இன்றைய சூழ்நிலையில் வரக்கூடிய வருமானத்தை எதற்கு செலவு செய்கிறோமோ இல்லையோ உடல் சமந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு அதிகம் செலவு செய்கிறோம். காரணமே இல்லாமல் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு அதற்காக மருத்துவ செலவு என்ற பெயரில் மாதா மாதம் தேவையில்லாத செலவுகள் என்பது ஏற்பட்டு கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் அந்த நோயின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கும் அந்த நோய் ஏற்பட எதிர்மறை ஆற்றல்கள் காரணமாக இருக்கும் பட்சத்தில் அந்த எதிர்மறை ஆற்றல்களை நீக்கவும் ஆஞ்சநேயரை எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தீராத பல வகையான கஷ்டங்களுக்கு தீர்வு தரக்கூடிய சக்தி ஆஞ்சநேயருக்கு உண்டு. அனுமனை நாம் வழிபட்டால் அவரை போல நாமும் பலசாலியாக மாறலாம். அனுமனை வழிபடுவதற்கு பல வழிகள் இருக்கின்றன ஒவ்வொரு வழிமுறைக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் நம்முடைய நோய்கள் நீங்கவும் எதிர்மறை ஆற்றல்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் விலகவும் ஏற்ற வேண்டிய ஒரு தீப வழிபாட்டை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
ஹனுமன் இருக்கக்கூடிய கோவிலாக பார்த்து ஒரு வெள்ளிக்கிழமையில் இந்த பரிகாரத்தை தொடங்க வேண்டும். அதிலும் மூலவர் ஆஞ்சநேயராக இருந்தால் இன்னும் அதிக பலன் தரும். இந்த பரிகாரத்திற்கு நமக்கு கடுகு எண்ணெய், பஞ்சுதிரி, கற்கண்டு, வெற்றிலை கட்டாயம் தேவை. அனுமன் கோவிலுக்கு சென்று ஒரு வெற்றிலையை வைத்து அதன் மேலே மண் அகல் விளக்கை வைத்து கடுகு எண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு அந்த வெற்றிலையில் நெய்வேத்தியமாக இரண்டு கற்கண்டை வைக்க வேண்டும்.
ஆஞ்சநேயர் சன்னதி முன்பாக அமர்ந்து உங்களுக்கு அல்லது உங்கள் வீட்டில் இருப்பவருக்கு இருக்கக்கூடிய அந்த தீராத வியாதி தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிறகு அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். காலை அல்லது மாலை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த விளக்கை ஏற்றலாம். ஆனால் முதல் நாள் எந்த நேரத்தில் இந்த விளக்கை ஏற்றினீர்களோ அதே நேரத்தில் 48 நாட்களும் தொடர்ந்து இந்த விளக்கை ஏற்ற வேண்டும்.
முதல் நாள் காலை ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று இந்த விளக்கை ஏற்றிவிட்டால் 48 நாட்களும் காலையில் தான் விளக்கேற்ற வேண்டும். மாலையில் இந்த பரிகாரத்தை நீங்கள் தொடங்கினால் 48 நாட்களும் மாலையில் தான் இந்த விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். கற்கண்டுக்கு பதில் சர்க்கரை, வெல்லம் எது வேண்டுமானாலும் நெய்வேத்தியமாக வைக்கலாம்.
இந்த பரிகாரத்தை செய்யும் போதே உங்கள் குடும்பத்தில் இருக்கும் ஆரோக்கிய பிரச்சனை படிப்படியாக குறைய தொடங்கி விடும். நோய்வாய் பட்டவர்கள் கையால்தான் இந்த விளக்கை ஏற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அவர்களால் முடியவில்லை என்றால் அவருக்கு பதில் அவர்களின் ரத்த சொந்தம் கொண்ட உறவினர்கள் இந்த விளக்கேற்றலாம்.
அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. கணவனுக்காக மனைவி, மனைவிக்காக கணவன் என்று இந்த விளக்கை ஏற்றலாம். நம்பிக்கையோடு 48 நாள் விளக்கு ஏற்றியும் வீட்டில் தொடர்ந்து மருத்துவ செலவு ஆகிறது என்றால் மீண்டும் தொடர்ந்து இந்த கடுகு எண்ணெயில் ஹனுமனுக்கு விளக்கு போடலாம். தவறு கிடையாது.
இதையும் படிக்கலாமே பணக்கஷ்டம் தீர செய்ய வேண்டிய பிள்ளையார் பரிகாரம்
விடாமல் ஹனுமனின் பாதங்களில் நம்பிக்கையோடு பற்றி கொள்ளுங்கள். இந்த விளக்கை ஏற்றி வாருங்கள். படிப்படியாக உங்கள் குடும்பத்தில் மருத்துவ செலவு குறையும். ஆரோக்கியம் பெருகும்.