- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர்க்கும் சோமவார வழிபாடு

கடன் தீர்க்கும் சோமவார வழிபாடு

- Advertisement -

ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்க்கையில் கண்டிப்பான முறையில் கடன் என்ற ஒன்றை வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். அவ்வாறு வாங்கக்கூடிய கடனை விரைவில் அடைக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொருவரும் விரும்புவோம். ஏதோ ஒரு சூழ்நிலையால் அந்த கடனை அடைக்க முடியாமல் மேற்கொண்டு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் வந்திருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து வெளியே வருவதற்கும் கடன் பிரச்சனையை முற்றிலும் நீக்குவதற்கும் செய்ய வேண்டிய சிவ வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கடன் தீர்க்கும் சோமவார வழிபாடு

கடன் என்ற ஒன்று ஏற்படுவதற்கு நம்முடைய கர்ம வினை முக்கியமான காரணம் என்று நம் அனைவருக்குமே தெரியும். கர்ம வினையை தீர்க்கக் கூடிய தெய்வமாக சிவபெருமான் திகழ்கிறார் என்பதும் அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட சிவபெருமானை கடன் பிரச்சினை தீருவதற்காக நாம் வழிபாடு செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் சிவபெருமானின் அருளால் கடன் பிரச்சினை தீரும். அதுவும் சிவபெருமானுக்குரிய திங்கட்கிழமை அன்று வழிபாடு செய்வது என்பது அதீத பலனை தரும் அந்த வழிபாட்டை இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய திங்கட்கிழமை அன்று செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக அமாவாசை முடிந்து வரக்கூடிய முதல் திங்கட்கிழமை இந்த வழிபாட்டை ஆரம்பித்தால் அதற்கு விரைவிலேயே நல்ல பலன் கிடைக்கும். தொடர்ச்சியாக 16 வாரங்கள் இந்த வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய சிவலிங்கத்திற்கு தான் இந்த வழிபாட்டை நாம் செய்ய வேண்டும்.

கருவறையில் இருக்கக்கூடிய சிவலிங்கத்தை நம்மால் தூரத்திலிருந்து தான் தரிசனம் செய்ய முடியும். ஆனால் கோவிலின் சுற்றுப்புறத்தில் மரத்தடிக்கு கீழ் சிவலிங்கம் என்பது பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும். அப்படிப்பட்ட சிவலிங்கத்திற்கு நாம் இந்த வழிபாட்டை செய்யலாம். இந்த வழிபாட்டை செய்வதற்கு நமக்கு தேவைப்படக்கூடிய முக்கியமான ஒரு இலை ஊமத்தம் இலை. ஊமத்தம் இலை கிழியாத நல்ல இலையாக 108 இலைகளை முதல் நாளே பறித்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

திங்கட்கிழமை அன்று காலையில் சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று அங்கிருக்க கூடிய சிவலிங்கத்திற்கு நாம் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது ஒரு சொம்பில் பசும்பால் வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். இந்த சொம்பானது செம்பு அல்லது பித்தளை சொம்பாக இருப்பது மிகவும் நல்லது. முதலில் சிவலிங்கத்திற்கு தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்து கொள்ளுங்கள். அடுத்ததாக பாலை ஊற்றி அபிஷேகம் செய்து கொள்ளுங்கள். சந்தனம் குங்குமம் அனைத்தும் வைத்து மலர்களை சூட்டி அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

அடுத்ததாக இந்த 108 இலைகளையும் எடுத்து வைத்துக்கொண்டு பின்வரும் இந்த கடன் தீர்க்கும் சிவபெருமான் மந்திரத்தை கூறிக் கொண்டே அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு வாசனை மிகுந்த ரோஜா அல்லது சந்தன ஊதுபத்தியை பொருத்தி வைத்து சாம்பிராணி தூபம் போட்டு கற்பூரம் ஏற்றி உங்களுடைய கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று மனதார வழிபாடு செய்து கொள்ள வேண்டும். இப்படி 108 முறை இந்த மந்திரத்தை கூறி 108 இலைகளால் நாம் அர்ச்சனை செய்யும் பொழுது சிவபெருமானின் அருளால் நமக்கு தீர்க்க முடியாமல் இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய வழியை அவர் அருள்வார்.

- Advertisement -

மந்திரம்

“ஓம் ருண முக்தேஸ்வர மகாதேவாய நமஹ”

இதையும் படிக்கலாமே:தைப்பூச வழிபாடு

முழு மனதுடன் சிவபெருமானை சரணாகதி அடைந்து சிவபெருமானுக்குரிய இந்த மந்திரத்தை கூறி இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு சிவபெருமானின் அருள் அவர்களுடைய அனைத்து விதமான கடன் பிரச்சனைகளும் தீர்வதோடு நிம்மதியான வாழ்க்கையையும் வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்