கொடுத்த கடனை வசூல் செய்ய இதை விட சுலபமான பரிகாரம் வேறு இருக்கவே முடியாது. ஒரு நாள், ஒரே ஒரு முறை இந்த மந்திரத்தை உச்சரித்தாலே போதும்.

bairavar

இன்று நிறைய பேர் செய்யக்கூடிய தவறு இது. யாராவது கஷ்டம் என்று வந்து கேட்டால், உடனே பாவப்பட்டு அவர்களுக்கு உதவி செய்து விடுவது. இதற்காக உதவி செய்வதை தவறு என்று சொல்ல வரவில்லை. உதவி செய்வதன் மூலம் நாமும், நம்முடைய குடும்பமும் எக்காரணத்தைக் கொண்டும் கஷ்டத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது. கலியுகத்தில் கடன் வாங்கியவர்கள் நன்றாகத்தான் உள்ளார்கள். கடனை கொடுத்தவர்கள் தான் இன்றளவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். சொந்தங்களை நம்பி, உறவுகளை நம்பி, நண்பர்களை நம்பி, கடனாக பணத்தையும் நகையையும், சொத்துப் பத்திரங்களை கொடுத்தால் கடைசியில் நமக்கு மிஞ்சுவது ஏமாற்றம்.

kadan1

நீங்களும் யாரையாவது நம்பி உங்கள் பணத்தையோ, நகையையோ, சொத்து பத்திரத்தையோ கடனாக கொடுத்து பிரச்சனையில் சிக்கி உள்ளீர்களா. கொடுத்த பணத்தை கொடுத்த பொருளை எப்படி கேட்பது என்று தெரியாமல் தவித்து வருகிறீர்களா? அல்லது கொடுத்த பணத்தை திருப்பி கேட்டும் வசூல் ஆகவில்லையா? இப்படிப்பட்ட பல வகையான பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கக்கூடிய ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செய்ய வேண்டும். எப்போதும் போல காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, பூஜை அறையில் ஒரு மரப்பலகையில் மீதோ அல்லது பாயின் மீது அமர்ந்து இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். வடக்குப் பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள்.

kamakshi vilakku

உங்களுடைய முகம் வடக்கு நோக்கி இருக்க வேண்டும். கண்களை மூடிக்கொண்டு, பைரவரை மனதார நினைத்து ‘ஓம் க்ரீம் வம் பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை செவ்வாய்க்கிழமை அன்று 108 முறை உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரத்தை உச்சரிப்பதற்கு முன்பு யார் உங்களுக்கு கடன் தொகையை திருப்பித் தர வேண்டுமோ, அந்த நபர் மனம் மாறி உங்களுக்கு பணத்தை திருப்பித்தர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

உங்களிடம் பணத்தை கடனாக வாங்கியவர்கள் ஏதேனும் கஷ்டத்தில் இருந்தால் கூட, அந்த கஷ்டம் அவருக்கு நிவர்த்தியாகி, உங்களுடைய பணத்தை திருப்பித் தரும் அளவிற்கு அவருடைய நிதி நிலைமையை சரி செய்யக்கூடிய பரிகாரம் தான் இது.

bairavar

உங்களிடம் இருந்து பணத்தை வாங்கியவர் உங்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருந்தால் கூட, அந்த எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டு நிச்சயமாக அவரே, அந்த பணத்தை கொண்டு வந்து உங்களிடம் திருப்பி தந்து விடுவார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும்.