முழுமுதற் கடவுளாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான் என்று நம் அனைவருக்குமே தெரியும். விநாயகப் பெருமானை வழிபாடு செய்துவிட்டு தான் எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அந்த காரியத்தை செய்ய ஆரம்பிப்போம். அந்த வகையில் அனைத்து தெய்வங்களுக்கும் முன்பாக முதன்மையாக நாம் வழிபடக்கூடிய தெய்வமாக திகழ்பவர் தான் விநாயகப் பெருமான். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை பலவிதமான வேண்டுதல்களுக்கு நாம் வழிபாடு செய்வதுண்டு. நம்முடைய பிரச்சனைகளில் மிகவும் முக்கியமான பிரச்சினையாக திகழக்கூடிய கடன் பிரச்சினை தீர்வதற்குரிய வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கடன் தீர்க்கும் விநாயகர் வழிபாடு
கடன் இல்லாத நபர்கள் என்று யார்தான் இருக்கிறார்கள்? ஏதாவது ஒரு ரூபத்தில் கடனை வாங்கிவிட்டு அந்த கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்களாக தான் இந்த உலகத்தில் பலரும் இருக்கிறார்கள். அப்படி கடன் பிரச்சினையால் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்களும் கடன் பிரச்சினையை தீர்க்க முடியாமல் அவதிப்பட்டு கொண்டு இருப்பவர்களும் முழுமனதோடு விநாயகர் பெருமானை தொடர்ச்சியாக 48 நாட்கள் வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த வழிபாட்டை வளர்பிறையில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று செய்ய ஆரம்பிக்க வேண்டும். இந்த வழிபாட்டிற்கு என்று எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது. காலையிலோ மாலையிலோ எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த வழிபாட்டை செய்யலாம். அசைவம் சாப்பிடக்கூடாது, சுத்தபத்தமாக இருக்க வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கிடையாது. காலையில் வழிபாடு செய்து விட்டோம் என்றால் அதற்குப் பிறகு நம்முடைய அன்றாட வேலைகளை நாம் செய்து கொள்ளலாம். பெண்கள் மாதவிடாய் சமயத்தில் மட்டும் தவிர்த்து விட்டு மீதம் இருக்கக்கூடிய நாட்களில் இந்த வழிபாட்டை செய்யலாம்.
நம் அனைவரின் வீட்டிலும் விநாயகப் பெருமானின் படம் அல்லது சிலை என்பது கண்டிப்பாக இருக்கும். எந்த நேரத்தில் இந்த வழிபாட்டை நாம் செய்ய போகிறோமோ அந்த நேரத்தில் விநாயகப் பெருமானின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு வாசனை மிகுந்த மலர்களை வைத்து விநாயகப் பெருமானுக்கு அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அடுத்ததாக நம்மால் எந்த பொருளை விநாயகப் பெருமானுக்கு நெய்வேத்தியமாக வைக்க முடியுமோ அந்த பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். எதுவுமே இல்லை என்றால் ஒரு டம்ளரில் சுத்தமான தண்ணீரை மட்டும் வைத்தால் கூட போதும். ஆனால் கண்டிப்பான முறையில் ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை வைக்க வேண்டும்.
பிறகு விநாயக பெருமானுக்கு முன்பாக ஒரு அகல்விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். வடக்கு அல்லது கிழக்கு பார்த்து அமர்ந்து கொண்டு விநாயகப் பெருமானின் இந்த ஒரு மந்திரத்தை 108 முறை கூற வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 48 நாட்கள் இந்த மந்திரத்தை 108 முறை கூறி கடன் பிரச்சினை தீர வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். 48வது நாள் அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு சென்று விநாயகப் பெருமானுக்கு தங்களுடைய பெயரில் அர்ச்சனை செய்து வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 48 நாட்கள் இந்த முறையில் விநாயகப் பெருமானின் இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்பவர்களுக்கு விநாயகப் பெருமானின் அருளால் கடன் பிரச்சினை தீர்வதற்குரிய வழிகள் உண்டாகும். வருமானம் உயரும்.
மந்திரம்
“ஓம் ஸ்ரீம் கம் சௌபாக்ய கணபதயே நமஹ”
இதையும் படிக்கலாமே:கர்ம வினை நீங்க சிவ வழிபாடு
எளிமையான தெய்வமாக திகழக்கூடிய விநாயகப் பெருமானை எளிமையான முறையில் இப்படி தொடர்ச்சியாக 48 நாட்கள் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய கடன் பிரச்சனை முற்றிலும் தீரும், அனைத்து விதமான சௌபாக்கியங்களும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.