- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

கடன் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

- Advertisement -

கடன் சுமை இல்லாத மனிதர்களே இந்த உலகத்தில் இல்லை என்று சொல்லலாம். அவரவர் தகுதிக்கு ஏற்ப அவரவருக்கு கடன் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு, கடன் வாங்கி செலவு செய்து, கடன் வாங்கி சீர் செய்து, வாழ்க்கையை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள். உங்கள் தகுதிக்கு ஏற்ப வாழ்க்கையை நடத்துங்கள்.

ஆடம்பரம் வேண்டாம். அடுத்தவர்களுக்காக வாழ வேண்டாம். சிக்கனமாக செலவு செய்து வரக்கூடிய வருமானத்தை வைத்து வாழ்பவர்களுக்கு நிச்சயம் இந்த கடன் பிரச்சனை இல்லாமல் இருக்கும். நிம்மதியான வாழ்க்கையும் கிடைக்கும். சரி, கடன் வாங்கியாச்சு. இந்த பிரச்சனையில் இருந்து விடுபட என்ன தீர்வு இருக்கு. ஆன்மீகம் சொல்லும் ஒரு எளிமையான வழிபாடு இருக்கிறது. இதை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு கடன் பிரச்சனையிலிருந்து விமோசனம் கிடைக்கும்.

- Advertisement -

கடன் பிரச்சனையை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி விநாயகர் வழிபாடு

மூன்று சங்கடஹர சதுர்த்திக்கு தொடர்ந்து இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். முதலில் இதற்கு நம் கையால் ஒரு மாலை கட்ட வேண்டும். வன்னி மரத்து இலை, அருகம்புல் இந்த இரண்டையும் சேர்த்து வைத்து நூலால் மாலையாக கட்டி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். கொழுக்கட்டைகள் பிரசாதமாக செய்ய வேண்டும்.

108 கொழுக்கட்டைகள் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அரச மரத்தடியில் இருக்கும் பிள்ளையாருக்கு தான் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அரச மரத்தடி பிள்ளையாருக்கு நீங்கள் கட்டி வைத்திருக்கும் அந்த வன்னி இலே, அருகம்புல் மாலையை சாத்தி விடுங்கள். கொழுக்கட்டையை பிள்ளையாருக்கு முன்பாக வையுங்க.

- Advertisement -

இரண்டு தேங்காயை உடைத்து, வெற்றிலை பாக்கு பூ, பழம், வைத்து கற்பூர ஆரத்தி காண்பித்து விநாயகரை வழிபாடு செய்து கொள்ளுங்கள். மனம் உருகி உங்களுடைய கடன் சுமை கரைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வழிபாட்டை முடித்துவிட்டு. அந்த 108 கொழுக்கட்டைகளையும் ஏழை எளியவர்களுக்கு அன்னதானமாக கொடுத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: டிசம்பர் மாதத்தில் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்

பரிகாரம் முடிந்தது. இதேபோல மூன்று சங்கடஹர சதுர்த்திக்கு தொடர்ந்து பிள்ளையாரை வழிபாடு செய்தால் உங்கள் கடன் பிரச்சனை நிச்சயம் குறையும் என்பது நம்பிக்கை. நேற்றைய தினம் தான் சங்கடஹர சதுர்த்தி ஆனது முடிந்திருக்கிறது. அடுத்த 15 நாட்களில் சங்கடஹர சதுர்த்தி வரும். அதற்குள் நீங்கள் உங்களுடைய வழிபாடு செய்ய தயாராகிக் கொள்ளுங்கள். நிச்சயம் உங்களுக்கு நல்லது நடக்கும் என்ற இந்த தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்