இருள் சூழப்பட்டிருக்கும் உங்களுடைய வாழ்க்கை ஒளிமயமானதாக மாற வேண்டும் என்றால், அனுதினமும் செய்ய வேண்டிய விநாயகர் வழிபாட்டை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். தினமும் விநாயகரை மனதார நினைத்து கண் விழிப்பவர்களுக்கு கஷ்டங்கள் நெருங்காது என்பது உண்மையான ஒரு கருத்து.
தினம் தினம் காலையில் கண்விழிக்கும் போதே விநாயகா என்னை காப்பாற்று என்று சொல்லிவிட்டு எழுந்தாலே உங்கள் கஷ்டங்கள் தீர்ந்துவிடும். இதன் அடிப்படையில் விநாயகரை நினைத்து காலையில் இந்த மந்திரத்தை நீங்கள் சொன்னாலும் சரி, அல்லது இந்த மந்திரத்தை உங்கள் காதால் கேட்டாலும் சரி உங்களுக்கு பிரச்சனைகளே வராது. அது என்ன மந்திரம் ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
அதிகாலை எழுந்து 4:30 மணிக்கு இந்த மந்திரத்தை சொல்லுபவர்களுக்கு வாழ்க்கையில் தோல்வியே வராது. பிரச்சனையும் வராது, பிரச்சனைகள் வந்தாலும், தோல்விகள் வந்தாலும் பெரிய அளவில் பாதிப்புகள் கொடுக்காது. இதுதான் சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகள். ஆனால் எல்லோராலும் இன்று இருக்கும் சூழ்நிலையில் அதிகாலை 4:00 மணிக்கு எழுந்து இந்த மந்திரத்தை சொல்லுவது சாத்தியம் இல்லை என்ன செய்யலாம்.
காலை 4:00 மணி போல இந்த மந்திரத்தை உங்களுடைய கைபேசியில் அலாரம் ரிங்டோனாக செட் செய்து விடுங்கள். காலையில் ஒரு முறை இந்த மந்திரம் அதுவே பாடும். அதை உங்கள் காதல் கேட்டுக் கொள்ளுங்கள் போதும். உங்களுடைய நாள் இனிய நாளாக அமையும். நம்முடைய மொபைல் போனில் செட் செய்ய வேண்டிய அந்த பாடல் வரிகள் என்ன. இதோ அந்த விநாயகர் ரகசிய பாடல் வரிகள் உங்களுக்காக.
விநாயகர் மந்திரம்
ஓம் ஆதி மூலம் பரமகுருவே நம் நம் திரி திரி கணபதியே சகல லோகமும், சகல ஜனனமும், சகல தெய்வமும் சகல சித்தியும் சகல புத்தியும் உமது வசம் ஆனது போல் நீர் என் வசம் ஆக சிவ.
இவ்வளவுதான் எளிமையான தமிழில் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த பாடல் வரிகளை தொடர்ந்து, 20 நாள் உச்சரித்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் பிறகு நம்ப முடியாத நல்ல அதிசயங்கள் நடக்க தொடங்கிவிடும். இதோடு சேர்த்து தினமும் வீட்டு பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு செல்லலாம்.
இதையும் படிக்கலாமே: செவ்வாய்க்கிழமை வாராகி வழிபாடு
இல்லையென்றால் அருகம்புல் வாங்கி உங்கள் வீட்டு பிள்ளையாருக்கு சாத்தி வழிபாடு செய்யலாம். இப்போது இன்னும் ஒரு சில நாட்களில், அதாவது வரும் சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி வரவிருக்கின்றது. அன்றைய நாள் முதல் இந்த வழிபாட்டை நீங்கள் தொடங்கினாலும் ரொம்ப ரொம்ப நல்லது. நம்பிக்கை உள்ளவர்கள் இன்று இந்த வழிபாட்டை செய்ய தொடங்கலாம். நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.