- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர்க்கும் செவ்வாய்க்கிழமை ஏகாதசி வழிபாடு

கடன் தீர்க்கும் செவ்வாய்க்கிழமை ஏகாதசி வழிபாடு

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்சனை என்றால் அது கடன் பிரச்சனை தான். எவ்வளவு தூரம் சம்பாதித்தாலும் கோடீஸ்வரராக இருப்பவர் கூட கோடிக்கணக்கில் கடன் என்பது இருக்கத்தான் செய்கிறது. வசதிக்கு ஏற்ப அவர்களுடைய கடன் தொகை அதிகரிக்கிறதே தவிர்த்து கடன் வாங்காமல் நிம்மதியான வாழ்க்கையை வாழ்பவர்களை நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம் என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு கடன் வாங்கி வாழ்க்கை நடத்தும் நிலை என்பது உண்டாகிவிட்டது. இந்த நிலையை மாற்றி கடன் பிரச்சினை எதுவும் இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய ஏகாதசி நாளன்று வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

செவ்வாய்க்கிழமை ஏகாதசி வழிபாடு

காக்கும் கடவுளாக திகழக்கூடிய பெருமாளுக்கு உகந்த திதியாக கருதப்படுவது ஏகாதசி திதி. கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை ஏகாதசியான இந்த ஏகாதசியை உத்பன்ன ஏகாதசி என்று கூறுவோம். பொதுவாக தேய்பிறை ஏகாதேசி அன்று பெருமாளை விரதம் இருந்து வழிபாடு செய்து நம்முடைய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டோம் என்றால் அந்த கஷ்டங்கள் தீரும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்த ஏகாதசி என்பது செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வருகிறது. கடன் தொடர்பான பிரச்சனையில் மாட்டிக் கொண்டு இருப்பவர்களுக்கு செவ்வாய்க்கிழமை வழிபாடு என்பது மிகவும் பலன் தரக்கூடிய வழிபாடு என்பதால் செவ்வாய்க்கிழமையோடு வரக்கூடிய ஏகாதசி நாளன்று பெருமாளை நாம் வழிபட்டோம் என்றால் கடன் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த வழிபாட்டை செய்வதற்கு பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துக்கொள்ள வேண்டும். பிறகு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய பெருமாளின் படத்திற்கு முன்பாக ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி சிவப்பு நிறத்தில் திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். பெருமாளுக்கு துளசி மாலையை சூட்ட வேண்டும். பிறகு பானகத்தை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். பிறகு பெருமாளுக்கு உரிய இந்த ஒரு மந்திரத்தை 11 முறை உச்சரிக்க வேண்டும்.

பொதுவாக ஏகாதசி என்பது பதினோராவது திதியாக வரும். கார்த்திகை மாதத்தில் பதினோராம் நாளன்று இந்த ஏகாதசி திதி வருகிறது என்பது ஒருவகையில் சிறப்பு என்றால், இந்த நவம்பர் மாதமும் 11 வது மாதம் என்பதால் இதற்கு அதிக அளவில் சிறப்புகள் நிறைந்திருக்கிறது. அதனால் பெருமாளுக்கு 11 முறை இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய கடன் பிரச்சினை முற்றிலும் தீரும் என்று கூறப்படுகிறது. குறிப்பு இந்த மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும்.

- Advertisement -

மந்திரம்

“ஓம் ஹ்ராம் ஹ்ரீம் க்லீம் ஓம் நமோ ஸ்ரீ வேங்கடேசாய நமஹ”

இதையும் படிக்கலாமே:கடிகாரம் அதிர்ஷ்ட பலன்கள்

இந்த மந்திரத்தை பெருமாளை முழுமனதோடு நம்பி செவ்வாய்க்கிழமை வரக்கூடிய ஏகாதசி திதி அன்று வீட்டிலேயே கூறுபவர்களுக்கு அவர்களுடைய கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரும், இயன்றவர்கள் அன்றைய தினத்தில் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது அதீத பலனை தரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்