கடவுளை இல்லை என்று கூறுபவர்கள் ஏழையாகி விடுவார்களாம்! இது உண்மையா? அது ஏன்னு தெரிஞ்சுக்கணுமா?

siddhar-thanam-pichai
- Advertisement -

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வெவ்வேறான எண்ண அலைகளை கொண்டுள்ளனர். ஒருவருக்கு சரி என்று படுவது, இன்னொருவருக்கு இல்லை என்று படுகிறது. ஒருவருக்கு நியாயம் என்று தோன்றும் விஷயம், இன்னொருவருக்கு அநியாயம் என்று தோன்றுகிறது. இப்படி பல தரப்பட்ட மனிதர்கள் வாழும் உலகில் இறைவன் இருக்கிறானா? இல்லையா? என்று விவாதங்கள் இன்றளவிலும் நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வகையில் கடவுள் இல்லை என்று கூறுபவர்களுக்கு என்னவாகும்? என்று சிவவாக்கியர் கூறுகிறார் தெரியுமா? இதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

சிவவாக்கியர் பாடல்களில் மிகவும் சக்தி வாய்ந்த இப்பாடல் கடவுள் இல்லை என்பவர்கள் ஏழைக்கு நிகரானவர்கள் என்று கூறுகிறது. இருக்கும் ஒன்றை இல்லை என்று கூறினால் அது சரியாக இருக்குமா? என்று அவர் கேள்வி கேட்கிறார். நாத்திகத்தை, நாத்திகவாதிகளை சாடும் சிவவாக்கியர் பாடல் கேட்கும் பொழுதே இறைவன் இருக்கிறார் என்கிற நம்பிக்கை ஊற்றெடுக்கும்.

- Advertisement -

சிவவாக்கிய பாடல் எண்: 117
இல்லைஇல்லையென் றியம்புகின்ற வேழைகாள்
இல்லையென்று நின்றதொன்றை இல்லையென்ன லாகுமோ
இல்லையல்ல வொன்றுமல்ல விரண்டுமொன்றி நின்றதை
எல்லைகண்டு கொண்டபே ரினிப்பிறப்ப தில்லையே!

இதன் பொருள் விளக்கம் என்ன?
இல்லை இல்லை என்று கூறும் நாத்திகனே, நீ ஏழையாக இருக்கின்றாய். அதனால் தான் அவர் இல்லை என்று கூறுபவரை ஏழை என்று குறிப்பிடுகிறார். இல்லை என்று சொல்ல முடியாத நிலையில் இருக்கும் ஒன்றை, எப்படி நீ இல்லை என்று கூறுகிறாய்? இப்படி கூறுவதில் தகுமோ? என்று கேள்வி கேட்கின்றார். இல்லை என்கிற நிலையில் இல்லாததை, ஒன்றும் இல்லாததை, இரண்டாக ஒன்றி நிற்பதை அதன் எல்லை கண்டு கொண்டால் இனி உனக்கு பிறப்பு என்பதே இல்லை என்று கூறுகிறார்.

- Advertisement -

ஒன்றுமே இல்லாததாகவும், இருப்பதாகவும், இரண்டற கலந்து ஒன்றிணைந்து நிற்கும் அதாவது ஈசனும், பார்வதி தேவியும் இணைந்து நிற்கும் விஷயத்தை நீ தெரிந்து கொண்டால், மனதால் உணர ஆரம்பித்தால் உனக்கு இனி பிறப்பு என்பதே இருக்காது என்று அவர் ஆணித்தரமாக கூறுகிறார். கடவுள் இல்லை இல்லை என்று கூறுபவர்கள் எவ்வளவு காசு பணம் இருந்தும், இறைவனின் கண்களுக்கு அவர் ஏழையாக தெரிகின்றார்கள். காசு, பணம் இல்லாவிட்டாலும் கடவுள் இருக்கிறார் என்று மனமார நம்புபவர்களுக்கு கடவுளின் கண்களுக்கு அவர்கள் பணக்காரனாக தெரிவார்கள்.

இருப்பவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்கும் இறைவன், இல்லாதவர்களை கைவிடுவது இல்லை. அவர்களுக்கு நிறைய சோதனைகளை கொடுக்கின்றார் எனினும் இறுதியாக அவர்களுடைய மனோ தைரியத்திற்கும், இறை நேசத்திற்கும் உரிய பலன்களை கண்டிப்பாக கொடுத்து விடுவார். இதைத்தான் ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்’ என்று கூறுவார்கள். எவ்வளவு தான் தர்மத்திற்கு பிரச்சனை வந்தாலும் கடைசியாக தர்மம் பக்கம் இறைவன் வந்துவிடுகிறார்.

கடவுள் இல்லை என்றால் நீயும் இல்லை, நானும் இல்லை! எந்த விதமான உயிர்களும் இவ்வுலகில் பிறப்பெடுத்து இருக்காது. அப்படி இருக்கும் பொழுது எப்படி கடவுள் இல்லை என்று கூறுகிறீர்கள்? கடவுள் இன்னென்ன உருவங்களில், இப்படித்தான் இருக்கின்றார்கள் என்பதை யாரும் பார்த்ததில்லை ஆனால் கடவுள் என்கிற ஒன்று இல்லை என்று நிச்சயமாக கூறிவிட முடியாது. ஏதோ ஒரு சக்தி நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது. இந்த பூமியை படைத்திருக்கிறது. இதில் வாழும் ஒவ்வொரு ஜீவ ராசியும் இறைவனுக்கு உரியவையாக இருக்கிறது. நம்முடைய வாழ்க்கையை இறைவனுக்காக அர்ப்பணிக்கும் பொழுது அவர் நமக்கு எல்லை இல்லாத மகிழ்ச்சியையும், நிம்மதியையும், முக்தியையும் கொடுக்கிறார்.

- Advertisement -