நம்முடைய கர்ம கடன் முதலில் கரைய வேண்டும். அப்போதுதான் கைநீட்டி வாங்கிய கடன் சுமையிலிருந்து வெளிவந்து பொருளாதார ரீதியாக நம்மால் முன்னேற முடியும். பாற்கடலை கடைந்த போது முதலில் கடுமையான விஷம் தான் வெளிவந்தது, பிறகு தான் அமிர்தம் கிடைத்தது. அது போல தான் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி வருவதற்கு முன்பு, இன்பம் வருவதற்கு முன்பு, துன்பமானது வெளிப்படும்.
பாற்கடலை கடைந்த போது விஷம் வந்தபோது அதை சிவபெருமான் ஏற்றுக் கொண்டார். அதேபோலத்தான் மனிதர்களுடைய வாழ்க்கையில் முதலில் வரக்கூடிய துன்பங்களை எல்லாம் அந்த சிவபெருமான் ஏற்றுக்கொள்வார். எப்போது தெரியுமா. பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை வழிபாடு செய்யும்போது, நம்முடைய தோஷங்களை எல்லாம் சிவபெருமான் ஏற்றுக் கொள்வதன் மூலமாகத்தான், அவருக்கு ஏற்பட்ட தோஷங்களை, அபிஷேகம் செய்து நீக்குவதாக ஒரு சில சாஸ்திரங்கள் சொல்லுகிறது.
ஒரு சில ஜோதிடர்களும் ஞானிகளும் இதையேதான் சொல்லுகிறார்கள். முதலில் உங்களுடைய கர்ம கடன் கழிய வேண்டும் என்றால், பிரதோஷ நேரத்தில் நீங்கள் சிவபெருமானை சென்று வழிபாடு செய்ய வேண்டும். நந்தி தேவரையும் வழிபாடு செய்ய வேண்டும். இது முதல் விஷயம்.
கடன் தீர சனி மகா பிரதோஷ பரிகாரம்
வாய்ப்பு உள்ளவர்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு செல்லுங்கள். நந்திக்கும் சிவபெருமானுக்கும் நடக்கும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்ளுங்கள். உங்களால் முடிந்த அபிஷேக பொருட்களை வாங்கி கொடுத்து நிறைவாக வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு என்ன செய்வது. இந்த பிரதோஷ நேரத்தில் அந்த வழிபாட்டை முடித்துவிட்டு, நீங்கள் யாருக்கு கடனை திருப்பிக் கொடுக்க வேண்டுமோ, அந்த நபருக்கு கடனை கொடுக்க வேண்டும்.
மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை பிரதோஷ நேரம் ஆனது நமக்கு சொல்லப்பட்டுள்ளது. 4:30 மணியிலிருந்து 5:15 மணி வரை கோவிலில் உங்களுடைய நேரத்தை செலவு செய்தாலும், 5 மணியிலிருந்து 6 மணிக்குள் நீங்கள் யாருக்கேனும் கடன் கொடுப்பதாக இருந்தால், அதிலிருந்து ஒரு சிறு தொகையை கொடுத்தால் போதும்.
உங்களுடைய கடன் சுமையானது அடுத்த பிரதோஷ நாள் வருவதற்குள் கூடிய சீக்கிரம் குறையும் என்பதும் நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. சிவபெருமானை வழிபாடு செய்துவிட்டு உங்கள் கடன் தொகையை திருப்பிக் கொடுங்கள். கோவிலில் இருந்த இடத்திலிருந்து இப்போதெல்லாம் கையில் இருக்கும் மொபைலில் இருந்து ஜி பே, போன் பே கூட பண்ணலாம். வங்கி கணக்கில் பணத்தை செலுத்தலாம். இப்படி உங்களால் முடிந்தவரை இந்த சனி மகா பிரதோஷ நேரத்தில் கடனை திருப்பி அடைக்கும்போது உங்களுடைய கடன் கஷ்டம் முழுமையாக நீங்கும் என்பது நம்பிக்கை.
இதையும் படிக்கலாமே: உங்கள் ராசி படி சிவனுக்கு சமர்ப்பிக்க வேண்டிய அபிஷேக பொருட்கள்.
கைமாத்தாக வீட்டு பக்கத்தில் அல்லது ஏதாவது நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி இருந்தால் அந்த இடத்திற்கு சென்று உங்கள் கையில் இருந்து கூட நீங்கள் பணத்தை செலுத்தலாம் தவறு கிடையாது. இன்று சனி மகா பிரதோஷம். வாய்ப்பு உள்ளவர்கள் இந்த பதிவை படித்தவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நல்ல பலனை அடையலாம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.