- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர்க்கும் மைத்ரேய முகூர்த்த பரிகாரம்

கடன் தீர்க்கும் மைத்ரேய முகூர்த்த பரிகாரம்

- Advertisement -

நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது ஒரு கடன் என்பது இருக்கத்தான் செய்யும். யார் ஒருவர் வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்கள் அயராது உழைத்து எப்படியாவது வாங்கிய கடனை திருப்பித் தர வேண்டும் என்றே முயற்சி செய்வார்கள். இருப்பினும் அவர்களால் அந்த முயற்சியில் வெற்றி பெற இயலவில்லை என்னும் பட்சத்தில் ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய மைத்ரேய முகூர்த்தத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படிப்பட்ட மைத்ரேய முகூர்த்த நாளில் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மைத்ரேய முகூர்த்த பரிகாரம்

ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நாள் மைத்ரேய முகூர்த்தம் என்பது வரும். அதிலும் குறிப்பாக அந்த முகூர்த்தம் இருக்கக்கூடிய நேரத்தில் நாம் வாங்கிய கடனிலிருந்து அசல் தொகையை சிறிதளவாவது திருப்பி செலுத்தினோம் என்றால் அந்த கடனை அடைப்பதற்குரிய வழி உண்டாகும் என்றும் விரைவிலயே அந்த கடனை அடைத்து விடலாம் என்றும் கூறி கேள்விப்பட்டு இருக்கிறோம். அந்த வகையில் மைத்ரேய முகூர்த்தம் வரக்கூடிய நாளாக தான் மே மாதம் 13ஆம் தேதி திகழ்கிறது. அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை என்பதால் இந்த மைத்ரேய முகூர்த்தத்திற்கு அதிக அளவில் பலன் இருக்கிறது.

- Advertisement -

அப்படிப்பட்ட மைத்ரேய முகூர்த்த நேரம் வரக்கூடிய நாளில் நாம் எலுமிச்சம் பழத்தை வைத்து ஒரு பரிகாரத்தை செய்வதன் மூலம் நம்முடைய கடன் பிரச்சனை தீர்வதற்குரிய வருமானம் உண்டாகும். இந்த பரிகாரத்தை மே மாதம் 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 12 மணியிலிருந்து 1:30 மணிக்குள் செய்ய வேண்டும். நல்ல எலுமிச்சம் பழமாக ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து அதை சரிசமமாக நறுக்கி அதன் சாறை பிழிந்து அதை திருப்பி அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து ஒரு சிறிய தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் நெய் ஊற்றி சிவப்பு திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள்.

பிறகு நாம் எத்தனை நபர்களிடம் பணத்தை கடனாக வாங்கி இருக்கிறோமோ அத்தனை கவரை எடுத்து அதற்குள் ஏதாவது ஒரு தொகையை வைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக இரண்டு பேரிடம் கடன் வாங்கி இருந்தால் இரண்டு கவரை எடுத்து அந்த கடன் தொகையில் அசல் தொகையிலிருந்து ஏதாவது ஒரு குறிப்பிட்ட அளவு 10 ரூபாயாக இருந்தாலும் பரவாயில்லை அதை அந்த கவருக்குள் போட்டு வைத்து விடுங்கள். பிறகு ஒரு பிரியாணி இலையை எடுத்து யாரிடமிருந்து கடன் வாங்கினோமோ அவர்களின் பெயரை எழுத வேண்டும், எவ்வளவு கடன் வாங்கினோம் என்பதையும் எழுதி அதை கவரின் மேல் வைத்து விடுங்கள். இந்த பிரியாணி இலைக்கு மேல் ஒரு துண்டு பச்சை கற்பூரத்தையும் வைத்து விடுங்கள். இப்படி எத்தனை கவர் வைத்திருக்கிறோமோ அத்தனை கவருக்கும் செய்ய வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது பிரியாணி இலையை எடுத்து நம்முடைய கைக்குள் வைத்து அந்த எலுமிச்சம் பழ தீபத்தை வணங்கியபடி பின்வரும் இந்த ஒரு மந்திரத்தை 27 முறை கூற வேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு பிரியாணி இலையை அந்த எலுமிச்சம் பழ தீபத்தில் காட்டி முற்றிலுமாக எரித்து விட வேண்டும். பிறகு நாம் வைத்திருந்த அந்த பச்சை கற்பூரத்தை எடுத்து நன்றாக நுணுக்கி பணம் வைக்கும் இடத்தில், கல்லாப்பெட்டியில், பர்ஸ்ஸில் போட்டு விட வேண்டும். கவரில் இருக்கும் பணத்தை எப்பொழுது நாம் கடனை அடைக்கப் போகிறோமோ அல்லது கடன் தொகையை திரும்ப செலுத்தப் போகிறோமோ அப்பொழுது அதனுடன் சேர்த்து வைத்து கொடுத்து விட வேண்டும்.

மந்திரம்

“ஓம் ரிங் வசி வசி தனம் பணம் தினம் தினம்”

இதையும் படிக்கலாமே:அதிர்ஷ்டமும் யோகமும் தேடி வர

மைத்ரேய முகூர்த்தம் வரக்கூடிய நாளில் இந்த முறையில் முழு நம்பிக்கையுடன் பரிகாரம் செய்து விட்டு கடனை அடைப்பதற்குரிய முயற்சியை மேற்கொள்ளும் பொழுது கண்டிப்பாக முறையில் அந்த முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு விரைவிலேயே கடன் பிரச்சினையை தீர்க்கலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்