வடக்கு பார்த்த வீடு வாஸ்து பலன்

North

செங்கற்கள் கொண்டு கட்டப்படும் அனைத்துமே வீடுகள் தான். ஆனால் அதில் மனிதர்கள் வாசம் செய்யும் போது மட்டுமே அது இல்லம் ஆகிறது. அதிலும் அந்த வீட்டில் வசிப்பவர்கள் பதினாறு வகையான செல்வங்களை பெற்று வாழும் போது அந்த இல்லம் கோவில் ஆகிறது. இல்லத்தில் வசிப்பவர்கள் எல்லோருமே இல்லறவாசிகள் தான். அவர்களுக்கு பணத்தின் தேவை இன்றியமையாததாக இருக்கிறது. செல்வங்களை அதிகளவில் தரும் வடக்கு திசை குறித்தும், அத்திசையில் வீடு இருப்பதால் ஏற்படும் பலன்கள் குறித்தும் இங்கு அறிந்து கொள்ளலாம்.

Kuber

“கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு” என்ற நான்கு திசைகளில் “வடக்கு திசை” ஜோதிட ரீதியாக பார்க்கும் போது “புதன்” பகவானுக்கு உரிய திசையாக வருகிறது. அஷ்டதிக் பாலகர்களில் கோடனான கோடி செல்வங்களுக்கு அதிபதியாக இருக்கும் “குபேரன்” ஆதிக்கம் செலுத்தும் திசை ஆகும். நவகிரகங்களில் “புதன்” பகவான் பூலோக வாசிகளுக்கு செல்வங்கள் கிடைக்க அருள்புரியும் “திருமால்” அம்சம் கொண்டவராவார். அந்த திருமாலுக்கே செல்வத்தை கடனாக கொடுத்தவர் குபேரன். இந்த இருவரும் வடக்கு திசையில் தங்களின் ஆதிபத்யத்தை செலுத்துவதால் இத்திசையை நோக்கிய இல்லங்களை கொண்டவர்களில் பெரும்பாலானோர் செல்வ வளம் மிக்கவர்களாக இருக்கின்றனர்.

சொந்த தொழில் நடத்துபவர்கள், வியாபாரங்கள் செய்பவர்கள், அதிகளவு பணத்தை முதலீடாக போட்டு நிறுவனங்களை நடத்துபவர்கள் மற்ற எவ்வகையான வேலைகளில் இருந்தாலும் வடக்கு திசை நோக்கியவாறு தங்கள் இல்லங்களின் தலைவாயில்களை அமைத்து கொள்ளலாம். இந்த திசை வீடுகளில் குடியிருப்பதால் உங்கள் வீட்டில் நீங்கள் ஈட்டும் பணம் அதிகம் வீணாகாமல் சேமிப்பு உயரும். வாங்கிய கடன்களை சீக்கிரத்தில் அடைக்க கூடிய வகையில் வருமான உயர்வு உண்டாகும். பணத்தட்டுப்பாடு அவ்வளவு சுலபத்தில் ஏற்படாது. திடீர் பொருள்வரவையும் சிலருக்கு ஏற்படுத்தும். இத்தகைய தொழில், வியாபாரங்கள் செய்பவர்களுக்கு சொந்த வீடுகள் இல்லையென்றாலும் வடக்கு திசை பார்த்தவாறு இருக்கும் வாடகை வீட்டில் குடியிருந்தாலும், குறுகிய காலத்தில் சொந்த வீடு மற்றும் இன்ன பிற சொத்துகளை சம்பாதிக்கும் யோகத்தை ஏற்படுத்தும்.

perumal

பொதுவாக எல்லா ராசியினருக்குமே வடக்கு திசை பார்த்தவாறு வீடுகளின் தலைவாயில்களை அமைப்பதும், அத்திசை நோக்கிய சொந்த, வாடகை வீடுகளில் குடியிருப்பதும் நல்லபலன்களை கொடுக்கும். புதனுக்குரிய “மிதுனம், கன்னி” ராசிக்காரர்கள் இத்திசை வீடுகளில் குடியிருப்பது மிகுந்த அதிர்ஷ்டங்களை ஏற்படுத்தும். ஜாதகத்தில் புதன் “6,8,12 “ஆகிய இடங்களில் இருக்கும் நபர்கள் இந்த வடக்கு திசை வீட்டில் குடியிருந்தால் அவ்வளவு சிறப்பான பலன்களை உண்டாகாது.

இதையும் படிக்கலாமே:
வாஸ்து படி பூஜையறை, பணப்பெட்டி அறை எங்கு இருக்க வேண்டும் தெரியுமா

இது போன்று மேலு பல வாஸ்து சாஸ்திரம் குறிப்புக்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vastu for north facing house in Tamil. It is also called as north facing house vastu tips in Tamil. vadakku partha veedu vastu in Tamil or vadakku partha veedu vasthu.