கடகடவென கட்டுக்கடங்காத கருப்பான முடி வளர்ச்சிக்கு 1 ஸ்பூன் கடுக்காய் பொடி போதும். வயதானாலும் முடி தலையில் இருந்து உதிர வாய்ப்பே இருக்காது.

hair7
- Advertisement -

நிறைய பேருக்கு இன்றைய சூழ்நிலையில் முடி உதிர்வு என்பது அதிகமாகத்தான் இருக்கின்றது. முடி உதிர்வை கட்டுப்படுத்தவும் இளநரையை தடுக்கவும் வேரிலிருந்தே முடியை அடர்த்தியாக வளரச்செய்யும் ஒரு சூப்பரான ஹேர் பேக்கை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முடியை வளரச் செய்ய உதவி செய்யும் ஒரு சில பொருட்களை இந்த கடுக்காய் பொடியோடு சேர்த்து அந்த ஸ்பெஷல் ஹேர் பேக்கை எப்படி தயார் செய்வது. வாங்க பார்க்கலாம்.

ஒரு சிறிய பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நெல்லிக்காய்பொடி – 1 டேபிள்ஸ்பூன், கடுக்காய் பொடி – 1 டேபிள்ஸ்பூன், அலோ வேரா ஜெல் – 2 டேபிள்ஸ்பூன், தயிர் – தேவையான அளவு, ஊற்றி இதை நன்றாக கலந்து ஜெல் போல தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் அலோ வேரா ஜெல்லை கூட இன்னும் கொஞ்சம் அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்.

- Advertisement -

அவ்வளவு தாங்க. நமக்கு தேவையான பேக் தயாராகிவிட்டது. உங்களுடைய தலையில் ஹேர் பேக்கை அப்ளை செய்வதற்கு முன்பு நன்றாக தேங்காய் எண்ணெய் வைத்து மசாஜ் செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு 10 நிமிடங்கள் கழித்து இந்த ஹேர் பேக்கை தலையில் ஸ்கால்ப்பில் நன்றாக படும்படி தடவ வேண்டும். உங்களுடைய வேர்க்கால்கள் வலு பெற்றால் தான் முடி உதிர்வு இல்லாமல் இருக்கும். முடியை சின்ன சின்ன பாகங்களாக பிரித்து மண்டை ஓட்டில், முடியின் வேரில் படும்படி இந்த பேக்கை நன்றாக அப்ளை செய்து வைத்துக்கொள்ளுங்கள். முடி கீழ்பாகத்தில் எல்லாம் இந்த பேக்கை அப்ளை செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

ஆனால் முடியை கவிழ்த்து போட்டு முடியின் அடிப்பக்கத்தில், அதாவது நம்முடைய கழுத்துக்கு பின்பக்கம் இருக்கக்கூடிய முடியில் நன்றாக இந்த பேக்கை போட்டு மசாஜ் செய்ய வேண்டும். நிறைய பேருக்கு பின்னலை இறுக்கிப் போடுவாங்க இல்லையா, அந்த இடத்தில் நிறைய பொடுகு, பேன் சேர்ந்து இருக்கும். அந்த இடத்தில் இந்த பேக்கை அப்ளை செய்யும்போது பேன் பொடுகு பிரச்சனை முழுமையாக நீங்கி விடும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

இந்த பேக்கை வாரத்தில் ஒரு நாள் பயன்படுத்தினால் கூட போதும். மாதத்தில் நான்கு நாட்கள் இந்த பேக்கை போட்டு விர உங்களுடைய தலை முடியில் நல்ல வித்தியாசம் தெரியும். இந்த பேக்கை தலையில் 20 நிமிடத்தில் இருந்து 30 நிமிடம் வரை அப்படியே ஊறவிட வேண்டும்.

அதன் பின்பு ஷாம்பூ அல்லது சீயக்காய் போட்டு தலைக்கு குளித்து விடுங்கள். இதில் நாம் எல்லாவற்றையும் பொடியாக சேர்த்திருப்பதால் தலையை அலசும்போது கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்து நன்றாக உதறி அலசவேண்டும். தலையில் போட்ட பேக்கை சரியாக அலச வில்லை என்றாலும் பொடுகு வரும் என்பது குறிப்பிடதக்கது. உங்களுக்கு இந்த ஹேர் பேக் பிடிச்சிருக்கா. உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -