கடன் வாங்கும் சூழ்நிலையே உங்கள் வாழ்நாள் முழுவதும் வராமல் இருக்க வெறும் 1 ரூபாய் போதுமே!

money2

கடன் வாங்கும் சூழ்நிலை நமக்கு வாழ்நாள் முழுவதும் வரக்கூடாது என்றால், முதலில் நாம் வருமானத்திற்காக தகுந்தவாறு நம்முடைய செலவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். வருமானத்திற்கு அதிகமாக கடன் வாங்கி எந்த பொருட்களையும் சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே உங்களுக்கு வரக்கூடாது. அப்படி என்றால் நிச்சயம் அவர் கடனாளியாக இருக்க மாட்டார். கோடீஸ்வரராக வாழ்கிறோமோ இல்லையோ, அது இரண்டாம் பட்சம். முதலில் கடன்காரர்கள் வீட்டு வாசலை தேடி வராமல் இருந்தாலே போதும்.

kadan

சரி, காலத்தின் கட்டாயம் சூழ்நிலை கடன் வாங்கி விட்டீர்கள். அந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறீர்கள். வாங்கிய கடனை விரைவில் திரும்பவும் அடைத்து விட வேண்டும். மீண்டும் கடன் வாங்கக் கூடிய சூழ்நிலை நமக்கு ஏற்பட வேண்டும். இதற்கு சுலபமான முறையில் ஆன்மீக ரீதியாக ஒரு பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

கடன் பிரச்சினையை விரைவாக தீர்க்க கூடிய கடவுள் என்றால் அதில் பைரவருக்கு முதலிடம். நீங்கள் வாங்கிய கடன் தொகையை செவ்வாய்க்கிழமை அன்று, கடன் வாங்கியவரிடம் கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி கொடுத்து வாருங்கள். கடன் தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டு நேராக வீட்டிற்கு வர வேண்டாம். பைரவர் சன்னிதிக்குச் செல்லுங்கள். சிவன் கோயில்களில் இருக்கும் பைரவர் சந்நிதிக்கு சென்று, 2 மண் அகல் தீபம் நெய்யால் போட்டாலும் சரி, நல்லெண்ணெயில் போட்டாலும் சரி, தீபங்களை ஏற்றி வைத்து விட்டு, வீடு திரும்பும் போது பைரவர் வாகனமான நாய்களுக்கு ஏதாவது ஒரு உணவை வாங்கி தரலாம்.

வீட்டிற்கு வந்தவுடன் உங்களது மணி பர்ஸ்ஸிலோ, பாக்கெட்டில் இருக்கும் 1 ரூபாய் நாணயத்தை எடுத்து ஒரு மண் உண்டியலில் சேர்த்து வாருங்கள். உண்டியல் இல்லை என்றாலும் பரவாயில்லை. சிறிய அளவில் இருக்கும் மண்பானை, அப்படி இல்லை என்றால் எல்லோர் வீட்டிலும் மண்ணால் செய்யப்பட்ட அகல் தீபம் இருக்கும் அல்லவா? அதில் 1 ரூபாய் நாணயமாக போட்டு வாருங்கள்.

- Advertisement -

தொடர்ந்து வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் உங்களது கடன் தொகையை கொடுத்துக் கொண்டே வர வேண்டும். பைரவரை வழிபட வேண்டும். நாய்க்கு உணவளிக்க வேண்டும். ஒரு ரூபாய் நாணயத்தை சேர்க்கவேண்டும். இந்த வழிபாட்டு முறையை இந்த பரிகார முறையை தொடர்ந்து செய்து வரும் பட்சத்தில் உங்களது கடன் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். மேலும் மேலும் கடன் வாங்கும் சூழ்நிலையும் உங்களுக்கு உண்டாகாது.

one rupee

சரி, இந்த மண் அகல் விளக்கில் சேர்க்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயங்களை என்ன செய்வது? இயலாதவர்களுக்கு ஆதரவற்றவர்களுக்கு அப்படி இல்லை என்றால், பசியில் இருக்கும் யாரேனும் ஒருவருக்காவது வயிறார சாப்பாடு வாங்கிக் கொடுங்கள். உங்களால் முடிந்தால் மேலும் பணத்தை போட்டு, ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு அன்னதானம் செய்யலாம். இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு இருக்கக்கூடிய பண பிரச்சனை நிச்சயம் கூடிய விரைவில் தீரும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
தோற்று விடுவோமோ என்ற பயம் வரும்போது இந்த 2 மந்திரங்களை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருங்கள்! மன தைரியமும், அதன் பின்னால், வெற்றியும் உங்களை தேடி வரும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.