சுவர் கடிகாரம் மாட்டும் முறைகள் – வாஸ்து சாஸ்திரம்

இறைவன் காலம் கடந்தவர் ஆவார். ஆனால் இப்புவியில் இருக்கும் அனைத்திற்குமே காலவரையறை இருக்கிறது. அனைத்துமே ஒரு குறிப்பிட்ட காலத்தில் அழியும் தன்மை கொண்டவையே ஆகும். வாஸ்து சாஸ்திரம் என்பது கட்டடங்கள் கட்டும் முறை பற்றிய ஒரு விஞ்ஞான கலையாகும். இதில் வெறும் கட்டிடங்கள் பற்றி மட்டுமல்லாமல், அவற்றில் பயன்படுத்தக்கூடிய பொருட்களை பற்றி கூறும் விதிகளும் இருக்கின்றன. அந்த வகையில் வீட்டில் மாட்டப்படும் சுவர் கடிகாரங்கள் பற்றிய வாஸ்து சாஸ்திர விதிகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நாம் உயிர்வாழும் ஒவ்வொரு நொடியும் பயனுள்ளதாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பழங்காலங்களில் நமது நாட்டில் சூரியனின் நகர்வை கொண்டு நேரத்தை கணித்தனர். மேலை நாடுகளின் ஆதிக்கம் நமது நாட்டில் ஏற்பட்ட போது ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்று வரையறுக்கப்பட்ட நேர முறையும், கடிகாரங்களும் நமக்கு அறிமுகமாயின. இன்று உலகம் முழுவதும் கடிகாரங்களை பார்த்தே நேரத்தை கணிக்கும் முறை இருக்கிறது.

நாம் வெளியே செல்லும் போது மணி பார்க்க கைக்கடிகாரங்கள் இருந்தாலும் வீட்டில் இருக்கும் போது நேரத்தை பார்க்க வீட்டின் அத்தனை அறைகளிலும் ஒரு கடிகாரத்தையாவது மாட்டி வைக்கின்றோம். மதிப்பு மிகுந்த நேரத்தை நமக்கு கூறும் சுவர் கடிகாரங்களை வீட்டில் மாற்றுவதற்கும் சில வாஸ்து விதிகள் இருக்கின்றன. அவற்றை பின்பற்றி கடிகாரங்களை வீட்டில் மாட்டி வைப்பதால் நமது வீட்டில் நேர்மையான சக்திகள் நிலைத்திருக்கும்.

சுவர் கடிகாரங்களை வீட்டில் இருக்கும் அறைகளின் கதவுகளுக்கு மேல் மாட்டி வைக்க கூடாது. வீட்டின் மேற்கு, வடக்கு, கிழக்கு திசைகளில் சுவர் கடிகாரங்களை மாட்டலாம். எக்காரணம் கொண்டும் தெற்கு திசையில் இருக்கும் அறைகளில் சுவர் கடிகாரங்களை மாட்ட கூடாது. தெற்கு எம தர்மனின் திசை என்பதால், இத்திசையில் கடிகாரத்தை மாட்டுவது, நம்முடையை ஆயுட்காலத்தை எம தர்மன் குறைக்க ஏதுவாகும் என்கிற ஐதீகத்தால் இத்தசையில் கடிகாரங்கள் மாட்டுவதை தவிர்க்க வேண்டும். சுவர்கடிகாரங்கள் வெள்ளை, மஞ்சள் மற்றும் இளம் பச்சை நிறங்களில் இருக்குமானால் நேர்மறையான சக்திகளை வீட்டிற்குள் ஈர்க்கும்.

இதையும் படிக்கலாமே:
வடக்கு பார்த்த வீடு வாஸ்து பலன்

இது போன்று மேலும் பல வாஸ்து சாஸ்திரம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kadikaram vasthu in Tamil. it is also called vasthu sasthram in Tamil or Kadikaram in Tamil or Wall clock vastu in Tamil or Suvar kadigaram vastu in tamil or Veedtin vastu in Tamil.