உங்கள் கனவில் எந்த கடவுள் வந்தால் என்ன பலன் தெரியுமா? கனவில் கடவுள் வருவது ஏன்?

dream-god
- Advertisement -

நம்முடைய கனவு சில சமயங்களில் எழுந்த பிறகும் நினைவில் நிற்கும். ஆனால் எல்லா கனவுகளும் அப்படி அல்ல! எழுந்த பின்பு சிலவை மறைந்து மறந்து போய்விடும். நம் ஆழ்மன எண்ணங்கள் கனவுகளாக வருவதாக கூறப்பட்டாலும், கனவுகள் ஏன் வருகிறது? என்பதற்கு இதுவரை சரியான விளக்கம் இல்லை. ஆனால் உங்கள் கனவில் சில விஷயங்கள் தெரியும் பொழுது, அதற்கான பலன்கள் ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன. அந்த வகையில் எந்த கடவுள்? உங்கள் கனவில் வந்தால் என்ன நடக்கப் போகிறது? என்பதை பலனாக இனி காண்போம்.

கனவில் கடவுள் வருவது என்பது சாதாரண விஷயம் அல்ல! நாம் எப்பொழுதும் கடவுளை நினைத்துக் கொண்டிருப்பது இல்லை. திடீரென ஒரு கடவுள் நம்முடைய கனவில் வந்து தோன்றினால், இனி நடக்கப் போகும் விஷயம் ஒன்று நமக்கு நல்லவையாக நடக்கப் போகிறது என்பதை அறிவுறுத்துகிறது. அந்த வகையில் சிவன் உங்களுடைய கனவில் வந்தால் அல்லது லிங்கம் உங்களுடைய கனவில் வந்தால் நீங்கள் தியானம் அல்லது மன அமைதியைத் தேடி செல்ல வேண்டும் என்பதை குறிக்கிறது.

- Advertisement -

உங்கள் மனது பல விஷயங்களால் குழம்பி போய் இருக்கும். இதனால் தான் லிங்கம் அல்லது சிவன் உங்கள் கனவில் தோன்றுகிறார். அடுத்ததாக நீங்கள் தவறாமல் தியானம், யோகா, மன அமைதிக்கான மூச்சுப் பயிற்சி போன்றவற்றை எடுத்துக் கொண்டால் உங்களுடைய குழப்பங்கள் விரைவாக தீர்வு கண்டுவிடும். மலை போல் வந்த பிரச்சனையும் பனி போல் இதனால் நீங்கும்.

உங்களுடைய கனவில் திடீரென பிள்ளையார் தோன்றினால் நீங்கள் புதிதாக ஏதோ ஒரு விஷயத்தை செய்ய போகிறீர்கள் என்பதை இது குறிக்கிறது. நீங்கள் செய்யப் போகும் இந்த புதிய விஷயத்தில் வெற்றி உங்களுக்கு தான் என்பதை உணர்த்தவே பிள்ளையார் உங்களுடைய கனவில் வருகிறார், எனவே எந்த விதமான தயக்கமும், பயமும் இன்றி அடுத்த கட்ட நகர்வுகளை தாண்டி நீங்கள் முன்னேறிக் கொண்டே இருக்கலாம்.

- Advertisement -

அய்யனார், கருப்பசாமி போன்ற உக்கிர தெய்வங்கள் உங்களுடைய குலதெய்வங்கள் கனவில் வந்தால் மன தைரியத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பதை குறிக்கிறது. உங்களை சுற்றி எவ்வளவு சிக்கலான விஷயம் இருந்தாலும், அதில் இருந்து சுலபமாக விடுபடக் கூடிய ஒன்று உங்களுடைய மன தைரியத்தில் தான் இருக்கிறது. எனவே மனதை போட்டு அழுத்திக் கொள்ளாமல், இறைவன் மேல் பாரத்தை போட்டு விடு, அவர் பார்த்துக் கொள்வார் என்பதை உணர்த்தவே இவர்கள் உங்களுடைய கனவில் தோன்றுகிறார்கள்.

சாந்த ஸ்வரூபமாக இருக்கும் மகாலட்சுமி, காமாட்சி அம்மன், மீனாட்சி அம்மன் போன்ற அம்மன் தெய்வங்கள் உங்களுடைய கனவில் திடீரென தோன்றினால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய சில விஷயங்கள் கிடைக்காமல் போய் இருக்கும். அது மீண்டும் உங்களை தேடி வரும், உங்களுக்கு நல்ல விஷயங்கள் எல்லாம் கிடைக்கப் போகிறது, நீங்கள் ஏங்கிய மற்றும் எதிர்பார்த்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தாயாக இருந்து அவள் கொடுக்க இருக்கிறாள் என்பதை உங்களுக்கு சொல்லவே அவர்கள் கனவில் தோன்றுகிறார்கள்.

முருகன் சிரித்தபடி உங்களுடைய கனவில் தோன்றினால் விரைவாகவே உங்களுக்கு திருமண யோகம் வரப்போகிறது என்பதை அறிவுறுத்துகிறது. திருமண விஷயத்தில் இருந்து வந்த தடைகள் அகழும். தள்ளி சென்ற திருமண பேச்சு வார்த்தைகள் மீண்டும் நடக்கும். உங்கள் மனதிற்கு பிடித்தவர்களை நீங்கள் கரம் பிடிக்க போகிறீர்கள் என்பதை உங்களுக்கு நினைவூட்டவே முருகன் கனவில் வருவாராம். இப்படி ஒவ்வொரு கடவுள் உங்கள் கனவில் வருவதற்கு பின்னாலும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு எனவே கடவுள் கனவில் வந்தால், அந்த கடவுள் எதற்காக வந்திருப்பார்? என்பதை சிந்தித்துப் பாருங்கள் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.

- Advertisement -