நாளைய தினம் 11-4-2025 வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து இந்த வருட பங்குனி உத்திரம் வரவிருக்கிறது. இந்த நாள் முருகன் வழிபாடு செய்வது அதி விசேஷமான பலனை தரும் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். இந்த உத்திர நட்சத்திரத்தன்று மீனம் ராசியில் சூரியன், சுக்கிரன், புதன், ராகு, சனி, ஆகிய நட்சத்திரங்கள் ஒன்று கூடும் யோகமும் சேர்ந்து இருக்கிறது.
இந்த உத்திர நாளில் முருகப்பெருமானை வழிபாடு செய்தால் வாழ்க்கையில் கீழ் நிலையில் இருப்பவர்கள் கூட, சீக்கிரம் வாழ்க்கையில் உயர்ந்த நிலைமைக்கு செல்வார்கள் என்பது நம்பிக்கை. காரணம் உத்திரம் என்பது நம்மை மேலே உயர்த்தி விடக்கூடிய நட்சத்திரம். வீட்டில் இருக்கும் பரணைக்குக்கு உத்திரம் என்ற ஒரு வார்த்தையும் இருக்கிறது.
ஆக இந்த உத்திர நட்சத்திரத்தை விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள். முருகர் வழிபாட்டை நம்பிக்கையோடு செய்யுங்கள். நிச்சயம் வாழ்க்கையில் நீங்கள் முன்னேறிவிடலாம். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால், முதலில் நமக்கு இருக்கக்கூடிய கடன் சுமை குறைய வேண்டும். கடன் பிரச்சனையிலிருந்து வெளிவந்து விட்டாலே போதும். தேவையற்ற அவமானங்கள் இருக்காது. தேவையற்ற பிரச்சனைகள் இருக்காது. மன குழப்பம் நீங்கும், மன அமைதி கிடைக்கும். வாழ்க்கையில் சந்தோஷம் பிறக்கும்.
இந்த கடன் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கு செவ்வாய் பகவான் நமக்கு கருணை காட்ட வேண்டும். செவ்வாய் பகவானை சரி செய்து விட்டால், கடன் சுமையிலிருந்து சுலபமாக விடுபடலாம். கடன் மட்டுமா. செவ்வாய் பகவான் நமக்கு சரியாக இருந்தால், திருமணம் நடக்கும். இல்லற வாழ்க்கை இனிக்கும். நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனை தீரும். வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனை தீரும். சொந்தமாக வீடு நிலம் வாங்குவதற்கு உண்டான வாய்ப்புகளும் கிடைக்கும். அட இத்தனை நன்மைகளும் நடக்கக்கூடிய அந்த செவ்வாய் பகவானை எப்படி சரி கட்டுவது.
கடன் தீர்க்கும் பங்குனி உத்திர வழிபாடு
நாளைய தினம் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து பங்குனி உத்திர தினம் வருது அல்லவா. அந்த நாளில் வரும் செவ்வாய் ஹோரையில் முருகனுக்கு 6 நெய் விளக்கு ஏற்றி வைத்து முருகன் முன்பாக ஒரு சின்ன கிண்ணத்தில் துவரம் பருப்பை போட்டு வைத்து, மனம் உருகி உங்கள் கடன் சுமை நீங்க வேண்டும் என்று பிரார்த்தனை வைத்தாலே போதும். கடன் சுமை நீங்கிவிடும்.
பணத்தோடு சம்பந்தப்பட்ட மற்ற பிரச்சனைகளும் சரியாகும். வாழ்க்கையில் நீங்கள் சீக்கிரம் உயர்ந்த இடத்திற்கு செல்வீர்கள். வெள்ளிக்கிழமை செவ்வாய் ஹோரை மதியம் 11 மணியிலிருந்து 12 மணி வரை இருக்கிறது. இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்றும் இந்த தீபத்தை போடலாம். வீட்டில் இருந்தபடியேவும் இந்த விளக்கை போட்டு, முருகனிடம் மனம் உறங்கி வேண்டிக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: வேண்டுதல் நிறைவேற பங்குனி உத்திர வழிபாடு
நம்பிக்கை இல்லாமல் செய்வதன் மூலம் எந்த பலனும் கிடையாது. நீதான் முருகா இதை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அவரிடம் பிரச்சினையை முழுதாக ஒப்படைத்து பாருங்கள். ஒரே நாளில் உங்கள் கடன் சுமை உங்களை விட்டு வெளியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. முருகனை வணங்கினால் முடிவில்லா பிரச்சனைகளுக்கும் சீக்கிரம் முடிவு கிடைக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.