- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணக்கஷ்டம் தீர செய்ய வேண்டிய பிள்ளையார் பரிகாரம்

பணக்கஷ்டம் தீர செய்ய வேண்டிய பிள்ளையார் பரிகாரம்

- Advertisement -

இன்றைய தினம் மஹா சங்கடஹர சதுர்த்தி அல்லவா. இன்று விநாயகரை நினைத்து செய்ய வேண்டிய, பணத்தை வர வைக்கக்கூடிய ஒரு எளிமையான தாந்திரீக பரிகாரத்தையும், ஒரு எளிமையான விநாயகர் மந்திரத்தையும் தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். முழுக்க முழுக்க இது பிள்ளையாருக்கு உகந்த ஒரே ஒரு பொருளை வைத்து செய்யக்கூடிய பரிகாரம். நம்பிக்கை உள்ளவர்கள் இதை செய்து பாருங்கள்.

எவ்வளவு பெரிய பண கஷ்டமாக இருந்தாலும் அது தீரும். எவ்வளவு பணம் உங்களுக்கு தேவையோ அவ்வளவு பணமும் கொஞ்சம் கொஞ்சமாக உங்களை நோக்கி வர தொடங்கும். பரிகாரத்தை செய்துவிட்டு உங்களுடைய கடமைகளை சரியாக செய்து, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தோடு முயற்சிகளை மேற்கொண்டால், அந்த முயற்சிகளில் நிச்சயம் தோல்வி இருக்காது. சரி, இன்று செய்ய வேண்டிய அந்த பரிகாரம் என்ன. பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

இதற்கு நீங்கள் முதலில் வாங்க வேண்டிய பொருள் சிவப்பு குன்றின் மணி. இந்த குன்றின் மணிக்கு ரொம்ப ரொம்ப சக்தி அதிகம். பிள்ளையார் சிலை செய்யும்போது இதை தான் பிள்ளையாருக்கு கண்களாக வைப்பார்கள். இதை நாட்டு மருந்து கடைகளில் இருந்து கொஞ்சம் வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி அளவு உங்களுக்கு இருந்தால் போதும். 10 ரூபாய் கொடுத்து வாங்கினாலும் பரிகாரத்திற்கு போதுமானதாக இருக்கும்.

இன்று இரவு இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பு, இன்று மாலை நீங்கள் விநாயகரை வழிபாடு செய்திருக்க வேண்டும். இன்று மகா சங்கட சதுர்த்தி. வீட்டு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்று விநாயகரை வழிபாடு செய்யலாம். வீட்டிலேயே விநாயகருக்கு அருகம்புல் போட்டு பால் பழம் வைத்து வழிபாடு செய்யலாம். அது உங்களுடைய விருப்பம். வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இரவு தூங்க செல்வதற்கு முன்பு உங்களுடைய உள்ளங்கைகளில் ஒரு கைப்பிடி அளவு சிகப்பு குன்றின் மணியை எடுத்துக்கொண்டு, ‘பிள்ளையாரப்பா வாழ்க்கையில் எனக்கு இதுநாள் வரை பட்ட கஷ்டங்கள் எல்லாம் போதும். இனிமேலாவது கடன் இருக்கக் கூடாது, செல்வ வளத்தில் நான் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும், முயற்சிகளில் தடைகள் வரக்கூடாது. எடுத்த காரியம் எல்லாம் வெற்றி அடைய வேண்டும்’ என்று சொல்லிவிட்டு பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள். (இதெல்லாம் தவிர வாழ்க்கையில் அவரவருக்கு சில பல பிரச்சனைகள் இருக்கும். அந்த பிரச்சனைகள் சரியாகவும் வேண்டுதல் வைக்கலாம்.)

செல்வம் தரும் விநாயகர் மந்திரம்

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம்
ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹ்ரீம்.

- Advertisement -

மந்திரத்தை சொல்லிவிட்டு கையில் இருக்கும் குன்றின்மணிகளை, ஒரு வெள்ளை காகிதத்தில் வைத்து மடித்து தலையணைக்கு அடியில் வைத்து தூங்கவும். அவ்வளவுதான். மறுநாள் காலை எழுந்து இந்த குன்றின்மணிகளை எடுத்து லேசாக மண்ணைத் தோண்டி அதன் உள்ளே கொட்டி புதைத்து விடுங்கள்.

கால் படாத இடத்தில் உங்கள் வீட்டு பக்கத்திலேயே மண் பாங்கான இடம் இருந்தால் புதைக்கலாம். அல்லது வீட்டுக்கு ஒதுக்கப்புறமான ஒரு இடத்தில் கொண்டு போய் புதைத்து விடுங்கள். பிறகு வந்து குளித்து முடித்து உங்களுடைய வேலையை செய்யுங்கள். பரிகாரம் இவ்வளவுதான். இன்று இரவு இந்த ஆன்மீகம் சொல்லும் தாந்திரீக பரிகாரத்தை செய்தால் நிச்சயம் உங்கள் கடன் சுமை எல்லாம் குறைந்து செல்வ வளம் அதிகரிப்பதை கண்கூடாக பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே: வெள்ளிக்கிழமை இரவு செய்ய வேண்டிய மகாலட்சுமி வழிபாடு

அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இந்த குன்றின்மணிக்கு மிக மிக சக்தி இருக்கிறது. இதை குழந்தைகள் கையில் கொடுக்கக் கூடாது. நீங்களும் வெள்ளை பேப்பரில் வைத்து மடித்துவிட்டு, கையை கழுவிக்கொண்டு உறங்க செல்லவும். குழந்தைகள் இருக்கும் வீட்டில் இந்த பரிகாரத்தை செய்யும் போது கூடுதல் கவனம் இருக்கட்டும். இன்றைய நாள் அனைவருக்கும் விநாயகரின் பரிபூரண ஆசி கிடைக்க பிரார்த்தனை செய்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்