- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர்க்கும் ஆடிப்பெருக்கு வழிபாடு

கடன் தீர்க்கும் ஆடிப்பெருக்கு வழிபாடு

- Advertisement -

கடன் இல்லாத நபர்களை இந்த உலகத்தில் தேடி கண்டுபிடிப்பது என்பது மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கிறது. கடனே வாங்கக்கூடாது என்று நினைப்பவர்களை கூட ஏதாவது ஒரு சூழ்நிலையில் கடன் வாங்க வைத்துவிடும் அவல நிலையும் இங்கு நடைபெறுகிறது. அமைதியாக இருப்பவர்களை கூட வங்கிகளில் வேலை செய்பவர்கள் இதை தருகிறோம் அதை தருகிறோம் குறைந்த வட்டிக்கு கடன் தருகிறோம் என்று கூறி மனதை மாற்றி கடன் வாங்க வைத்து விடுகிறார்கள். கடன் வாங்குவது எந்த அளவிற்கு சுலபமோ அதைவிட பல மடங்கு கஷ்டமானது அந்த பணத்தை திருப்பி அடைப்பது. பலரும் கடனை வாங்கிவிட்டு திருப்பி செலுத்த முடியாமல் வட்டியை கட்டி போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் கடன் பிரச்சினையை தீர்ப்பதற்காக ஆடிப்பெருக்கு நாளன்று செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கடன் தீர ஆடிப்பெருக்கு வழிபாடு

கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமையில் முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள். அதே போல் சனீஸ்வர பகவானையும் வழிபாடு செய்வார்கள். இதை தவிர்த்து சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்மரையும் வழிபாடு செய்யும் வழக்கத்தையும் வைத்திருப்பார்கள். தங்களுடைய இஷ்ட தெய்வம் எதுவோ அந்த தெய்வத்தை மனதார நினைத்து அந்த தெய்வத்திற்குரிய நாளில் கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று வழிபாடு செய்பவர்கள் பலர் இருப்பார்கள். இதோடு சேர்த்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கடனுக்குரிய அசல் தொகையை எடுத்து வைத்து வழிபாடு செய்யும் பொழுது அந்த கடன் விரைவில் அடையும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் தான் ஆடிப்பெருக்கு நாளில் செய்யக்கூடிய வழிபாடும் திகழ்கிறது.

- Advertisement -

இந்த வழிபாட்டை ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பெருக்கு நாளில் செய்ய வேண்டும். காலை 11 மணியிலிருந்து 12 மணிக்குள்ளோ அல்லது மாலை 6:00 மணியிலிருந்து 7 மணிக்குள்ளோ இந்த வழிப்பாட்டை செய்ய வேண்டும். இந்த இரண்டு நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். வீட்டு பூஜை அறையில் ஒன்று அல்லது மூன்று என்ற எண்ணிகையில் நெய் தீபங்களை ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும். சிவப்பு நிற கயிறை வாங்கி தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

நமக்கு எத்தனை கடன் பிரச்சினைகள் இருந்தாலும் அது ஒன்றாக இருந்தாலும் சரி பத்தாக இருந்தாலும் சரி ஒவ்வொரு கடன் பிரச்சினைக்கும் தனித்தனியாக நம்மால் இயன்ற தொகையை கையில் வைத்துக்கொண்டு அந்த கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று மனதார இறைவனை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு வழிபாடு செய்த பிறகு கையில் வைத்திருக்கும் அந்த பணத்தை சிவப்பு நிற நூலை வைத்து கட்டி ஒரு தட்டில் வைத்து விடுங்கள். இப்பொழுது ஐந்து கடன் பிரச்சனை இருக்கிறது என்றால் தனித்தனியாக ஐந்து ரூபாய் நோட்டுகளை எடுத்து ஒவ்வொரு கடன் பெயரையும் கூறி அந்த கடன் விரைவில் அடைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு சிவப்பு நிற நூலை சுற்றி வைக்க வேண்டும்.

- Advertisement -

ஐந்து ரூபாய் நோட்டுகளையும் நூலை சுற்றி வைத்துவிட்டு கற்பூர தீப தூப ஆராத்திரி காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விடுங்கள். நாம் சிவப்பு நிற நூலில் கட்டி இந்த ரூபாய் நோட்டுகளை எடுத்து பணம் வைக்கும் லாக்கரிலோ அல்லது பீரோவிலோ வைத்து விட வேண்டும். இப்படி ஆடிப்பெருக்கு நாளில் நாம் செய்வதன் மூலம் அந்த கடன் தொகைக்குரிய அசலை கட்டுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். விரைவிலேயே கடன் பிரச்சினையும் தீரும்.

இதையும் படிக்கலாமே: ஆடிப்பெருக்கு புனித நீராடுதல்

மிகவும் எளிமையான இந்த வழிபாட்டை ஆடிப்பெருக்கு நாளில் செய்பவர்களுக்கு அவர்களுடைய கடன் பிரச்சினை தீருவதற்குரிய பணவரவு உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்