கடன் தொல்லை தீர வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய பரிகாரம்

Pooja room

இன்றைய சூழலில் கடன் தொல்லையால் அவதிப்படாதவர்களே இருக்கமுடியாது என்ற அளவிற்கு அனைவரும் ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு காரியத்திற்காக கடனை வாங்கிவிட்டு தவிக்கதான் செய்கிறார்கள். இப்படி வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிப்பவர்கள், விரைவில் தங்களது அனைத்து கடன்களும் அடைவதற்கான வழியை பிறக்க செய்யும் மிக மிக எளிய பரிகாரம் ஒன்றை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

Goddess Lakshmi

கடன் மட்டும் இன்றி நமது வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர நமது வீட்டில் துர் சக்திகள் நீங்கி நல்ல சக்திகள் குடிகொள்ள வேண்டும். நல்ல சக்திகை குடிகொள்ளச்செய்ய நாம் சில எளிய முறிகளை கடைபிடித்தாலே போதும். தினமும் காலையில் ஆறு மணிக்கு முன்பாக எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் உங்கள் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு ஒரு நெய் தீபம் ஏற்றுங்கள். நெய் தீபம் ஏற்ற வசதி இல்லை எனில் நல்லெண்ணெயில் தீபம் ஏற்றுக்கண்கள். அதன் பிறகு உங்கள் குலதெய்வத்திடமும் உங்கள் இஷ்ட தெய்வத்திடமும் மனமுருகி வேண்டுங்கள்.

அடுத்து மாலை சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பாக தீபம் ஏற்றி வழிபடுங்கள். வீட்டில் தீபம் ஏற்றும் சமயத்தில் யாரும் உறங்கிக்கொண்டிருக்க கூடாது. அப்படி இருந்தால் நாம் செய்யும் பூஜையில் பலன் இல்லை. தீப வழிபாடோடு சேர்த்து நாம் வீட்டில் சிலவற்றை கடைபிடிப்பது அவசியமாகிறது. தேவை இல்லமால் தண்ணீரை செலவு செய்யக்கூடாது. வீட்டு குழாயில் தண்ணீர் சிந்தாமல் மூடிவைக்க வேண்டும்.

வீட்டில் அதிக அளவிலான உணவை தினம் தினம் சமைத்து அதை வீண் செய்ய கூடாது. அதிகப்படியான உணவு இருப்பின் அதை ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும். இது போன்ற சிறு சிறு செயல்கள் மூலம் நமது வீட்டில் நம்மை அறியாமலே ஒரு நல்ல விதமான ஆற்றல் இயங்க துவங்கும். அதன் மூலம் நமது கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீருவதற்கான வழிகள் பிறக்கும். கடனும் விரைவில் குறையும்.

இதையும் படிக்கலாமே:
ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற உதவும் அற்புத விரதம்!

English Overview:
This article gives some easy ways to overcome from loan problem by worshiping God. In Tamil it is called as kadan thollai neenga pariharam. For this we just need to lighten lamp morning and evening and need to save the water properly.