- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅதிர்ஷ்டமும் யோகமும் தேடி வர

அதிர்ஷ்டமும் யோகமும் தேடி வர

- Advertisement -

வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய சித்ரா பௌர்ணமி நாள் என்பது மிகவும் சிறப்பு மிகுந்த நாளாக திகழ்கிறது. இந்த வருடம் சித்ரா பௌர்ணமி என்பது சந்திர பகவானுக்குரிய கிழமையான திங்கட்கிழமையுடன் சேர்ந்து வருவது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகவே கருதப்படுகிறது. அப்படிப்பட்ட நாளில் நாம் செய்யக்கூடிய சந்திர வழிப்பாடாக இருந்தாலும் சரி சிவபெருமானின் வழிபாடாக இருந்தாலும் சரி அதற்கு பல மடங்கு பலன் கிடைக்கும் என்றே கூறப்படுகிறது. அந்த வகையில் நம்மை தேடி அதிர்ஷ்டமும் யோகமும் வருவதற்கு செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

அதிர்ஷ்டமும் யோகமும் தேடி வர

ஒரு சிலர் எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த முயற்சிகள் வெற்றி அடையாது. தோல்விகளை மட்டுமே சந்தித்துக் கொண்டு இருப்பார். இன்னும் சிலர் இருக்கிறார்கள் ஏனோ தானோ என்று செய்வார்கள். ஆனால் அவர்கள் செய்தது வெற்றிகரமாக நடைபெற்று எதிர்பாராத அளவிற்கு நல்ல மாற்றங்கள் வாழ்க்கையில் உண்டாகும். அப்படிப்பட்டவர்களை பார்த்ததும் அதிர்ஷ்டகாரன்யா யோகக்காரன்யா என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட அதிர்ஷ்டமும், யோகமும் நம்மை தேடி வருவதற்கும் நாம் செய்யும் முயற்சிகளில் பல மடங்கு வெற்றிகள் பெறுவதற்கும் செய்ய வேண்டிய ஒரு சூட்சுமமான பரிகார வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

சித்திரகுப்தன் அவதரித்த நாளான சித்ரா பௌர்ணமி நாளன்று சந்திர பகவானை நாம் கண்டிப்பான முறையில் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி சந்திர பகவானை நாம் வழிபாடு செய்யும்பொழுது சில சூட்சமமான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இப்படி பின்பற்றுவதன் மூலம் சந்திர பகவானின் அருளோடு மட்டுமல்லாமல் சிவபெருமானின் அருளையும் நம்மால் பரிபூரணமாக பெற முடியும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் சித்ரா பௌர்ணமி இன்று இரவு 10 மணி 44 நிமிடம் வரை இருக்கிறது. இந்த நேரத்திற்குள் வானத்தில் முழு நிலவு தோன்றிய பிறகு சந்திர தரிசனத்தை நாம் மேற்கொள்ள வேண்டும்.

அப்படி சந்திர தரிசனத்தை மேற்கொள்ளும் பொழுது சந்திர பகவானுக்கு உரிய தானியமான நெல் அல்லது பச்சரிசியை கையில் வைத்துக்கொண்டு சந்திர பகவானை தரிசனம் செய்ய வேண்டும். வீட்டில் நெல், பச்சரிசி இல்லை என்பவர்கள் சமையலுக்கு உபயோகப்படுத்தும் அரிசியை கூட கையில் வைத்துக் கொள்ளலாம். இப்படி கையில் வைத்துக்கொண்டு சந்திர பகவானை பார்த்தவாறு சந்திர பகவானுக்குரிய மந்திரமான “ஓம் சந்திரமௌலீஸ்வராய நமோ நமஹ” என்னும் மந்திரத்தை மூன்று முறை கூறினால் போதும்.

- Advertisement -

பிறகு வீட்டிற்கு வந்து அரிசியை எங்கிருந்து எடுத்தோமோ அங்கேயே திருப்பி வைத்து நம்முடைய தேவைக்கு நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முறையில் சித்ரா பௌர்ணமி நாளன்று சந்திர பகவானை தரிசனம் செய்து சந்திர பகவானுக்குரிய மந்திரத்தை கூறுபவர்களுக்கு அவர்கள் வாழ்வில் இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கி அதிர்ஷ்டமும் யோகமும் அவர்களை தேடி வரும், வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாக்கும்.

இதையும் படிக்கலாமே:சித்ரா பௌர்ணமி அன்று செய்ய வேண்டிய 5 முக்கியமான வழிபாட்டு முறைகள்

வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய சித்ரா பௌர்ணமி நாளன்று எளிமையான இந்த சந்திர தரிசனத்தை முழுமனதோடு செய்பவர்களுக்கு அவர்களைத் தேடி அதிர்ஷ்டமும், யோகமும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்