- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilகடுகளவு கூட உங்களுடைய கை கால்களில் கறுப்பு நிறம் தெரியாமல் இருக்க கடுகெண்ணெய் போதும். ஹீரோயின்...

கடுகளவு கூட உங்களுடைய கை கால்களில் கறுப்பு நிறம் தெரியாமல் இருக்க கடுகெண்ணெய் போதும். ஹீரோயின் போல சும்மா பளபளன்னு மின்னுவீங்க.

- Advertisement -

ஹீரோயின் கூட கை கால் முகத்திற்கு மேக்கப் போட்டால் தான் அழகு. ஆனால் நாம் மேக்கப் போடாமலேயே அழகாக இருக்க வீட்டிலிருந்தபடியே என்ன செய்வது என்பதைப்பற்றிய ஒரு சின்ன ரெமிடி உங்களுக்காக. சில பேர் முகத்தோடு சேர்த்து கை கால்கள் அழகாக இருக்க வேண்டுமென்றால் மெனிக்யூர் பெடிக்யூர் செய்து கொள்வார்கள். ஆனால் பார்லருக்கு சென்று எல்லோராலும் ஆயிரமாயிரமாக காசை கொட்டிக் கொடுக்க முடியாது அல்லவா? காசு இருப்பவர்களுக்கு மட்டும் தான் அழகு சொந்தம் கிடையாது. காசு இல்லாதவர்கள் இப்படிப்பட்ட டிப்ஸையெலாம் பின்பற்றி வந்தால் கூட அழகாக மாறலாம்.நிறைய செலவு செய்ய முடியாது. ஆனால் எனக்கு அழகாக இருக்க ஆசை என்பவர்கள் இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க.

ஒரு சிறிய பௌலில் அலோ வேரா ஜெல் – 1 ஸ்பூன், கடுகு எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், லெமன் ஜூஸ் – 1/2 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் போட்டு நன்றாக கலக்கவேண்டும். ஜெல்லி போல ஒரு கிரீம் நமக்கு கிடைத்திருக்கும். இதைத் தான் நம்முடைய உடம்பில் பாடிலோஷன் ஆக அப்ளை செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

சில பேருக்கு கை கால்கள் வறட்சியாக இருக்கும். முட்டியில் கருப்பு கருப்பாக இருக்கும். கை விரல்கள் கருப்பாக இருக்கும். காலில் செருப்பு போட்ட இடத்தில் தழும்பு பதிந்து, முட்டி எல்லாம் கருப்பாக பார்ப்பதற்கு அழகாக இருக்காது. சில பேர் முக அழகிற்கு இணையாக கை கால்கள் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள் அல்லவா. அவர்களுக்கு இந்த லோஷன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தயார் செய்த இந்த லோஷனை அப்படியே வெளியில் வைத்துக் கொண்டாலே 4 லிருந்து 5 நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். பிரிட்ஜில் வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நீங்கள் குளித்து முடித்த பின்பு இந்த லோஷனை லேசாக கை கால் முழுவதும் அப்ளை செய்து விட்டு அப்படியே தடவி விடுங்கள். லோஷனை தடவி விட்ட பின்பு, லோஷன் போட்டது போலவே வெளியில் தெரியாது. அப்படியே மினுமினுப்பாக தான் நம்முடைய சருமம் இருக்கும்.

- Advertisement -

தினமும் குளித்து முடித்துவிட்டு உங்களுடைய கை கால்களில் இதை அப்ளை செய்து கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் வெளியில் செல்பவர்களாக இருந்தால், அலுவலகம் செல்பவர்களாக இருந்தால், இரவு வீட்டிற்கு வந்ததும் கை கால்களை சுத்தமாக கழுவிவிட்டு இந்த கிரீமை கை கால் முழுவதும் தடவி விட்டு அப்படியே தூங்கச் செல்லலாம். மறுநாள் காலை குளித்து விட்டு வேலைக்கு செல்லலாம். ஒன்றும் பிரச்சனை இல்லை.

ஆனால் இந்த லோஷனை கட்டாயமாக முகத்திற்கு பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால் இதில் கடுகு எண்ணெய் சேர்த்திருப்பதால் முகம் எண்ணெய் வழிய தொடங்கிவிடும். கை கால் உடம்பில் மற்ற பாகங்களுக்கு எல்லாம் எந்த இடத்தில் வேண்டுமோ அந்த இடத்தில் இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தொடர்ந்து இந்த லோஷனை பயன்படுத்தி வர உங்களுடைய கை கால்களில் இருக்கும் கருப்பு நிறம் சுருக்கம் மறைந்து இளமையாகவே இருப்பீர்கள். ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்