டிசம்பர் மாதத்தில் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்

cash in hand jathagam logo
- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகங்களும் தங்களுடைய இருப்பிடத்தை சில குறிப்பிட்ட காலத்திற்கு மாற்றிக் கொண்டே இருக்கும். இதன் மூலம் அனைத்து ராசிகளுக்கும் பலன்கள் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் குரு, சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய ஐந்து கிரகங்கள் தங்களுடைய நிலையை மாற்ற உள்ளன.

இந்த கிரகங்களின் மாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் மாறுதல் நிகழும். அதில் சில ராசிகளுக்கு பெரும் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடியதாக அமைய போகிறது. அந்த வகையில் இந்த கிரகங்களின் மாற்றமானது எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கப் போகிறது என்பதை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

ரிஷபம்

டிசம்பர் மாதம் இந்த ராசியினருக்கு வெகு சிறப்பான மாதமாக உள்ளது. இந்த மாதத்தில் இவர்கள் வீடு, மனை, வண்டி வாங்கக் கூடிய நல்ல சூழ்நிலைகள் உருவாக உள்ளது. வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சுற்றத்தாரும் உறவினர்களும் அனுசரித்து போகக் கூடிய காலக்கட்டம் இது. உங்களுடைய நெடுநாள் ஆசைகள் கை கூடும். பணவரவில் தடை இல்லாமல் இருக்கும். இந்த மாதம் உங்களுக்கு பொன்னான மாதம் என்றே சொல்லலாம்.

துலாம்

இந்த ராசியினருக்கு டிசம்பர் மாதம் பல நன்மைகளை தரக்கூடியதாக அமைந்துள்ளது. வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கக் கூடிய வாய்ப்பு உண்டு. தங்களுடைய பேச்சுத் திறமையால் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களின் ஸ்தானங்கள் விரிவு அடையும். பணி இடங்களில் சாதகமான சூழ்நிலை அமையும் இதன் மூலம் பணவரவும் அதிகரிக்கும். வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு பொன்னான காலம் இது.

- Advertisement -

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வெகு சிறப்பாக உள்ளது. இந்த மாதத்தில் சொத்துக்களை வாங்கக் கூடிய யோகம் உண்டு. சுக்கிரன் மற்றும் செவ்வாயின் இந்த மாற்றத்தினால் தொழிலில் நல்ல லாபத்தையும் முன்னேற்றத்தையும் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக புதிய தொழில் தொடங்க விரும்பியவர்கள் இந்த மாதத்தில் அதை செயல்படுத்தலாம் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

ஒவ்வொரு கிரகங்களால் ஏற்படக் கூடிய இந்த மாற்றங்கள் சில ராசிகளுக்கு நன்மை தரக்கூடியதாக அமைந்திருக்கிறது. இதனால் மற்ற ராசிக்காரர்கள் நமக்கு ஏதும் நன்மையே இல்லையா? என்று கவலை கொள்ள தேவையில்லை. இந்த ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றங்கள் கூடுதல் நன்மைகளை தரும் அவ்வளவு தான்.

இதையும் படிக்கலாமே: புத்தாண்டில் கஜலட்சுமி யோகம் பெறும் ராசிகள்

இதை தவிர மற்ற ராசிகாரர்கள் தங்களின் முயற்சிகளை எப்பொழுதும் போல் தொடருங்கள். முயற்சிக்கான பலன் நிச்சயம் கிடைக்கும். ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட இந்த கருத்துகல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கருதினால் இதை பயன்படுத்தி வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை பெறுங்கள்.

- Advertisement -