- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தொடர்பான பிரச்சினையை தீர்க்கும் காலபைரவர் வழிபாடு

கடன் தொடர்பான பிரச்சினையை தீர்க்கும் காலபைரவர் வழிபாடு

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் கடன் என்ற ஒன்று மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். கடன் கொடுத்தாலும் சரி வாங்கினாலும் சரி அதனால் நமக்கு பிரச்சனை என்பது உண்டாகத்தான் செய்யும். ஒருவரிடம் இருந்து கடனாக பணத்தை வாங்கி விட்டோம் என்றால் அந்த கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டும். அதேபோல் யாருக்காவது ஒருவருக்கு பணத்தை கொடுத்து விட்டோம் என்றால் அந்த பணத்தை திரும்ப வாங்கிய விட வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் பண இழப்போடு மன நிம்மதியும் போய்விடும். இப்படி கடன் தொடர்பான எந்த பிரச்சனை வந்தாலும் மன நிம்மதியும் சந்தோஷமும் நம்மை விட்டு நீங்கிவிடும். இப்படிப்பட்ட கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு காலபைரவரை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கால பைரவர் எட்டுத்திக்குகளுக்கும் அதிபதியாக திகழக்கூடியவர். அவரை சரணாகதி அடைந்து விட்டோம் என்றால் யாராலும் நமக்கு எந்த பிரச்சனையும் வராது. எந்த காலத்திலும் நம்மை கைவிடாமல் நமக்கு உறுதுணையாக இருந்து நம்முடைய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பார். மேலும் நவகிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் இருந்தும் நம்மை காப்பாற்றுவார். அப்படிப்பட்ட கால பைரவரை கடன் பிரச்சினை தீர்வதற்கு வழிபாடு செய்யும் முறையைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு காலத்தில் செய்ய வேண்டும். இதற்கு அருகில் இருக்கக்கூடிய கால பைரவரின் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு கால பைரவருக்கு முன்பாக இரண்டு அகல் விளக்குகளை வைத்துக் கொள்ளுங்கள். இதில் சுத்தமான பசு நெய்யை ஊற்ற வேண்டும். இதில் போடக்கூடிய திரிதான் மிகவும் முக்கியமான ஒன்று. இந்த திரியை வீட்டிலேயே நாம் தயார் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதற்கு வெள்ளை நிற துணி வேண்டும். அந்த துணியை சதுர வடிவில் வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். அதற்குள் வெள்ளை மிளகு என்று நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அந்த மிளகை வாங்கி வந்து 27 என்ற எண்ணிக்கையில் அந்த வெள்ளைத் துணியில் வைத்து மூட்டையாக கட்டி தயார் செய்து கொள்ளுங்கள். இதை வைத்துதான் நாம் காலபைரவருக்கு தீபம் ஏற்ற வேண்டும். நெய்யில் இந்த மூட்டையை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் வடக்கு பார்த்தவாறு எறிவது போல் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு கால பைரவரிடம் முழுமனதோடு உங்களுடைய கடன் பிரச்சினை முற்றிலும் தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். கால பைரவரின் கவசத்தை பாராயணம் செய்து வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினம் காலபைரவருக்கு சிவப்பு நிற மலர்களை வாங்கித் தருவது என்பது கூடுதல் சிறப்பு கூறியதாக கருதப்படுகிறது. இப்படி ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் காலபைரவரை இந்த முறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரும். வரவேண்டிய பணம் நல்லவிதமாக வந்து சேரும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அந்த காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகி வெற்றிகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:பங்குனி கிருத்திகை முருகன் வழிபாடு

கர்ம வினைகளின் படி பலன்களை தரக்கூடிய சனி ஈஸ்வர பகவானின் குருவாக திகழக்கூடிய கால பைரவரை முழுமனதோடு இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய கடன் பிரச்சனை முற்றிலும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்