வயதானவர்களுக்கு கூட தங்களுடைய முகத்தை இளமையாகவும் பொலிவுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். என்னதான் ஆசைப்பட்டாலும் வயதின் காரணமாகவும், வெளிப்புற சுற்றுச் சூழலின் காரணமாகவும் முகத்தில் இருக்கக்கூடிய பொலிவை இழந்து சுருக்கங்களுடன் திகழ்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக திகழக்கூடிய ஒரு பொடியை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
முகத்தில் இருக்கக்கூடிய இயற்கையான பொலிவு நீங்குவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அவற்றில் மிகவும் முக்கியமான ஒரு காரணமாக திகழ்வதுதான் சுற்றுச்சூழல் மற்றும் சூரிய ஒளிகதிர்கள். இந்த சூரிய ஒளி கதிர்களாலும் சுற்றுப்புற மாசுபாட்டினாலும் நம்முடைய முகத்தில் ஒருவித கருமை தோன்றிவிடும். இதோடு மட்டுமல்லாமல் சரியான உறக்கமின்மையாலும் அதிகப்படியான நீரை பருகாமல் இருப்பதாலும் முகத்தில் இருக்கக்கூடிய பொலிவை இழக்க நேரிடும். மேலும் வயதான தோற்றத்தையும் வெளிப்படுத்தும். இவற்றை நீக்குவதற்குரிய ஒரு பேஸ் பேக்கை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
இந்த ஃபேஸ் பேக்கிற்கு நமக்கு உதவி புரிவது கடுக்காய். கடுக்காயை நாம் நம்முடைய தலைமுடிக்கு பயன்படுத்துவது போலும் நம் உடலுக்கு உள்ளுக்குள் எடுத்துக் கொள்வது போலவே முகத்திற்கும் நாம் பயன்படுத்தும் பொழுது பல நன்மைகளை அது நமக்கு தருகிறது. கடுக்காயை நாம் நம்முடைய முகத்தில் பயன்படுத்துவதன் மூலம் இழந்த பொலிவை நம்மால் திரும்பப் பெற முடியும்.முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கத்தை நீக்கி இளமையான தோற்றத்தையும் தரும். கண்களை சுற்றி இருக்கக்கூடிய கருவளையமும் ஒரு சிலருக்கு வாயை சுற்றி இருக்கக்கூடிய கருமையும் நீக்குவதற்கு கடுக்காய் பொடி பெரிதும் உதவி புரிகிறது.
ஒரு மிக்ஸிங் பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மூன்று ஸ்பூன் அளவிற்கு கடுக்காய் பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் இரண்டு விட்டமின் இ கேப்சூல் ஆயிலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அரை ஸ்பூன் அளவிற்கு தேனையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு இதை ஃபேஸ் பேக் போடுவதற்கு ஏற்றவாறு தேவையான அளவு பன்னீரையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஃபேஸ் பேக் தயாராகிவிட்டது. இந்த பேஸ் பேக்கை அப்படியே நம்முடைய முகத்திலும் கழுத்திலும் கீழே இருந்து மேல் தடவுவது போல் தடவ வேண்டும். எந்தெந்த இடத்தில் கருமைகள் இருக்கிறதோ அந்த இடத்தில் மட்டும் இரண்டு முறை தடவ வேண்டும். அதாவது சற்று கனமாக தடவ வேண்டும். இப்படி தடவி விட்டு 20 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.
பிறகு சிறிது தண்ணீரை கைகளில் நனைத்துக்கொண்டு நன்றாக உலர்ந்த இந்த ஃபேஸ் பேக்கை மசாஜ் செய்வது போல் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய கருமைகள் அனைத்தும் நீங்குவதோடு மட்டுமல்லாமல் சுருக்கங்களும் நீங்கி இளமையான பொலிவான முகத்தை பெற முடியும்.
இதையும் படிக்கலாமே: நரை முடியை கருமையாக்கும் இயற்கை ஹேர் டை
கடுக்காயில் இருக்கக்கூடிய பல அற்புதமான மருத்துவ குணங்களை நாம் முறையாக பயன்படுத்தும் பொழுது என்றுமே நம்மால் இளமையாக இருக்க முடியும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.