாரம்
மிகவும் எளிமையான இந்த விநாயகர் வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்கள் வாழ்க்கையில், ருணவிமோசனம் ஏற்பட்டு கடன் அற்ற நிலை உண்டாகும்.