அனைவரின் வாழ்க்கையிலும் ருணம் என்ற ஒன்று கண்டிப்பான முறையில் இருக்கும். ருணம் என்றால் அதற்கு கடன் என்று பொருள். நாம் பணத்தை கடனை வாங்கி இருந்தாலும், நகை அடமானத்தில் இருந்தாலும், இடம் வீடு போன்ற பொருட்களை அடமானம் வைத்திருந்தாலும், அவை அனைத்தையும் ருணம் என்றே கூறுகிறோம். இதோடு மட்டுமல்லாமல் நமக்கு இருக்கக்கூடிய தோஷங்களையும் ருணமாகத் தான் கருதுகிறோம். மேலும் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நாம் அனுபவிக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தையுமே ருணம் என்றுதான் ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ருணத்தை நீக்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தி பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
இந்த உலகத்தில் பிறக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் ஏதாவது ரூபத்தில் கஷ்டம் என்பது இருக்கும். கடன் ரீதியாக கஷ்டமாக இருந்தாலும் சரி, தோஷங்களாக இருந்தாலும் சரி, பாவங்களாக இருந்தாலும் சரி, உடல் ரீதியான கஷ்டமாக இருந்தாலும் சரி, மன ரீதியான கஷ்டங்களாக இருந்தாலும் சரி, அவை அனைத்தையும் நீக்குவதற்கு நமக்கு விநாயகப் பெருமானின் அருள் என்பது வேண்டும். விநாயகப் பெருமானின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு அவருக்குரிய சங்கடஹர சதுர்த்தி நாள் அன்று விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும். சங்கடஹர சதுர்த்தி நாளன்று விரதம் இருக்க இயலாதவர்கள் கூட விநாயகப் பெருமானின் அருளை பெற்று தங்கள் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்களை நீக்குவதற்கு சில பரிகாரங்கள் இருக்கின்றன.
அந்த வகையில் ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்து சங்கடஹர சதுர்த்தி நாளான ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி நாம் இந்த ஒரு பரிகாரத்தை செய்தோம் என்றால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து விதமான ருணங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது. இந்த பரிகாரத்தை காலையிலேயே செய்துவிட வேண்டும். குளிப்பதற்கு முன்பாக செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து உங்களுடைய வலது கையில் வைத்துக்கொண்டு ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். பிறகு விநாயகப் பெருமானின் இந்த ஒரு மந்திரத்தை 108 முறை கூற வேண்டும்.
இப்படி கூறி முடித்த பிறகு கையில் இருக்கக்கூடிய எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அந்த எலுமிச்சம் பழத்தை தங்களுடைய தலை, முகம், கை, கால்கள் என்று உடல் முழுவதும் சேய்த்து ஐந்து நிமிடம் விட்டுவிட்டு பிறகு குளிக்க வேண்டும். மந்திரத்தின் சக்தியானது எலுமிச்சம் பழத்தில் இறங்கி அந்த எலுமிச்சம் பழத்தை நாம் உடலில் தேய்த்து குளிப்பதன் மூலம் அந்த மந்திரத்தின் பலனால் நம் உடலில் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
மந்திரம்
“ஓம் ஸ்ரீ ருணஹர கணபதயே நமோ நம”
இதையும் படிக்கலாமே:தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி
சங்கடஹர சதுர்த்தி நாளன்று நம்முடைய ருணத்தை நீக்குவதற்கு விநாயகப் பெருமானை முழுமனதோடு நினைத்து இந்த ஒரு பரிகாரத்தை செய்தால் போதும் நம் வாழ்வில் இதுவரை நாம் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.