தீராத கடன் தீர காலபைரவர் வழிபாடு செய்து உங்கள் காலணிகளை இப்படி தொலைத்து விட்டு வாருங்கள்!

bairavar-slipper
- Advertisement -

ஒரு மனிதனுக்கு எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் அதிலிருந்து அவன் சுலபமாக வெளி வந்துவிடுவான். ஆனால் கடன் பிரச்சனை தலைதூக்க ஆரம்பித்து விட்டால் அவனுக்கு பீடை பிடித்து விட்டதாக அர்த்தம் வந்து விடுகிறது. காலை பிடித்த பீடை அவ்வளவு சுலபமாக நம்மை விட்டு நீங்குவது இல்லை. அதே போல ஒரு முறை கடன் வாங்கி பழகி விட்டால் அடுத்தடுத்து கடன் வாங்கி ஏதாவது ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டு விடுகிறோம். அதிலிருந்து மீள முடியாமல் அவதிப்பட்டு வரும் தீராத கழுத்தை நெறிக்கும் கடனையும் சுலபமாக தகர்த்தெறியும் அற்புத பரிகாரம் தான் இந்த கால பைரவர் பரிகாரம். இந்த பரிகாரத்தை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

kala-bairavar

கவலைகளையும், கடன்களையும் தீர்க்கும் அற்புத கடவுள் காலபைரவர். காலபைரவரை வேண்டி வணங்கியவர்களுக்கு எந்த விதமான தடைகளும் ஏற்படாமல் நினைத்தது நினைத்தபடி நடக்கும் என்பது தெய்வீக நம்பிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் நம்முடைய கடன் பிரச்சினைக்கு தீர்வு தரும் இந்த கால பைரவர் வழிபாடு யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம்.

- Advertisement -

கடன் வாங்கியவர்கள் ஏதாவது ஒரு சூழ்நிலையில் திருப்பிக் கொடுக்க முடியாத பொழுது கடன் கொடுத்தவர்கள் கண்டபடி பேசி விடுவது உண்டு. அந்த கடன் தொகையை கடன் வாங்கியவர்கள் எப்படியாவது வட்டியுடன் திருப்பிக் கொடுத்து விடுவார்கள் ஆனால் பேசிய வார்த்தைகளை மீண்டும் மீட்டு எடுக்க முடியுமா? எனவே கடன் கொடுத்தவர்கள் சற்று கவனத்துடன் வார்த்தைகளை பயன்படுத்துவது தான் நல்லது. இல்லை என்றால் உங்களுக்கும் இந்த வார்த்தைகள் மூலம் பீடை பிடிக்க வாய்ப்புகள் உண்டு.

kadan

‘தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு’ என்ற வள்ளுவன் வாக்கிற்கு இணங்க வார்த்தைகளில் கவனம் செலுத்தி ஒருவருடைய கஷ்ட நஷ்டங்களை புரிந்து கொண்டு பேசுவது நல்லது. தீராத கடனும் தீர்வதற்கு ஒரு நல்ல நாளில் இந்த பரிகாரத்தை ஆரம்பியுங்கள். நீங்கள் ஆரம்பிக்கும் நாள் தேய்பிறை அஷ்டமியாக இருப்பது நல்லது. அதே போல இந்த பரிகாரத்தை முடிப்பதும் தேய்பிறை அஷ்டமியில் தான் முடிக்க வேண்டும்.

- Advertisement -

தேய்பிறை அஷ்டமி நாளில் வீட்டில் ஒரு மரப்பலகையை பூஜை அறையில் வைத்து அதற்கு மஞ்சள் தடவிக் கொள்ளுங்கள். அதன் மீது கருப்பு நிற துணியை விரித்து கொள்ளுங்கள். இருபத்தி ஏழு நாட்கள் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்துவிட்டு ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு வர வேண்டும். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ஒரு ரூபாய் நாணயங்கள் ஆக தினமும் இரண்டு ரூபாய் போட வேண்டும்.

slipper

இருபத்தி ஏழு நாட்கள் கழித்து 54 ரூபாய் நாணயங்களை அந்த கருப்பு துணியில் அப்படியே முடிந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேய்பிறை அஷ்டமி நாள் வரும் வரை காத்திருந்து அந்த நாளில் கொண்டு போய் காலபைரவர் சந்நிதியில் இருக்கும் உண்டியலில் சேர்த்து விடுங்கள். பின்னர் பிரார்த்தனைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் பொழுது வலது கால் செருப்பை ஒரு இடத்திலும், பின்னர் இடது கால் செருப்பைத் வேறு ஒரு இடத்திலுமாக வெவ்வேறு இடங்களில் தொலைத்து விட்டு வெறும் காலில் வீட்டிற்கு வந்து கால்களை கழுவி விட்டு பூஜையை நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்ய எவ்வளவு கடன் தொகைகள் உங்களுக்கு இருந்தாலும் அவைகள் விரைவாக நீங்கிவிடும் என்பது நியதி.

- Advertisement -